முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அசுரன் - “வெக்கையில்” இருந்து “காட்பாதர்”, “பாட்ஷா” மற்றும் ஸ்பேகெட்டி வெஸ்டெர்னுக்கு (3)


வெக்கைநாவலில் வடக்கூரான் நேரடியான சித்தரிப்பில் தோன்றுவதில்லை. அவன் முழுக்க முழுக்க சிதம்பரத்தின் கற்பனையில் மீள மீள வருகிறான் - துண்டுத்துண்டான சித்திரங்களாக. அதுவும் சிதம்பரம் வடக்கூரானின் உடலைப் பற்றியே அதிகமும் யோசிக்கிறான். அவனை வெட்டும் போது அருவாள் அவனது உடம்பில் ஆழமாக பதிகிறது; இழுத்து வெளியே எடுக்க சிரமப்படுகிறான். வடக்கூரான் உடம்பை அப்படி வளர்த்து வைத்திருக்கிறான் என சிதம்பரம் பின்னர் இதைக்குறித்து யோசிக்கையில் நினைத்துக்கொள்கிறான்
எந்த ஆணும் மற்றொரு ஆணைப் பற்றி இப்படி யோசிக்க மாட்டான் - ஒரு பெண் தனக்கான ஆணைப் பற்றி இப்படி நினைக்கலாம். ஆனால் சிதம்பரம் வடக்கூரானை வெட்டும் போது கத்தி அவர்களின் உடல்களுக்கு இடையில் ஒரு பிணைப்பை உருவாக்குகிறது. கொலை தரும் குற்றவுணர்வை பூமணி பேசுவதே இல்லை. மாறாக கொலையின் ரத்தக்காமத்தை நுட்பமாக சித்தரிக்கிறார்

மற்றொரு இடத்தில் சிதம்பரம் கரும்புக்காட்டில் கரும்புகளை சுவைக்கும் காட்டுப்பன்றியை காணும் போது அதை எப்படி கொல்வது என யோசிக்கிறான். அதை வெட்டினால் பன்றி அருவாளைக் கடிக்கும்;அருவாள் அபோது துண்டுத்துண்டாகி விடுமே. ஒரு ஈட்டி இருந்தால் அதன் மீது பாய்ச்சி சாய்த்து விடலாமே என நினைக்கிறான். (இதை சிவசாமி செய்வது போல வெற்றிமாறன் படத்தின் துவக்கத்தில் ஒரு ஆக்‌ஷன் காட்சியை அமைத்திருக்கிறார்.) ஒளிந்திருக்கும் போது அவன் ஏன் பன்றியை கொல்வதைப் பற்றி யோசிக்க வேண்டும்? அவனுக்கு பயனே இல்லையே.
ஒரே காரணம் தான் - அவன் மனம் வடக்கூரானின் உடம்பில் ஆட்கொண்டிருக்கிறது. அவன் அதைப் பற்றியே திரும்ப திரும்ப யோசிக்கிறான். இந்த பன்றி அவனுக்கு வடக்கூரானை நினைவுபடுத்துகிறது. வடக்கூரானை தான் தாக்கிய முறை தவறோ, வேறு என்னவெல்லாம் செய்திருக்கலாம் என யோசிக்கிறான். இதை நினைக்கும் போதே வடக்கூரானின் பலமும் (அருவாளையே சிதறடிக்கும் கூர்மையான பற்கள்) அவன் சமூகத்தை சீரழிப்பதும் (காட்டிலிருந்து வந்து கரும்புத்தோட்டத்தை அது நாசம் பண்ணுவது, அதுவும் ருசித்து அதை செய்வது, தன்னை யாரும் தடுக்க முடியாது எனும் அதன் ஆங்காரம்) இந்த பன்றியின் காட்சி அவனுக்கு உணர்த்துகிறது. இப்படி அவனால் கடைசி வரை வடக்கூரானை மறக்க முடிவதே இல்லை. அவன் தலைமறைவில் இருக்கையில் அவன் அப்பாவிடமும் வடக்கூரானைப் பற்றி அவனது குற்றங்களை சட்டமும் காவல்துறையும் தட்டிக்கேட்காதது பற்றி, மக்கள் அவனை பொறுத்துப் போவதைப் பற்றி பேசுகிறான். அதாவது கொன்ற பிறகும் அவனது கோபம் குறைவதில்லை, ஏனென்றால் வடக்கூரான் என்பது ஒரு உடல் அல்ல. அது கொல்லக்கொல்ல திரும்ப வரும் ஒரு காட்டுப்பன்றி. அது உடம்பில் இருந்து உடம்புக்குப் பாயும் ஒரு முடிவுறாத அகவெறுப்பின் நதி

நாவலில் வடக்கூரானை சிதம்பரம் நேரில் சந்தித்து உரையாடுவதோ அவனை அணுக்கமாய் அறிவதோ இல்லை என்பதும் முக்கியம். அவனது ஆங்காரம் முழுக்க வடக்கூரான் குறித்த நினைவுகளிலே இருக்கிறது. வாசகர்களுக்கு எப்படி வடக்கூரான் ஒரு பனிமூட்டமோ சிதம்பரத்துக்கும் அப்படியே. அவனை வெட்டும் போதும் கூட அவனது உடம்பை அவன் முழுக்க பார்ப்பதில்லை. அருவாள் ஆழமாய் பதியும் அந்த தசைத்தொகுதியாக மட்டுமே சிதம்பரத்தின் நினைவுகளில் வடக்கூரான் எஞ்சுகிறான். ஆகையால் தன் பழிவெறியை, கோபத்தை உறுதிப்படுத்த சிதம்பரம் தன் நினைவுகளில் மீள மீள வடக்கூரானை உருவாக்குகிறான். அவன் கலைந்து போய் விடக்கூடாதே எனும் பதற்றம் அவனுக்குள் இருக்கிறது. வன்மம் என்பது அள்ள அள்ள கைக்குவளையில் நிற்காத நீர் என பூமணி நமக்கு உணர்த்துகிறார். வன்மத்தை நம்மால் பார்க்கவோ கையில் எடுக்கவோ முடியாது, அதை அறியும் மனித மனம் எப்படியெல்லாம் பதறுகிறது, போராடுகிறது என்பதே இந்நாவலின் மையக்கரு. இதற்காகவே பூமணி நாவலின் கதையாடல் முழுக்க அண்ணனின் கொலை, வடக்கூரானின் கொலை ஆகியவற்றை பூடகமாக, முழுமையற்றதாக, தேசலாக சித்தரிக்கிறார்
  

 அதனால் தான்வெக்கைவேறெந்த தமிழ் நாவலில் இருந்தும் தனித்து தெரிகிறது.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...