முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கியானேஷ் குமார் தலையின் மேல் நெருப்புப் புகை வளையங்கள்

 Opposition parties sought the removal of Chief Election Commissioner (CEC) Gyanesh  Kumar after an Indian Express 'expose' claimed that two of the three  Election Commissioners, Sukhbir Singh Sandhu and Vivek Joshi, formally

தேர்தல் தலைமை ஆணையர் கியானேஷ் குமாருக்கு எதிராக பிற இரு ஆணையர்களான சுக்பீர் சிங் சந்துவும் விவேக் ஜோஷியும் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் சர்ச்சையை விளைவித்துள்ளன. இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் இதைக் குறித்து ஒரு கட்டுரை வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த மே. வங்க சட்டமன்றத் தேர்தலில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் வழியாக 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டிருந்தனர். தேர்தல் முடிந்த பின்னர் அவர்களுடைய நீக்கம் பிழையானது எனத் தெரிய வந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதுவே சர்ச்சையின் துவக்கம். யாருக்காக எதற்காக அவர்கள் வாக்களிக்க ஆணையம் அனுமதிக்கவில்லை? இதே போல நாடு முழுக்க பல மாநிலங்களில் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் கொளத்தூர் தொகுதில் செய்யப்பட்ட வாக்காளர் நீக்கங்கள் குறிப்பாக விவாதத்துக்குள்ளாகின - ஏனென்றால் திமுக தலைவர் ஸ்டாலினே அதில் தோற்கடிக்கப்பட்டார். இந்த நிலையில் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கான முடிவை ஆணையர்கள் விவாதித்து ஒருமித்து எடுக்கவில்லை எனும் பேச்சு உலவிக் கொண்டிருந்தது. அதாவது ஒரு வதந்தியாக. இப்போது இரு ஆணையர்களும் தமது ஒப்புதல் இன்றி கியானேஷ் குமார் தன்னிச்சையாக இம்முடிவை எடுத்தார், தாம் இதை எதிர்த்து 14 முறைகள் கடிதங்கள் எழுதியதாகத் தெரிவித்துள்ளனர். தலைமை ஆணையருக்கு எதிராக வழக்கறிஞர்கள் முன்னெடுத்த போராட்டமும் இச்சூழலில் சூடுபிடித்தது. இப்போது ஊடகங்களில் இது பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஏனென்றால் காங்கிரஸ் இதைக் குறித்து கடும் விமர்சனங்களை வைத்து வருகிறது. வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு வலுவாகிறது. கரப்பான் கட்சியினரும் அடுத்த போராட்டத்தை கியானேஷ் குமாருக்கு எதிராக நடத்தக் கூடும் என்கிறார்கள். காங்கிரஸ் ஏற்கனவே போராட்டங்களை ஆரம்பித்துவிட்டது.


அதேநேரம், இந்த தற்செயல்களின் ஒருங்கிணைப்பு எனக்குள் சில ஐயங்களை ஏற்படுத்துகிறது:

கடந்த முறை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசும்போது கரப்பான் பூச்சிப் போராட்டங்களை கணிப்பதைப் போலப் பேசினார். அது மட்டுமல்ல இவ்வருடன் இறுதியில் வேறு சில போராட்டங்களும் நடக்க இருக்கின்றன என்றார். யோகேந்திர யாதவும் தன் யுடியூப் பேச்சில் இதைத் துல்லியமாகக் கணித்தார் ("தேர்தல் முறைகேடுகள் அதிகரிக்கும்போது மக்கள் போராட்டங்கள் வழியாக மட்டுமே ஒரு எதேச்சதிகாரியை அகற்ற முடியும்!") அதெப்படி இவர்களுக்குச் சரியாகத் தெரியும்?

மோடி-ஷாவை எதிர்ப்பது சுலபமல்ல. ஒட்டுமொத்த கார்ப்பரேட்டுகளையும் ஊடகங்களையும் அவர்கள் தம் பாக்கெட்டில் வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் கடந்த கரப்பான் போராட்டத்தில் அந்த கதையாடல் நொறுங்கிப் போனது. இருவரும் அவ்வளவு பரிதாபமாகத் தோன்றினார்கள். எனில் அவர்களை ஆதரித்து வந்த முதலாளித்துவ சக்திகள் பின்வாங்கி விட்டனரா? காங்கிரஸுக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கும் வேறு சில ஊடக நிறுவனங்களுக்கும் துணிந்து களமிறங்கும் சூழல் உருவாகி விட்டதா? இதைச் சாத்தியமாக்கும் சந்தர்பங்கள், சமூகப் பொருளாதார காரணிகள் என்ன?

மக்களிடையே இன்னும் கோபம் மீதமிருப்பது உண்மைதான். ஆனால் இது நிச்சயமாக காங்கிரஸ், ஆம் ஆத்மி, கரப்பான்களின் முடிவு மட்டுமல்ல. இக்கோபத்தைப் பயன்படுத்தும் முடிவை அரசியல் பொருளாதார ஆதிக்க வர்க்கம் ஏனோ எடுத்திருக்கிறது. அவர்கள் மோடி-ஷா மீது நம்பிக்கை இழந்து விட்டார்களா? தம் நலன்களுக்கு வேலைக்கு ஆக மாட்டார்கள் என நினைக்கிறார்களா? ஏன் பாஜக, இந்துத்துவ ஆதரவாளர்களும் தலைவர்களும் இம்மாதிரி நிகழ்வுகளின்போது தீவிரமாக மோடி-ஷாவை ஆதரிப்பதில்லை? குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் ஏன் முன்னணியில் நின்று இவர்களைப் பாதுகாக்க முயல்வதில்லை? இக்கேள்விகளுக்கு சுலபத்தில் விடையில்லை.

ஒன்று மட்டும் நிச்சயம்: கியானேஷ் குமாரை வீழ்த்தாமல் மோடியைத் தொட முடியாது என்பதில் எல்லா எதிர்த்தரப்பினரும் தெளிவாக உள்ளார்கள். எவ்வளவு எதிர்ப்புகள் திரண்டு வந்தாலும், 60-70% மக்கள் அவரை எதிர்த்தாலும் கூட சிறப்புத் தீவிர திருத்தம் மற்றும் எந்திரங்களை வைத்து மோடியால் அடுத்த தேர்தலிலும் வெல்ல முடியும். அவருக்கு எதிரான விமர்சனங்கள் அதிகமாக ஆக அவர் மோசடிகளை நம்புவதும் அதிகரிக்கிறது (இதையே யோகேந்திர யாதவும் ஒரு பேட்டியில் சொன்னார்).

அடுத்து என்ன நடக்கும்: தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியூறுத்திய போராட்டங்களைப் போல இப்போராட்டங்களும் வலுப்பெற்றால், தலைநகரில் கல்லூரி மாணவர்கள் திரள்வதற்கு மோடி அனுமதித்தால், அல்லது வரையும் மீறி அவை நடந்தால் கியானேஷ் குமார் பதவி விலகுவார். ஆடு சிரமப்பட்டு விட்டையிடுவதைப் போல அவர் வெளியே வந்து விழுவார். ஆனால் அவரைத் தண்டிக்க முடியாது. அதற்கு ஏற்ப சட்டத்தை ஏற்கனவே திருத்திவிட்டார்கள்.
ஆனால் புது ஆணையரின் தேர்வு மட்டுமே தேர்தல்களை நியாயமாக நடக்க உதவாது. மோடியும் ஷாவுமே தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் (குழுவில் தலைமை நீதிபதி இல்லை) எனும் சட்டம் உள்ளவரைக்கும் தேர்தல்களில் மோசடி தொடரும். அதே நேரம் இவ்வளவு அப்பட்டமாக இனி தேர்தல்களைத் திருட முடியாது. அதைத்தான் எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கிறார்கள். ஒரு சின்ன இடைவெளி, ஒரு சின்ன வாய்ப்பு, ஓரளவுக்குச் சமவாய்ப்பு கிடைத்தால் போதும், மோடியை முறியடிக்கலாம் என நினைக்கிறார்கள். வரும் அக்டோபர் சுவாரஸ்யமாக இருக்கும்.

அதேநேரம், இதெல்லாம் நடக்கும்போது நமது பொம்மை முதல்வர் தமிழ்நாட்டில் கமுக்கமாக இருப்பார்; மேலும் எஸ்.எப்.ஐ உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் போராடாமல் பார்த்துக் கொள்வார். காங்கிரஸுடன் மோதல் உள்ளதால் திமுகவும் போராட்டத்தில் பங்கெடுக்காதா அல்லது களமிறங்குமா? என்னிடம் கேட்டால் பாஜக-தவெக கூட்டுச் சதி தேர்தலில் நடந்துள்ளதாகப் பிரச்சாரம் பண்ணி அவர்கள் போராட வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...