தமிழில் எண்பது , தொண்ணூறுகளில் மொழியை ஒரு துப்பாக்கி போல மட்டுமே இலக்கியவாதிகள் பயன்படுத்தினார்கள் . எடுத்தால் போட்டுத் தள்ள வேண்டும் . குறி தவறக் கூடாது . இந்த கச்சிதமே எழுத்தின் இலக்கு எனும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தர ராமசாமி . அவருக்கு நேர் எதிர் சாரியில் வண்ணதாசன் இருந்தார் . ( தொண்ணூறுகளுக்குப் பிறகு உச்சம் பெற்ற படைப்பாளிகளில் ஜெ . மோ , கோணங்கி , எஸ் . ரா என யாருமே துல்லியத்தை முக்கியமாய் நினைக்கவில்லை . அவர்கள் சொற்களை அள்ளி இறைத்தார்கள் .)