முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

திருவள்ளுவர் யார்?

ப்ரியாப்ரீயன் கவரிமா என்பது கவரிமான் அல்ல இமய மலையில் வாழ்ந்த ஒரு சடைசடையாக முடிகொண்ட ஒரு மாடு என எழுதிய பதிவை படித்ததும் எனக்கு ஒரு விசயம் நினைவுக்கு வந்தது : “ மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் ” நான் பள்ளி மாணவனாக இருக்கும் இக்குறளை தமிழாசிரியர் எழுதிப்போட்டு விளக்குகிறார் : கவரிமான் தனது மயிர்களை இழந்துவிட்டாலே தன் அழகு போய் விட்டதே என மனம் உடைந்து செத்துவிடும் , கௌரவம் கொண்ட மாமனிதர்களும் அப்படியே . எனக்கு ஒரு கேள்வி எழுந்தது : மயிர் உதிர்ந்தால் அது திரும்ப முளைத்து விடும் . தற்காலிகமாய் மயிரிழந்ததற்கு ஏன் அக்கவரிமான் சாக வேண்டும் ? அப்படி செத்தால் அது எவ்வளவு முட்டாளாக இருக்க வேண்டும் . கல்லூரியில் இக்குறளை திரும்ப வாசிக்கும் போது மற்றொரு கேள்வி எழுந்தது : மயிர் அனையது மானம் என வள்ளுவர் சொல்கிறாரா ? மயிர் = மானம் ? அப்படித்தானே அவர் உவமையை இணைவைக்கிறார் ?  மயிரை இழந்ததும் அதை மிகையாக கருதி மனம் வருந்தி ஒரு மான் உயிரை விடுகிறது ( அல்லது அப்படி ...

ஒரு ஸூம் உரையாடல் - இலக்கியத்தில் அரசியல் உண்டா?

இன்னும் ஐந்து நிமிடங்களில் ஸூம் லைவ்வில் பேசுமிறேன் - அரசியல் என்றால்? இலக்கியத்தில் அரசியல் பேசலாமா?  இதுதான் இன்றைய பேச்சின் மையம்!

பாஜக தலைமை: நல்ல போலீஸ், கெட்ட போலீஸ்

மோடியை பிடிக்குமோ இல்லையோ , அவரை முழுமூச்சாக வெறுப்பவர்கள் இந்தியாவில் மிகவும் குறைவு . அவர் இந்துத்துவ போஸ்டர்பாய் தான் , சர்வாதிகாரிதான் , ஆனால் ஒரு கனிவான வயோதிக பிம்பம் அதற்கெல்லாம் மேலெழுந்து மறைத்து விடுகிறது . கடந்த ஆறாண்டுகளாக அவர் தன்னை களங்கமற்ற , சூழ்ச்சியற்ற , குழந்தைத்தனமான , தேசபக்தி மிக்க மனிதனாக காட்டி பளபளப்பான பிம்பத்தை கட்டமைத்து வந்துள்ளார் . மற்ற பாஜக தலைவர்களைப் போல அவர் முரட்டுத்தனமாய் பேசுவதோ , வன்மத்தை உடல்மொழியில் காட்டுவதோ இல்லை . சர்ச்சைக்குரிய கருத்துக்களை சரியாக தேர்தல் பிரச்சாரங்களின் போதுதான் சந்திரமுகியாகி சொல்லுவார் . ஆனால் தேர்தல் முடிந்ததும் கங்கா ஆகி விடுவார் . இவரா அப்படி சொன்னாரு என நாம் யோசித்து மறந்து விடுவோம் .   மோடிஜி ஒரு பக்கம் வலுவான , ஆதிக்கவுணர்வு கொண்ட தலைவர் , ஆனால் மற்றொரு பக்கம் அவரது பேச்சிலும் , முகத்தோற்றத்திலும் , சிரிப்பிலும் , தழுதழுக்கும் குரலிலும் ஒரு வெகுளித்தனம் , ஒரு பலவீனம் வெளிப்படுகிறது . இந்த காம்பினேஷன் தான் அவரது பலம் . இது பிற பாஜக தல...

அஜய் ஜடேஜா: தொண்ணூறுகளின் ’கூல்’ ஹீரோ

தொண்ணூறுகளின் மகேந்திர சிங் தோனி தான் அஜய் ஜடேஜா ( திறமையில் சற்று குறைவானவர் என்றாலும் ). எவ்வளவு நெருக்கடி என்றாலும் அசராமல் கூலாக சிக்ஸரும் பவுண்டரிகளும் விளாசக் கூடியவர் . இறுதி பத்து ஸ்லாக் ஓவர்களில் இந்தியாவின் சூப்பர் மேன் . 1996 உலகக்கோப்பையில் அவர் 25 பந்துகளில் அடித்த 45 இன்றும் ரசிகர்களால் சிலாகிக்கப்படும் வரலாற்று தருணம் . சிக்ஸர் விளாசுவதில் சூப்பர் மேன் என்றால் களத்தடுப்பில் அவர் ஸ்பைடர் மேன் . அதே போல் ஜடேஜாவைப் போல எதிரணியின் கள அமைப்பின் வெற்றிடங்களை சாமர்த்தியமாய் பயன்படுத்தி ஒற்றை இரட்டை ஓட்டங்களை எடுப்பவர்களையும் அன்று ( சச்சினைத் தவிர ) பார்க்க முடியாது . சச்சினுக்கு அடுத்தாற் போல் இந்திய அணிக்கு வந்த முதல் நவீன பேட்ஸ்மேன் அஜய் ஜடேஜா .  கிரிக்கெட் பிரபலங்களின் குடும்பம் : ஜடேஜா 1971 இல் ஜூலை 3 ஆம் நாள் குஜராத்தில் ஒரு ராஜ குடும்பத்தில் பிறந்தார் . அவரது அப்பா குஜராத்தி . அம்மா மலையாளி . ஜடேஜாவின் முன்னோர்களான ரஞ்சித் சிங் ஜி மற்றும் துலீப் சிங் ஜி இந்திய கிரிக்கெட்ட...