முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தொடர்பறுவது

அண்மையில் நான் எழுதி முடித்த நாவலான  “நிழல் பொம்மையை” மெய்ப்பு பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதில் கதையமைப்பு, பாத்திர அமைப்பு, வர்ணனை என மாற்றங்களையும் செய்தேன். சில தர்க்கப் பிழைகளை களைந்தேன். ஆரம்பத்தில் வரும் சில பாத்திரங்களை கடைசியிலும் கொண்டு வருவது, ஒரு இயல்பு மாற்றத்தை அவர்களிடம் காட்டுவது, சூழல், சீதோஷ்ண நிலை ஆகியவற்றில் தொடர்ச்சியைக் கொண்டு வருவது ஆகிய வழக்கமான வேலைகளையும் செய்தேன். ஒரு கதையில் எதையும் நிகழ்த்தலாம், ஆனால் அதற்கு ஒரு நியாயத்தை ஆரம்பத்திலேயே கொடுத்துவிட்டால் அதற்கு நம்பகத்தன்மை வந்துவிடும் என்பது என் நம்பிக்கை. இந்த நாவலில் சமூக அளவிலும் அரசியலிலும் உள்ள சர்வாதிகாரத்துக்கும் தனிமனித பிறழ்வுக்கும் உள்ள தொடர்பாக்க கண்ணியைப் பற்றி பேச நினைத்தேன். ஆனால் அதை எப்படி உருவாக்குவது எனும் கேள்வி மெய்ப்பு பார்க்கும் போது எழுந்தது. பின்னர் அதற்காக ஒரு சில காட்சிகளை கூடுதலாக பிற்பகுதியில் சேர்த்தேன். எல்லாவற்றையும் முடித்த பிறகு முந்தின அத்தியாயம் ஒன்றை கடைசி அத்தியாயம் ஆக மாற்றி வைத்தாலே நாவலின் கதையில் ஒரு வளர்ச்சி, மையப்பாத்திரத்தின் வாழ்க்கைப்பாதையில் நிலைமாற்றம் ...

ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து எழுப்பாத கேள்வி

  ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு காரணம் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்குவதா, அவருக்கு நியாயமான முறையில் அடக்கம் பண்ண விடாமல் திமுக பாகுபாடாக நடந்துகொண்டதா, ஆம்ஸ்ட்ராங் உண்மையில் ஒரு போராளியா, அரசியல் தலைவரா அல்லது தாதாவா, இது ஆருத்திரா மோசடிப் பண கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தின் போதான மோதலின் விளைவாக நடந்ததா போன்ற கேள்விகள் திட்டமிட்டு எழுப்பப்படுகின்றன என நினைக்கிறேன். இன்னொரு பக்கம், சூத்திரர்கள் vs தலித்துகள் எனும் முரணும் கூர்தீட்டப்பட்டு மக்களிடம் பிரிவினையை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. இதை வேறெவரையும் விட பாஜக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது - அடுத்தடுத்த தேர்தல்களில் தமிழ்நாட்டில் தலித்துகள் திமுக - அதிமுக என வாக்களிப்பது பாஜகவை மிகவும் சோர்வடைய வைக்கிறது (அண்மையில் நடந்த மக்களைத் தேர்தலிலும் இந்தியாவின் வேறு மாநிலங்களிலும் பழங்குடியினரைத் தவிர தலித்துகள் இவ்வாறே பாஜகவுக்கு எதிராக வாக்களித்தார்கள்.). இந்த களேபரத்தில் நாம் கேட்காத ஒரு முக்கிய கேள்வி உண்டு: இந்த படுகொலை காவல்துறைக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த படுகொலை என்றல்ல எல்லா முக்கிய பிரமுகர்களின் கொலையும் ஏற்...

சிறந்த தேடுபொறி

கூகிளை விட சிறந்த தேடுபொறி சாட்ஜிபிடி தான் எனும் முடிவுக்கு தற்காலிகமாக வந்திருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட / குறிப்பிட்ட வகையான சங்கப் பாடல் வேண்டுமா அப்படியே எடுத்து அளிக்கிறது. கூகிள் தேடுபொறியில் இந்தளவுக்கு துல்லியம் இல்லை. மேற்கோள்கள், சிந்தனையாளர்கள் குறித்த குறிப்பிட்ட விபரங்களையும் உசாத்துணையுடன் அளிக்கிறது. சில நேரங்களில் இணையதளங்களில் கிடைக்காத விபரங்களைக் கூட தன்னுடைய புரிதலைக் கொண்டு துல்லியமாக 'கணித்து' சொல்கிறது. ஒரு பன்மொழி புத்தகத்தை எடிட் பண்ணும் போது மலையாளத்தில் இருந்து ஒரு அத்தியாயம் வந்தது. அதை கிட்டத்தட்ட துல்லியமாக சாட்ஜிபிடி மொழியாக்கித் தந்ததால் என்னால் உடனடியாக படிக்க இயன்றது. அதை ஒரு மொழிபெயர்ப்பாளரிடம் கொடுத்து எந்தளவுக்கு நன்றாக உள்ளது எனக் கேட்டேன். கிட்டத்தட்ட 80% சரியாக வந்துள்ளது என்றார் அந்த மொழிபெயர்ப்பாளர். ஆனால் அதில் ஒரு மானுட மொழிபெயர்ப்பாளர் கொண்டு வரும் ஸ்டைல், சொற்தேர்வு இல்லை. எந்திரத்தனம், தேய்வழக்கு கொஞ்சம் உள்ளது என்றார். போகும் போக்கைப் பார்த்தால் எதிர்காலத்தில் சாட்ஜிபிடி சக-மொழிபெயர்ப்பாளராக மாறிவிடும் போலிருக்கிறது. நம் மொழி தெர...

"ரசிகன்" - பிரவீணாவின் காதல் - பாலு

அபிலாஷ் எழுதிய ‘ரசிகன்’ நாவலின் 3வது பகுதியின் 6ஆம் அத்தியாயத்தை மட்டுமே ஒரு குறும்படமாக எடுக்கலாம். கதாநாயகனான சாதிக்கின் முன்னாள் காதலியான பிரவீணாவின் வீட்டில் கதைசொல்லியான சங்கர் சில நாட்கள் தங்க நேர்கிறது. பிரவீணாவும் சங்கரும் மொட்டை மாடியில் மது அருந்துகின்றனர். மாடிச்சுவரின் விளிம்பில் பிரவீணாவின் பாதி பிருஷ்டம் பாதி பிதுங்கி இருந்தது. அவள் மதுக்கோப்பையைத் தன் தொடைகளுக்கு இடையே வைத்து வெல்லத் தேய்க்கத் தொடங்குகிறாள். இதைக் கண்டு சாதிக் அவளைக் கண்டிக்கிறான். தன் செயலியை எண்ணி அவமானத்தில் கூசிப் போய் சங்கரிடம் மன்னிப்பு கேட்கிறாள் பிரவீணா. “விடு இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே ரெண்டு பேரும் மறந்திடுவோம்” எனக் கடந்துபோகிறான் சங்கர்.  “என்னை நினைச்சா எனக்கே கேவலமா இருக்கு. என்னை யாருக்கும் பிடிக்காது. எனக்கு ஃப்ரெண்ட்ஸ் இல்லை. சாதிக்கும் என்னைவிட்டுப் போய்ட்டான்” என அவனிடம் புலம்பினாள். “எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்” எனச் சொல்லி பிரவீணாவை ஆறுதல் படுத்துகிறான். பிறகு அந்தப் பேச்சிலிருந்து திசைதிருப்புவதற்காக அவளின் குடும்பம் பற்றிக் கேட்கிறான். அதற்குப் பிரவீணா, “சின்ன வயசுல என்ன...

"ரசிகனில்" சில சிறந்த உரையாடல்கள் - பாலு

”இந்த செக்ஸ் சொறி மாதிரி. சொறிய சொறிய சொகமா இருக்கும். ஆனா புண்ணான பெறவு வலிக்கும், ரத்தம் வரும். லவ் பன்ணும்போது செக்ஸுக்கு கொஞ்சமாவது நியாயம் இருக்கும். ஒரு கட்டுப்பாடு வரும். ஆனா கண்ட பொண்ணுங்க பின்னாடி போய் உரசுறது ஒரு வியாதி. ஒரு புண்” * “புண்ணுக்கு ஏன் மருந்து போடணும்? சொறிஞ்சு சொறிஞ்சு சுகம் காணலாமே? ஏன்னா சொறிஞ்சா சொகமாத்தான் இருக்கும், ஆனா கடைசியில வலிக்குமில்லா, அதுக்குத்தான், நிரந்தரமா ஒரு திருப்தியோட நிம்மதியோட இருக்கணுனா செக்ஸை பிழிந்து வெளியே போடணும்” * “செக்ஸை கடந்து போறது ஈஸி” “அதெப்படி ஈஸி?” “நிறைய பேரு பண்ணிக் காட்டி இருக்காங்க. காந்தி ஒரு எக்ஸாம்பிள். அவரு தொடர்ந்து கையடிக்காமலே பொண்ணுங்ககிட்ட போகாமலே இருந்திருக்காரு.” “அதெப்படி? உடம்பே வெடிக்கிற மாதிரி இருக்குமே” “இருக்கும். ஆனா அந்த எனர்ஜிதான் பெரிய எனர்ஜி. செக்ஸில் நாம வீணடிக்காத எனர்ஜியை சரியான வேற விசயங்களில பயன்படுத்தலாம். இல்லாட்டி சும்மாவே இருக்கலாம். மனசு சுத்தமா இருக்கும்.” “அதெப்படி இருக்கும்?” “செக்ஸ் அழுத்தம் இல்லாடி நீ எதையும் சாதிக்க வேண்டியதில்ல. உன் தோற்றம், அந்தஸ்து பத்தி கவலை இல்ல. உன் இஷ்டத்துக்கு...

"ரசிகன்" பற்றி பாலு

ஹாய் அபிலாஷ், ‘ரசிகன்’ நாவலை வாசித்தேன்.  உங்களுடைய அ-புனைவு நூல்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். அவற்றையும் தங்களின் கட்டுரைகளையும் வைத்துச் சொல்வதானால் நீங்கள் எனது அபிமான எழுத்தாளர். ஆனால் உங்களின் சிறுகதைத் தொகுப்பான ‘தேவி’ என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. அதனாலேயே உங்களின் புனைவெழுத்து பக்கம் வர தாமதாகிவிட்டது. ’தேவி’ படித்துவிட்டு நான் வந்த ஒரு முன்முடிவு ‘அபிலாஷுக்கு புனைவு கைகூடவில்லை’ என்பது. அ-புனைவு எழுத்தாளராக இருக்கும்போது ஏற்படும் தர்க்க நோக்கம் புனைவழகியலை நெருங்கவிடாமல் செய்கிறதோ என்ற சந்தேகமும் இருந்தது. ‘ரசிகன்’ என் முன்முடிவுகளையெல்லாம் தகர்த்துவிட்டது. இந்நூலைப் பற்றி எனக்கு ஏற்பட்ட முதல் அபிப்பிராயம், இது முழுக்க முழுக்க இலக்கியத்தைப் பற்றிய Spoof நாவல். தமிழ் சினிமாவுக்கு மிர்சி சிவாவின் ‘தமிழ்ப்படம்’ போல ‘ரசிகன்’ தமிழிலக்கியத்தைப் பகடி செய்வதாகவே நினைக்கிறேன். நாவலின் முதலிரு பகுதிகளில் பல இடங்களில் சிரித்துக்கொண்டே படித்தேன். ஆனால் இறுதி அத்தியாயம் முற்றிலும் மாறுபட்ட உணர்வை அளித்தது. சாதிக் தன் நாவலை எரிக்கும் அத்தியாயம் உண்மையில் மெய் சிலிர்க்க வைத்தது. அறிவ...

ஒரு சர்வாதிகாரியின் தனிமை

ஹிட்லருக்கு ஒரு வழக்கம் உண்டு. அவர் ஒருபோதும் தன் தோல்வியை ஒப்புக்கொண்டதில்லை. பின்னடைவின் செய்திகளைக் கேட்டால் கடுமையாக கோபப்பட்டு பொருட்களை தூக்கி விசிறியடிப்பது, தன்னை மறந்து திட்டுவது, எச்சரிப்பது, மிரட்டுவது என ஆவி புகுந்த பாவியைப் போல நடந்துகொள்வார். அதன் பிறகு அவரது பிரச்சார அமைச்சர் கோபெல்ஸை அழைத்து தோல்வி குறித்த கதைகளை மறைப்பதற்காக மக்களிடம் தான் வென்றதாக ஒரு நம்பிக்கை ஏற்படுத்த சொல்வார். 1941இல் ரஷ்யாவில் ஜெர்மனிய படை மரண அடிவாங்கி பின்னோடியது. பனிக்காலத்தில் உறைந்து போய் சரியான உணவோ பாதுகாப்போ இல்லாமல் வீரர்கள் மடிந்தனர். ஆனால் அவர்கள் திரும்ப வந்துவிடவோ பின்வாங்கவோ கூடாது என ஹிட்லர் ஆணையிட்டதால் அவர்கள் வேறுவழியின்றி சண்டையிட்டனர். இறந்த குதிரைகளின் தசையை அவர்கள் தின்னும் போது பக்கத்தில் ஒருவர் கக்கா போய்க்கொண்டிருப்பார். அந்தளவுக்கு சிறிய இடங்களில் பதுங்கி வாழ்ந்துகொண்டிருந்தனர். கொஞ்சம் வெளியே போனால் ரஷ்ய படை சுட்டுவிடும். கோபெல்ஸ் ராணுவத்தினர் வெற்றிகொள்வதாக, எதிரிகளை சுட்டுவீழ்த்துவதாக படமெடுத்து அதை திரைப்படமாக வெளியிட்டார்; எல்லா திரைப்படங்களிலும் இந்த திரைத்துணுககுக...