இதையெல்லாம் வெளியில் இருந்து சுதந்திரமாகப் பார்ப்பவன் எனும் முறையில் எனக்கு எப்போதுமே சினிமா விருதுகள், அவை மீதான சர்ச்சைகள் குறித்து ஒரு கேள்வி உண்டு - நமது சினிமா - அதாவது இந்தியா முழுக்கவும் எடுக்கப்படும் படங்கள் - பார்க்கத்தக்கவை தாமா? இப்படங்கள் பார்வையாளர்களிடம் நேர்மையாக இருக்கின்றனவா? இல்லை. ஒரு படத்தை எடுப்பதைக் குறித்து வருடக்கணக்கில் யோசித்து உழைத்து உருவாக்குகிறார்களா? இல்லை. ஆழமான எண்ணங்கள், அறிதல் என்பவற்றை கூட விடுங்கள். தரமான பொழுதுபோக்கைக் கூட இவை தருவதில்லை. எனக்கு 50, 60களில் எடுக்கப்பட்ட படங்கள் - என்னதான் பழமையான கருத்துக்களை, உணர்ச்சிகளைக் கொண்டிருந்தாலும் - தெளிவாகவும் நேர்த்தியாகவும் உருவாக்கப்பட்டவை என்றும், கடந்த அரை நூற்றாண்டாகவே நமது சினிமாக்கள் குப்பையாக மாறி வருவதாகத் தோன்றுகின்றன. தமக்கு அளிக்கப்படும் சம்பளம் குறித்த குறைந்தபட்ச பொறுப்போ அக்கறையோ இவர்களுக்கு இல்லை. நான் பௌதீகமான உழைப்பைச் சொல்லவில்லை. அறிவார்ந்த, படைப்பாக்கம் சார்ந்த உழைப்பு. நடிகர்கள் இன்னும் கேடுகெட்டவர்கள். அவர்களுக்கு நடிப்பைப் பற்றியே அக்கறை இல்லை. தயாரிப்பாளர்கள் சிலர் பேசுவதைக் கே...