Skip to main content

Posts

Showing posts from January, 2013

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

போலியோவும் ஒரு பிணமும் சில சமூகக் கேள்விகளும்

இந்தியாவில் போலியோவை ஒழித்து இரண்டு வருடமாகிறது. யோசித்துப் பார்த்தால் இது ஒரு மகத்தான சாதனை. உலக அரங்கில் துவங்கிய போலியோ அழிப்பு திட்டத்தில் இந்தியா கலந்து கொண்டு கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக எண்ணற்ற மருத்துவர்களின் பங்களிப்புடன் ஊர் ஊராக ஒவ்வொரு ஏழை வீடாக சென்று இலவச தடுப்பு மருந்து கொடுத்து ஒரு சமூகப் புரட்சியின் கடப்பாட்டுடன் லட்சியவாதத்துடன் செயல்பட்டிருக்கிறது. இதற்காக 2000இல் இருந்து வருடந்தோறும் சுமார் ஆயிரம் கோடி செலவழித்து வருகிறோம். நம்மூரில் இப்படி நடந்துள்ளது வியப்புக்குரிய காரியம்.

எனது புரூஸ் லீயும் அபிலாஷின் புரூஸ் லீயும்! - சந்தோஷ்

என் சின்ன வயதில் அண்ணன்மார்கள் டெக்கும் டி.வியும் வாடகைக்கு எடுத்து ஊரில் படம் போடுவார்கள். இரவு ஆரம்பித்து விடிய விடிய ஐந்து படங்கள். எம்ஜியார், சிவாஜி, ரஜினி, கமல் என்று தெருவில் வசூலிக்கிற காசுக்கு ஏற்றமாதிரி ஜனநாயகப்பூர்வமான படம்காட்டல். மாமாக்களுக்கு தெரியாமல் அத்தைகள் கொடுக்கும் கடுகு டப்பா காசுகளுக்கு கரகாட்டக்காரன், சூரியவம்சம் போன்ற படங்களும் காலத்துக்கு ஏற்ப அதில் அடக்கம். சொக்கும் கண்களுடன் மூன்றாவது படம் தாண்டும் முன்பே பக்கத்திலிருப்பவனின் மடியில் அனந்தசயனம் கொள்வது என்போன்ற பொடிசுகளுக்கு வழக்கம். விழித்து பார்த்தால் விடிந்திருக்கும்.

அடிப்படைவாதத்தின் கையில் தமிழ் இஸ்லாம்

இந்திய இஸ்லாத்தைப் பொறுத்த மட்டில் பி.ஜெ.பி மட்டுமல்ல தவ்வீத் ஜமாத் போன்ற வஹாபிய அமைப்புகளும் தீங்கானவை என்பதை சமீப காலத்தில் உணர்ந்து வருகிறோம். எப்படி இந்து மதத்துக்கு ஆச்சாரமான ஆதிக்க சாதிகள் எதிரோ அதைப் போன்று இஸ்லாத்துக்கும் இதே பிராமணியத்துடன் இயங்கும் வஹாபிகளும் எதிர் தான். குறிப்பாக நவீனம், வளர்ச்சி ஆகியவற்றுக்கும் கல்வி பண்பாட்டு மேன்மைக்கும் ஊறு விளைவிப்பவையாக இந்த சக்திகள் தத்தமது சமுதாயத்துக்கு உள்ளன.

புத்தகத்தின் முகம்

பஷீரின் “என் உப்புப்பாவுக்கு ஒரு ஆனை இருந்தது” ஒரு அழுகாச்சி நாவலானாலும் வாழ்வு குறித்த உற்சாகமும் ஏற்பும் ஒரு வெளிச்சமாக ஒவ்வொரு சொல்வழியும் பெருகுகிறது. அந்த தித்திப்பான நாவலின் மனநிலையை அப்படியே பிரதிபலிப்பதாய் அவ்வளவு பிரகாசமாக இருந்தது அட்டைப்படம். யாருடா இதை வடிவமைத்தது என்று தேடிப் பார்த்தால் உயிர்மை, காலச்சுவடு புத்தகங்களில் பல பிரபலமான அட்டைகளை வடிவமைத்த, கூர்மையான அங்கதம் கொண்ட பிளாகுகளை எழுதும் சந்தோஷ். பொதுவாக இலக்கிய புத்தக அட்டைப்படங்கள் என்றால் அரை இருட்டில் சாம்பல் வண்ணத்திலோ வயிற்றை கலக்க வைக்கிற மாதிரி ஒரு நவீன ஓவியத்தையோ போட்டு விடுவார்கள். அதற்கும் பிரதிக்கும் சம்மந்தமிருக்கிறதா என்று நீங்கள் தினமும் அரைநொடி யோசித்து கடுப்பாகலாம். ஆனால் சந்தோஷ் வண்ணங்கள் பூத்து விரியும் படி அட்டையை பண்ணி இருந்தார். எதேச்சையாக பண்ணினாரா படித்து விட்டு பண்ணினாரா என்று தெரியாது; ஆனால் புத்தகத்தில் பஷீர் சித்தரித்த வாழ்வுநிலைக்கு மிகப் பொருத்தமாக அமைந்திருந்தது. சந்தோஷின் வடிவமைப்பில் ஒரு நூல் எழுத ஆசை தோன்றியது.

உங்க புத்தகம் அதிக பாராட்டும் அங்கீகாரமும் பெற ஆறு வழிகள்

தமிழில் ஒரு இளம்படைப்பாளி அதிக பாராட்டுகளும் விமர்சனங்களும் மூத்த படைப்பாளியிடம் பெற என்னென்ன செய்ய வேண்டும்? 1. பெரிய அரசு அதிகாரியாக இருக்கணும். ஐ.ஏ.எஸ்னா நல்லது 2. பெரிய பணக்காரரா அல்லது அரசியல் செல்வாக்கு பெற்றவரா இருக்கணும் 3. சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்க வாழ் தமிழரா இருந்து அங்கு நிறைய கூட்டங்கள் நடத்தி மூத்த படைப்பாளிகளை கூப்பிட்டு சோறு போட்டு சரக்கு ஊத்தி ஊர்வலம் கொண்டு போய் சுத்திப் போடணும் 4. நீங்க இதையெல்லாம் செய்வீங்கன்னு நம்பிக்கை ஏற்படுத்தினாலும் போதும் 5. அழகான பொண்ணா பொறந்து கொழஞ்சு கொஞ்சு பேசணும் 6. இவ்வளவும் கூட தேவையில்லை - யாருமே படிக்க முடியாதபடி படுமொக்கையா குழப்பமா ஒரு நாவல் எழுதனும். இவன் சப்பை என்ற முடிவுக்கு வரும் மூத்த எழுத்தாளர்கள் உங்களை புகழ்ந்து தள்ளி விடுவார்கள்.

Life of Pi: கடவுளுக்கும் ஒரு வங்காளப் புலிக்கும் நடுவே

யான் மார்ட்டலின் நாவலை சார்ந்து எடுக்கப்பட்டுள்ள Life of Pie சமீபத்தில் வந்த “அவதார்”, “ஹியுகோ” போன்று 3D கிராபிக்ஸில் பெரும் சாதனையை செய்கிறது. இதன் கிராபிக்ஸ் அவதாரை விட நிஜமாக தோன்றுகிறது. படத்தில் பை பட்டேல் எனும் 17 வயது பாண்டிச்சேரி தமிழ் இளைஞர் பசிபிக் கடலில் ஒரு சிறுபடகில் ஒரு பெரும் வங்காளப் புலியுடன் திசையற்று நாட்கணக்கில் திரிய நேர்கிறது. நாவலில் அவன் மாதக்கணக்காய் கடலில் ஆதரவற்று தவிக்கிறான். ஆனால் படத்தில் எவ்வளவு காலம் என்பது குறிப்பாய் சொல்லப்படவில்லை. இந்த கடற்பயண சாகசங்கள், மன முதிர்ச்சியும் தெளிவும் ஏற்படுத்தும் அனுபவங்கள், வாழ்வின் விழுமியங்கள் மீது ஐயப்பாடுகளை எழுப்பும் குரூரங்கள் ஆகியவை தான் இப்படத்தின் முக்கிய பகுதி.

புதுமைப்பித்தனின் அப்பா

புதுமைப்பித்தன் (தனது பூர்வீக) நிலத்தை விற்று காசாக்கிய போது அவரது சித்தப்பா சுப்பிரமணியபிள்ளை ஒரு யோசனை சொன்னார். வீணாக பணத்தை செலவு செய்து விடாமல் ஒரு ஜீப் கார் வாங்கி வாடகைக்கு விட சொன்னார். அப்போது யுத்தம் முடிகிற அல்லது முடிந்துவிட்ட பருவம். சரசமான விலைக்கு உறுதியான ஜீப் கார்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. எனவே அப்படி ஒன்று வாங்கினால் ஏதாவது பிரயோஜனகரமாய் இருக்கக் கூடும் என்பது அவர் எண்ணம். ஆனால் அதற்கு புதுமைப்பித்தன் சொன்ன பதில் என்ன தெரியுமா? “”ஜீப் வாங்குவதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை வாங்கியவுடனேயே அதை என் அப்பா மேலே தான் விடுவேன். சம்மதமா?” - தொ.மு.சி. ரகுநாதன், ப.50, ”புதுமைப்பித்தன் வரலாறு”

குடும்பமும் குற்றமும்

சமீபத்தில் தில்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண் கூட்ட வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட நிகழ்வின் போது போலீஸ் பிரதான குற்றவாளி ராம்சிங் குறித்து ஒரு தகவல் வழங்கியது: அவர் ஏற்கனவே குற்றங்களில் வழக்கு பதிவானவர். அவரது மனைவி இறந்து விட்டார். இதன் பொருள் அவர் பொது சமூகத்துக்கு வெளியே இருக்கும் குற்றவாளி. முக்கியமாய் அவர் குடும்ப அமைப்புக்குள் இருப்பவர்.

பசுக்கொலை காணொளி: மனிதர்கள் சாகும் போதும்…

தற்போது பரபரப்பாக பரவி வரும் கொடூர காணொளி ஒன்று கசாப்புக்காக பசுக்களை தலையில் சுத்தியால் அடித்து கொல்லுவதைக் காட்டுகிறது. நெஞ்சை பதற வைக்கும் காட்சி. பசுக்கள் எதிர்ப்புணர்வற்று திமிறாமல் காட்டிக் கொடுக்கின்றன. அதைப் பார்க்க ஒரு குழந்தையை மயங்க வைத்து நெரித்துக் கொல்லுவதற்கு இணையாக உள்ளது. ஆனால் நெஞ்சை உறுதியாக்கிக் கொண்டு பார்த்து விடுமாறு நண்பர்களைக் கேட்கிறேன்.

தில்லி கற்பழிப்பு: ஒழுக்க மனநிலையின் பின்னுள்ள குரூரம்

16 டிசம்பர் அன்று தில்லியில் ஓடும் பேருந்தில் ஆறு பேரால் 23 வயது மாணவி ஒருவர் கற்பழிப்பக்கப்பட்டு இரும்புக்கம்பியால் கடுமையாக தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட சம்பவம் தேசத்தை ஒட்டுமொத்தமாக கொந்தளிக்க வைத்துள்ளது. அப்பெண்ணின் பாலுறுப்பு சிதைந்து உருமாறி விட்டது. கம்பியால் குத்தப்பட்ட அவளது குடல் அழுகி, மாரடைப்பு நேர்ந்து அப்பெண் சிகிச்சை பயனளிக்காமல் உயிர் விட்டாள். எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், எம்.பிக்கள் என பலரும் கண்டித்து பேசியதோடு நில்லாமல் குற்றவாளிகளை தூக்கிலிடக் கேட்டுள்ளனர். இன்னொரு புறம் கிரண்பேடி காவல் துறையினரை எண்ணிக்கை அளவில் வலுப்படுத்தவும் சமூக காவல்துறையினரை ரோந்துக்கு அதிக அளவில் பயன்படுத்தவும் கோரியுள்ளார்.

உயிர்மையின் 9 நூல் வெளியீடு: நேர்த்தியான நிகழ்வும் ஒரே ஒரு பிசிறும்

நேற்று புக்பாயின் அரங்கில் உயிர்மையின் 9 நூல்கள் வெளியீட்டு நிகழ்வில் எனது “புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன்” நூலும் வெளியிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நீயா நானா இயக்குநர் ஆண்டனி என் புத்தகம் பற்றி பேசினார்.

புரூஸ் லீ நூல் பின்னட்டை அறிமுகம்

எனது நான்காவது நூல்

நாளை எனது நான்காவது நூல் வெளியீடு