முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உண்மைக்காக நிற்கும் ஒரே எழுத்தாளர்

அரசியல் சரிநிலையைப் பேணுவதில் ஒரு சமூக அங்கீகாரமும் அதில் இருந்து கிடைக்கும் சமூக அதிகாரமும் உண்டு. தமிழில் பல முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள் தம் கண்முன்னே நடக்கும் அநீதிகளைப் பற்றி பேசாமல் கடந்துவிடுவதும், சமூக அங்கீகாரம் மிக்க நியாயங்களை (status quo - ஒரு உதாரணத்துக்கு பெண்ணியம், நகரமயமாக்கல், தனிப்பட்ட வாழ்வில் பக்தி, வெளியே மத எதிர்ப்பு, தனிப்பட்ட வாழ்வில் சாதி பேணல், வெளியே சாதி எதிர்ப்பு) மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு பேசுவதும் இந்த அதிகாரத்துக்காகவே, தன்னல நோக்கத்திற்காகவே. ஜெயமோகனின் சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லாமல் இருந்த போதும் அவரது கருத்து சொல்லும் துணிச்சலை, பொதுக்கருத்தைப் பற்றி, அரசியல் சரிநிலைகளை பொருட்படுத்தாது தன் மனசாட்சிக்காக பேசும் தீரத்தை நான் எப்போதும் மதித்திருக்கிறேன். பெண்ணியத்தின் பெயரால் இங்கு நடக்கும் அநீதிகளில் ஒன்றை இப்பேட்டியில் சரியாக சுட்டி இருக்கிறார். தமிழின் நூற்றுக்கணக்கான முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் கூட பேசத்  துணியாத ஒரு உண்மை இது என்பதை கவனிக்க வேண்டும்.  போலி முற்போக்காளர்களை விட ஜெயமோகன் இவ்விசயத்தில் பல மடங்கு மேலானவர்....

அநீதியைக் கண்டால் கண்ணை மூடிக்கொள்ளும் பெண்ணியத்தின் பாசாங்கு

"கடந்த 10 வருடங்களில் பெண்கள் தான் அதிகமாக குடும்ப வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் என்று எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் சொல்கிறார், மற்றும் ஒரு சிலரின் பேஜ்ஜில் ஆண்களுக்கு நடக்கும் குடும்ப வன்முறைகள் மற்றும் பாலியல் வறட்சியில் ஆண்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். (...) இவ்வளவு கஷ்டப்பட்டு, அவர்கள் ஆசைப்பட்ட விசயத்தை செய்யும் இடத்தினை பெற்ற பின் பெண்கள் அத்தனை எளிதாக, அதை தூக்கி ஏறிய மாட்டார்கள். இவற்றில் காதல், திருமணம் என்று தடைகள் வரும் போது அதை துளிக் கூட தயவு தாட்சண்யம் இன்றி தூக்கிப் போட்டு விடுகிறார்கள். இப்படி குடும்ப அமைப்பால் நம் வீட்டு முந்தைய பெண்கள் காலம் காலமாக வரதட்சணை, மாமியார், மாமானர் கொடுமை, அடுப்படியில் நின்று நாள் முழுவதும் இருப்பது சொல்லி நிறைய அனுபவித்து விட்டார்கள். (...) பெண்களுக்கு செக்ஸ் தேவையா, விடுதலை தேவையா என்றால், விடுதலையை டிக் அடித்து விட்டு நகர்ந்து விடுகிறார்கள். இது கால மாற்றம் தான். ஆணோ/பெண்ணோ அதை ஏற்றுக் கொண்டு தான் ஆகணும். அதை விட்டு பெண்கள் யாரையும் திருமணம் செய்யல, விவாகரத்து கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள், ஆண்களால் பெண்களை கவர முடியல என்று சொல்வத...

ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் காதல்

  கேள்வி: அழகான பெண்கள் ரொம்ப பிகு பண்ணிக் கொள்வதால் ஆண்கள் தகுதி குறைவான பெண்களை நாடும் அவல நிலை ஏற்படுகிறது. இந்த இரண்டாம் கட்ட பெண்களுக்கான சந்தை மதிப்பும் இதனால் உயர்ந்துவிட அவர்கள் முன்னவர்களை விட அதிகமாக பிகு பண்ண ஆண்களின் நிலை கந்தரகோலமாகி விடுகிறதே. இதற்கு என்ன செய்ய? பதில்: பெண்ணுடலை எந்த தகுதியும் கோராமல் நாடுவதே சிறப்பானது, அதுவே இயல்பானது, ஆகையால் அதுவே என் தீர்வும். மரபணு ரீதியாக பார்த்தாலும் அழகான பெண்ணிடம் எந்த உயர்வான திறனும் இல்லை. மேற்பூச்சு இல்லாமல் மனிதர்களை எதிர்கொள்வதே அழகு. ஒரு எளிய மிருகமாக நான் இதையே நம்புகிறேன். இந்த ஆன்மீகம், காதல் போன்ற அபத்தங்களை நான் நம்பாததது இதனாலே. இந்த உலகின் மிகப்பெரிய வக்கிரம் பிடித்த மனிதன் காதலைக் கண்டுபிடித்தவனே. காதல் கேவலமானது என்பதல்ல என் பிரச்சினை. காதல் அழகானதே. ஆனால் அது ஒரு அழகான பொய். காதல் ஒரு மதசார்பற்ற பக்தியுணர்வு. எப்படி ஒரு கல்லில் கடவுளைக் காண்கிறோமோ அப்படியே ஒரு பெண்ணுடலில் நாம் காதலியைக் காண்கிறோம். எப்படி கல் என்பது வெறும் கல்லோ, அப்படியே பெண்ணுடலும் வெறும் உடல் தான். வெறும் உடல் எனும் போது எல்லா உடல்களும் ஒன...

இலக்கிய சந்தை நடுவே பேச்சாளனுக்கு மேடை அமைக்காதீர்

  புத்தக கண்காட்சிகள் வாசிப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு, எழுத்தாளர்களை பிரபலமாக்க அல்ல எனும் வாதம் மிகவும் அபத்தமானது. உலகம் முழுக்க எழுத்தாளர்களை பிரபலமாக்கியே புத்தகங்களை விற்கிறார்கள். கடந்த 200 ஆண்டுகளாக அப்படித்தான் உலக புத்தக சந்தை இயங்குகிறது. இங்கு மட்டுமே சுகிசிவம்களும், பர்வீன் சுல்தானாக்களும் மேடையில் தோன்றி பேசினால் புத்தக வாசிப்பு மக்களிடம் ஏற்படும் என நம்புகிறார்கள். அவர்கள் பேசினால் பட்டிமன்ற / பேச்சுக் கலை தான் வளருமே அன்றி, வாசிப்பு அல்ல. ஒரு சோப்பை ஒரு மாடல் அழகியை வைத்து விளம்பரப்படுத்துவதைப் போல ஒரு புத்தகத்தை ஒரு பட்டிமன்ற பேச்சாளரை வைத்து விளம்பரப்படுத்த முடியாது. இரண்டும் இருவேறு பண்டங்கள். இது போன்ற விழாக்களில் பபாசியின் / விழா ஒருங்கிணைப்பாளர்களின் நோக்கம் கூட்டம் சேர்ப்பதே அன்றி புத்தகத்துக்கு வாசகனை உருவாக்குவது அல்ல. தற்காலிகமாக ஒரு கூட்டத்தை உண்டு பண்ணிக் காட்டினால் தம் சோலி முடிந்தது என நினைக்கிறார்கள். எங்காவது ஒரு ஆய்வு பண்ணி சுகிசிவத்தினால் இத்தனை ஆயிரம் புது வாசகர்கள் மாதாமாதம் உருவாகிறார்கள் என நிரூபித்ததுண்டா? இல்லை. என்னுடைய பரிந்துரை எழுத்...

பய்ஜூவின் குழந்தையையும் சொத்துக்களையும் பறித்து அவரை தற்கொலைக்குத் தூண்டிய சட்டம்

ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு ஆதரவாக கொண்டு வரப்ப்பட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்டங்களை மிக அதிகமாக பயன்படுத்துவது பண வசதியும் அதிகாரமும் கொண்ட மத்திய / மேல்மத்திய வர்க்க பெண்களே. எதற்கென்றால் தன் மீது தவறு இருக்கும் போது அதை மறைக்கவும், கணவனையும் அவன் குடுமத்தினரையும் இரண்டாண்டுகள் சிறையில் தள்ள வாய்ப்புள்ள சட்டங்களைக் கொண்டு அவர்களை மிரட்டி சுலபத்தில் விவாகரத்து பெறவும், பல லட்சங்களில் இருந்து கோடிகள் வரை வரக்கூடிய 'செட்டில்மெண்ட்' தொகையைப் பிடுங்கவும் இச்சட்டங்களை பயன்படுத்துகிறார்கள் என்பதே எதார்த்தம். கூடவே குழந்தையையும் கணவனிடம் இருந்து பிடுங்கிக் கொள்வார்கள் - அல்லது குழந்தையை தம் பேச்சுவார்த்தைக்காக பயன்படுத்துவார்கள். சில இடங்களில் குழந்தையை துன்புறுத்தியதாக வேறு கணவன் மீதும், அவன் குடும்பத்தின் மீதும் பொய் வழக்கு போடுவார்கள். மூன்று நான்கு ஆண்டுகளில் குழந்தையை கணவனுக்கு சரிவர காட்டாமல் மறைத்துவிட்டு "குழந்தையைக் கொடுக்கிறோம், அதற்கு இவ்வளவு லட்சங்கள் கூட கொடு" எனக் கேட்டு வாங்குகிற மனைவியரும் உண்டு. என் நண்பர் (ஒரு எழுத்தாளர்) ஒருவரிடம் இப்படி 'சமரசம்' ...

ஏன் இப்படி பண்ணக் கூடாது?

  நிறைய தோழர்கள் பேச்சாளர்களை புத்தக விழாவின் போது தலா 30,000 கொடுத்து வரவழைப்பதன் நோக்கம் அதிக மக்களை திரட்டுவதே என்கிறார்கள். எனக்கு இது குறித்து மூன்று ஐயங்கள்: 1) ஒரு நடிகை நடனமாடினால் பேச்சாளருக்கு வருவதை விட அதிக கூட்டம் வரும். எனில் ஏன் நாம் அதை பரிசீலிக்கக் கூடாது? 2) தேர்தல் பிரச்சாரங்களின் போது தலைக்கு இவ்வளவு என பணம் கொடுத்து பார்வையாளர்களை வேட்பாளர்கள் திரட்டுவதைப் பார்க்கிறோம். அவர்கள் இந்த பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவரை அழைத்து வந்தால் லட்சக்கணக்கில் கூட்டம் குவியுமே? அதற்கு பதில் ஏன் கூட்டத்துக்காக இவ்வளவு பணத்தை அரசியல்வாதிகள் செலவழிக்கிறார்கள்? தமிழருவி மணியனின் சொந்த கட்சிக் கூட்டங்களில் எத்தனை லட்சம் மக்கள் வருகிறார்கள்? அதை வைத்து அவர் ஏன் ஒரு எம்.எல்.ஏ கூட ஆகவில்லை? 3) இவ்வளவு பிரபலமான பட்டிமன்ற பேச்சாளர்களை ஒரு படத்தில் தோன்றி அரைமணி பேச வைத்தால் அதைக் கேட்க ஒவ்வொரு காட்சிக்கும் சுமார் 10,000 பேர் வர மாட்டார்களா? எனில் அப்படம் பெரும் வெற்றி பெறுமே? முன்பு செந்தில்-கவுண்டகணி டிராக்குக்காக மட்டும் படங்கள் ஓடியுள்ளதைப் போல? புத்தக விழா ஒருங்கிணைப்பாளர்களுக்கு த...

பேசி அழியும் தமிழ் சமூகம்

" நான் யார் ?" எனும் தலைப்பில் சுந்தர ராமசாமி குறித்த ஆவணப்படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன் . அதன் துவக்கத்தில் சு . ரா ஐந்து நிமிடங்கள் எழுத்தாளனின் வாழ்க்கை இலக்கு பற்றி பேசுகிறார் . மிக மிக மெதுவாக , மென்மையாக , நுட்பமாக அதே நேரம் அழுத்தமாக ஒவ்வொரு கருத்தாக ஒரு நட்சத்திரம் நகர்வதைப் போல பேசிக்கொண்டு போகிறார் . சு . ரா நேரிலும் அப்படித்தான் பேசுவார் . மிக ஊன்றி கவனிக்காவிடில் அவர் குறிப்புணர்த்துகிற சங்கதிகளை மிஸ் பண்ணிவிடுவோம் . இன்ன பொருளில் தான் சொன்னாரா அதை என பின்னர் குழம்புவோம் . அடித்து சொல்வது , மீள மீள சொல்வது , விளக்குவது , சுவை பட சொல்வது , பல கதைகள் , தாம்தூம் டாம்பீகங்களுடன் , சுயபிரதாபங்கள் , பிறரை இழித்துரைத்தலுடன் பேசுவதை அவரிடம் பார்க்கவே முடியாது . சு . ரா இன்றைய காலத்தில் இப்படி ஒரு மேடையில் இவ்வாறு பேசினால் என்னாகும் என யோசித்துப் பார்த்தேன் . பார்வையாளர்கள் இடையே ஒரு சலசலப்பு இருக்கும் , சிலர் வெட்கமே இல்லாமல் எழுந்து போவார்கள் , பலர் போனில் மூழ்குவார்கள் , பரஸ்பரம் ...