Skip to main content

Posts

Showing posts from June, 2019

கோலியின் சொதப்பல் களத்தடுப்பு காட்டுவதென்ன?

ஷமி ரொம்ப சுமாரான களத்தடுப்பாளர் என்பது எதார்த்தம் . ஆக , இறுதி ஓவர்களில் ஒரு பந்தை அவர் பந்தை சரியாக களத்தடுப்பு பண்ணாததில் , ரன்கள் கொடுத்ததில் நமக்கு ஆச்சரியம் இல்லை . இதையே என வர்ணனையாளர்கள் சொல்கிறார்கள் என நான் புரிந்து கொண்டேன் . ஆனால் இதே கட்டத்தில் பவுண்டரி லைனுக்கு அருகில் கோலி நின்றிருந்த போது தன்னை நோக்கி வந்த பந்தை போக விட்ட விதம் கொஞ்சம் விசித்திரமாக இருந்தது . 

உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு இந்தியா விட்டுக்கொடுத்ததா?

இன்றைய உலகக்கோப்பை ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் எதிர்மறை ஆட்டத்தை பார்க்கையில் இது விட்டுக்கொடுக்கப்பட்ட ஆட்டமோ எனத் தோன்றுகிறது . குறிப்பாக , இங்கிலாந்தின் துவக்க பேட்ஸ்மேன் ஜேசன் ராய் இருபது சொச்சம் ஸ்கோரில் இருக்கும் போது கீப்பருக்கு எட்ஜ் கொடுக்க அதை ரிவ்யூ பண்ண வாய்ப்பிருந்தும் கோலி எடுக்கவில்லை

Sudani from Nigeria

கடந்த வருடம் மார்ச் மாதம் வெளியாகி பரவலான பாராட்டும் கவனமும் பெற்ற மலையாள படம் Sudani from Nigeria. நேற்று எதேச்சையாய் பார்க்க நேர்ந்த போது என்னையும் இப்படம் ஆச்சரியப்படுத்தியது . முதலில் தோன்றிய விசயம் இதைப் போல மற்றொரு படத்தை நான் , இந்திய சினிமாவில் , கண்டதில்லை என்பது .

பிக்பாஸ், துயரத்தை ஏன் கூவி விற்கிறீர்கள்?

“ உங்களது வாழ்க்கையின் மறக்க முடியாத சம்பவத்தை சொல்லுங்கள் , இழப்பை சொல்ல்லுங்கள் ” என்பது போன்ற ஒப்பாரி டாஸ்குடன் பிக்பாஸ் மிக மிக செயற்கையாக ஆரம்பித்துள்ளது . இந்த டாஸ்கில் பகிரப்படும் துயரக்கதைகளில் வெளிப்படும் உணர்ச்சிகள் உண்மையாக இருக்கலாம் ; அவை நம்மை மிகவும் நெகிழவும் கண்களை நிறைக்கவும் செய்யலாம் . ஆனால் இது எவ்வளவு ஆபத்தான பண்பாட்டை உருவாக்குகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும் .

பிக்பாஸ்: காதல் வரும் வேகம் (2)

தமிழ் பிக்பாஸின் இரண்டாம் பருவத்தில் காதலை விட அதிகமாய் பேசப்பட்டது நித்யா - பாலாஜியின் இல்லாத தாம்பத்ய பாசமும் இருக்கிற பரஸ்பர கசப்பும் . அவர்களை ஒருவிதமாய் செயற்கையாய் சேர்த்து வைத்து , அவர்களது குழந்தையை மையமாக்கி டிராமா செய்ய வேண்டும் எனும் பிக்பாஸின் வியூகம் பரிதாபகரமாய் தோற்றது . இதை அடுத்து வீட்டில் உள்ள இளைய தலைமுறையினரில் யார் காதல் வயப்படுவார்கள் எனும் கேள்வி எழுந்தது . யஷிகா - மஹத் காதல் அப்படித் தான் மெல்ல மெல்ல வெகு தயக்கமாய் “ நிகழ்த்தப்பட்டது ”. பிக்பாஸ் வரலாற்றின் மிக அபத்தமான காதல் இது . ஏனென்றால் மஹத் ஏற்கனவே வெளியே ஒரு காதலியை கொண்டிருக்கிறார் . அதைப் பற்றி அவர் பிக்பாஸ் வீட்டுக்குள்ளே விவாதித்திருக்கிறார் . அப்பெண் பிக்பாஸ் நிகழ்ச்சி வார இறுதியில் மேடையில் நிகழும் போது பார்வையாளர் தரப்பில் வருவதுண்டு . அவர் இருக்கையிலே , தினமும் டிவியில் மஹத்தை கவனிக்கையிலே அவர் யஷிகாவை நேசிப்பது கிட்டத்தட்ட அசாத்தியம் . மேலும் , இது குறித்த விசாரணையின் போது யஷிகா எந்தவொரு உணர்ச்சியும் இன்றியே...

பிக்பாஸ்: காதல் வரும் வேகம்! (1)

தமிழ் “ பிக்பாஸ் ” முதல் பருவத்தில் ஓவியாவுக்கு ஆரவ் மீது தோன்றிய காதலுக்கு அதற்கான ஒரு தயாரிப்பு காலம் இருந்தது . நட்பாகி , பழகி புரிந்து இணக்கமாகி ஏதோ ஒரு தருணத்தில் காதல் வயப்படுகிறார்கள் . ஏற்கனவே செம க்யூட்டாக நடந்து கொண்டு மக்களின் இதயங்களை வென்றிருந்த ஓவியா இந்த காதல் அத்தியாயத்துடன் தன் புகழின் உச்சிக்கே சென்றார் . இந்த பருவத்தில் இந்த அத்தியாயம் ஒரு முழுநீள காதல் படத்தை பார்ப்பது போன்றே அமைந்தது - அதுவும் எண்பதுகளில்  “ பதினாறு வயதினிலே” போன்ற மிக பிரபலமான படங்களில் வரை அதிகமாய் பேசப்பட்ட தொன்மமான அழகிய காதலனால் கைவிடப்பட்ட கபடமற்ற கன்னிப்பெண் என்பது ஓவியா - ஆரவ் விசயத்தில் மீண்டும் புனையப்பட்டு நிகழ்த்தப்பட்டது . ஆரவின் காதலின்   நிலையாமை , அவர் ஓவியாவுக்கு செய்த “ துரோகத்தை ” பிக்பாஸ் காணொளி போட்டுக் காட்டி அம்பலப்படுத்தினாலும் , பார்வையாளர்கள் தரப்பு வேண்டாம் வேண்டாம் என கெஞ்சினாலும் ஓவியா தன் காதலை கைவிட வில்லை ; அவர் தொடர்ந்து ஆரவையே தான் காதலிப்பதாய் சொன்னார் . இந்த “ ...

காதல் எனும் “மயக்கம்”

கவிஞர் இசை உயிர்மை இதழில் எழுதி வரும் காமத்துப்பால் உரை பத்தி அருமையான ஒரு முயற்சி . ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தில் வரும் குறள்களை எளிமையாய சுருக்கமாய் விளக்கி விட்டு அதை ஒட்டி தனது பகடியான கவித்துவமான பார்வையையும் அதை தருகிறார் . ஒரு புத்தகமாய் வருகையில் இன்னும் சுவாராஸ்யமாய் இருக்கும் என நினைக்கிறேன் . இம்மாத பத்தியில் அவர் குறிப்பிடும் ஒரு குறள் என் நெஞ்சை வெகுவாய் கவர்ந்து விட்டது . அதன் நுணுக்கம் மற்றும் ஓசை அழகு காரணமாய் . வெகுநேரமாய் அதையே மீளமீள மனதுக்குள் சொல்லிக் கொண்டும் யோசித்தவாறும் இருந்தேன் . இசை தரும் விளக்கத்துடன் பின்னர் பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியர்கள் தந்த விளக்கங்களையும் படித்தேன் . எனக்கு அப்போது மற்றொரு புரிதல் ஏற்பட்டது . நமது தமிழ் மனத்துக்கும் இயற்கைக்குமான தனித்துவமான உறவை இக்கவிதை தொட்டுப் போகிறது . அதையே இங்கு பேசப் போகிறேன் . “ மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று ” (1112) இதன் அதிகாரம் “ நலம் புனைந்துரைத்தல் ”. அதாவது காதலியின்...

மாப்பிள்ளைக்கு மாமன் மனசு

“ மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ காமன் மனசு ” “ நெற்றிக்கண் ” படத்தில் சுசீலா பாடிய பாடல் இது . இந்த பாடல் தோன்றும் இடம் பற்றியோ கதாபாத்திரங்கள் , திரைக்கதையில் இப்பாடலின் இடம் , சுசீலா இப்பாடலை அழகாய் பாடியுள்ள விதம் பற்றியெல்லாம் நான் இப்போது அதிகம் பேசப் போவதில்லை . ரஜினி இரட்டை வேடத்தில் அப்பாவாகவும் மகனாகவும் நடித்திருக்கிறார் ; அப்பா ரஜினி காமாந்தகர் , பணக்காரத் திமிர் கொண்டவர் ; அவர் ஒரு பெண்ணை பலாத்காரம் பண்ணுகிறார் . மகன் பின்னர் அப்பாவின் தவறை உணரச் செய்கிறார் என்பது கதைச் சுருக்கம் . இதை பலர் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் . இசை ராஜா என்றும் , இந்த பாடலை எழுதியவர் கண்ணதாசன் என்றும் உங்களுக்கு தெரிந்திருக்கும் . படத்தில் இப்பாடலை ஒரு பெண் பார்க்கும் காட்சியில் சரிதா பாடுகிறார் . சரிதா அப்பா ரஜினியின் நிறுவனத்தில் மேலாளர் . அவர் தான் அப்பா ரஜினியால் பலாத்காரத்துக்கு ஆளானவர் . ஆக , பெண் பார்க்கும் காட்சியில் சரிதா “ மாப்பிள்ளைக்கு மாமன் மனசு , மாமனுக்கோ காமன் மனசு ” எனும் போது ...