தொண்ணூறுகளில் தமிழ் சினிமா ஒரு மேற்தட்டு பெண் மீதான் தீராத ஏக்கத்தை சித்தரித்து , சமநிலையற்ற காதல் உறவை பேசுவதில் மிகுந்த சிரத்தை காட்டியது . பொருளாதார , சாதிய காரணங்களால் உருவாகும் சமநிலை காதலிலும் இருப்பதால் தமிழ் சினிமாவில் என்றும் சுமூக முடிவுள்ள காதல் படங்கள் பெரிதாய் கொண்டாடப்பட்டதில்லை . சராசரி தமிழ்க் காதலனுக்கு காதல் என்றுமே எட்டாக்கனி தான் . இந்த எதிர்மறைத்தன்மையை ஈடுகட்ட இக்காலகட்ட சினிமாவில் காதல் மிகைப்படுத்தப்பட்டு லட்சிய வடிவில் பேசப் பட்டது . ரெண்டாயிரத்தின் தமிழ் சினிமாவை காதல் மீதான அவநம்பிக்கையின் வேறு வடிவில் பேசியது . தாராளவாதம் பொருளாதாரக் கொள்கையளவில் மட்டுமல்லாமல் நம் பண்பாட்டையும் பாதித்தது .