சைவம் மட்டுமே உண்டு வருவோர் வயதானதும் மிகவும் தளர்ந்து போவதை அதிகமாகக் காண்கிறேன். இது போக பல நரம்பியல் சிக்கல்கள், தோல் பிரச்சினைகள், தசையிழப்பினால் வரும் தளர்ச்சியும் ஏற்படுகின்றன. வைட்டமின் பி 12 இல்லாமை, omega-3 fatty acids, particularly eicosapentaenoic acid (EPA) மற்றும் docosahexaenoic acid (DHA) ஆகியற்றின் போதாமையால் இது நிகழும் என்கிறார்கள். இது ஏதோ நான் அரைகுறையாய் கவனித்துக் கண்டுபிடித்தது அல்ல. Impact of Vegan and Vegetarian Diets on Neurological Health: A Critical Review எனும் கட்டுரையில் இதைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்கள். வீகன் உணவுகள் இன்னும் மோசம் என்கிறார்கள். முக்கியமான காரணம்: நாம் வீடு, கார், பயணம் போன்ற உடைமைகள், வசதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணவுக்கு அளிப்பதில்லை. ஒருவர் பெரிய வீட்டில் வாழ்வார். வங்கியில் பணமிருக்கும். ஆனால் காலையில் உப்மாவோ இட்லியோ சாப்பிடுவார். வேக வைத்த காய்கறி, முட்டை, சிக்கன், பனீர், சீஸ் எல்லாம் அவருக்கு அதிகச் செலவாகத் தெரியும். அது மட்டுமல்ல சிலர் காரெடுத்துப் போய் வசந்த பவன் போய் இட்லி சாப்பிடுவார்கள். பொங்கலை முழுங்குவ...