முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொய்யாட்டம்


 

விசிக, காங்கிரஸ், ஐ.யு.எம்.எல் அமைச்சரவையில் இணைவதுடன் தவெக தன்னை ஒரு திமுக குளோன் கட்சியாக மாற்றிக் கொண்டு விடும். திமுகவின் அரசியலைப் பேசிக் கொண்டே தன்னை இன்னும் ஸ்டைலான திமுகவாகவும் எதிர்-திமுகவாகவும் காட்டும். அத்தோடு, இனிமேல் தவெகவை எதிர்க்கும் பொறுப்பை (அதாவது எதிர்க்கட்சி அந்தஸ்தை) பாஜக எடுத்துக் கொள்ளும். ஒரே ஒரு எம்.எல்.ஏ மட்டும் இருப்பதாலும், அதிமுக ஏற்கனவே தவெக 'கூட்டணியில்' உள்ளதாலும் (என்னவொரு குழப்பம் ஐயா) அவர்கள் தம்மை எதிர்க்கட்சி என்றும் கோர மாட்டார்கள். ஆனால் அப்படியே பாவனை செய்வார்கள். இப்போதே பாஜக ஆதரவாளர்கள் ஒரு பக்கம் தவெகவை ஆதரிப்பதையும் இன்னொரு பக்கம் சாடுவதையும் ஊடகங்களில் பார்க்க முடியும். இதெல்லாம் தெளிவாக அவர்களுக்குத் தெரிந்தே நடக்கிறது.

தவெக திமுக நகல் 1 என்றால் பாஜக திமுக நகல் 2. இந்த இரண்டு நகல்களும் இனி மோதிக் கொள்வதே நம் களமாக இருக்கும். இந்த மோதலும் நிஜ மோதல் அல்ல. ஒருவித நடிப்புதான். இதை ஒரு 'பரவச அனுபவமாக' நம் மீடியா மாற்றும்.
என்ன சிக்கல் என்றால் தவெகவை இனி யார் விமர்சித்தாலும் அவர்கள் இந்த பொய்யாட்டத்தின் பகுதியாக வேண்டி இருக்கும். அதை பாஜக ஹைஜேக் பண்ணும். ஒரு திமுக அனுதாபி பாஜகவை எதிர்த்துக் கொண்டே தவெகவை எதிர்ப்பார். ஒரு பாஜக அனுதாபி பாஜகவை ஆதரித்துக் கொண்டே திமுகவையும் தவெகவையும் எதிர்ப்பார். இந்த இரு தரப்பினரும் கூடவே விசக, காங்கிரஸையும் எதிர்க்க வேண்டியிருக்கும். ஆனால் விசிகவும் காங்கிரஸும் கொள்கையளவில் திமுகவுக்கும் தம்மை எதிர்ப்போருக்கும் இணக்கமாக இருக்கும். பார்ப்பவர்களுக்கு பயங்கர குழப்பமாக இருக்கும்.
திமுகவை குறிப்பிட்ட சித்தாந்தம் கொண்ட கட்சியாகவும் ஒரு எதிர்கட்சியாகவும் போலச் செய்து அபகரித்து அகற்றுவதே அவர்களுடைய செயல்திட்டம்.
இதைக் குறித்து விரிவான கட்டுரை ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். வரும் மாதம் வெளிவரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.