தென்னாப்பிரிக்காவின் யான்சன் மட்டையாடும்போது கவனியுங்கள் - அவர் தனக்குத் தடுத்தாடும் திறன் இல்லாததால் குச்சிகளை விட்டு ஆடுகிறார் - அதனால் அவர் பந்துகளை அவற்றின் நீளத்தைப் பார்த்தே அடிக்கிறார், திசையை நோக்கி அல்ல. அதாவது அவர் திசையைத் தன் கணக்கில் இருந்தே எடுத்து விடுகிறார். நடுக்குச்சியில் விழும்பந்து அவருக்கு ஆப் குச்சியாகவும், கால் குச்சியில் விழுவது நடுக்குச்சியாகவும் இருக்கும். இது பந்துகளை நேராகவும் மிட்விக்கெட் மேலும் தூக்கி அடிக்க சுலபமாகும். ஓரளவுக்கு கண்-கை ஒருங்கிணைப்பு கொண்ட மட்டையாளர்களுக்கு அதிக ஸ்டிரைக் ரேட்டில் ஆட இது வெகுவாக உதவும் பாணி. எல்.பி.டபிள்யு, வைடை வெளியே எடுத்துவிடலாம். இப்படியான மட்டையாளர்களுக்குப் பந்து வீசுவதன் பால பாடமே பந்தை 5-6வது குச்சிகளில், குறைநீளத்திலோ யார்க்கர் நீளத்திலோ வீச வேண்டும் என்பதுதான். இந்தப் பாணி ஆட்டத்தைச் செறிவாகப் பயன்படுத்தியவர்கள் தோனியும், டிவில்லியர்ஸும். அவர்கள் இருவரும்கூட கேட்ச் கொடுத்தே அதிகமான முறைகள் அவுட் ஆனார்கள். இன்று அந்த இடத்தில் இருப்பவர் குட்டி ஏ.பி என அழைக்கப்படும் தெவால்ட் பிரெக்ஸிஸ். அடுத்துதான் யான்சன், போஷ் போன...