முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இனவாதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழரின் தாழ்வுணர்வு

  நான் நீண்ட காலமாக தமிழ் நவீன இலக்கியத்தைப் படித்து வருகிறவன். மொழிபெயர்ப்புகள் வழியாக இந்திய இலக்கியப் படைப்புகளையும் படிக்கிறவன். ஆங்கிலம் வழியாக நேரடியாகவும் மொழிபெயர்ப்பிலும் உலக இலக்கியத்தைப் படிப்பவன். நான் ஒரு எழுத்தாளரும் விமர்சகரும் கூட. என்னுடைய இந்த அனுபவத்தின் ஊடாக நான் தெரிந்துகொண்ட ஒரு உண்மை மொழிக்கும் இனத்துக்கும் தேசத்துக்கும் ஒரு படைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரத்துக்கும் பெரும் தொடர்பு இருக்கிறது என்பதே. மொழிபெயர்ப்பு வழியாகத் தமிழில் நாம் படிக்க நேர்ந்து கொண்டாடுகிற ஒரு படைப்பை ஒருவேளை அந்தப் படைப்பாளர் நம்மூரில் பிறந்து நம் மொழியிலே எழுதியிருந்தால் கொடுக்க மாட்டோம். நாம் மட்டுமல்ல உலக விருதுகள், விமர்சன அங்கீகாரம் எதுவும் அவருக்குத் தரப்பட மாட்டாது. இதை நான் அங்கலாய்ப்பாகச் சொல்லவில்லை - இதுவே எதார்த்தம். ஏனெனில் இதற்குப் பின்னால் முன்னூறு ஆண்டுகளுக்கு மேலான காலனிய ஆதிக்க வரலாறும், இனவாதமும் உண்டு. சில சுமாரான படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வரும்போதெல்லாம் எனக்குத் தோன்றும் - இவை நேரடியாகத் தமிழில் எழுதப்பட்டிருந்தால் நாம் தூக்கிப் போட்டு மிதித்திருப்போம...