முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமகாலத்தின் மிகப்பெரிய நச்சுக்கிருமி

  நான் அண்மையில் எடுத்த மிகச் சிறந்த முடிவு என நான் கருதுவது இதுதான்: என்ன நடந்தாலும், எவ்வளவுதான் நண்பர்களும் அன்பர்களும் புகழ்ந்தாலும் வெளியாகும் தமிழ் மற்றும் மலையாளப் படங்களைப் பார்க்கக் கூடாது. இதனால் என் மனநிம்மதி வெகுவாக மேம்பட்டுள்ளது. அண்மையில் கூட என் மாணவர் ஒருவர் "நீங்க ஜெய்லர் 2 பார்த்துட்டீங்களா? அதன் கிளைமேக்ஸ் எனக்கு உங்கள் மின்சார சக்கர நாற்காலியைப் பார்த்ததும் நினைவுக்கு வந்துவிட்டது" என்றார். நான் சிரித்து எஸ்கேப் ஆகிவிட்டேன். இன்று மற்றொரு நண்பர் மற்றொரு படத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். "ஓ அப்படியா" என எஸ்கேப் ஆகிவிட்டேன். இந்த உணர்வு மிகப் பிரமாதமாக இருக்கிறது. மலையாளப் படங்களின் ரசிகர் மன்றத் தலைவியும் கேரள சினிமாவை ஒட்டுமொத்தமாக குத்தகைத்து எடுத்த கணக்கில் பேசுபவருமான தோழர் பல்லவி அடிக்கடி எதாவது ஒரு புதிய மலையாளப் படத்தை டிவியில் போட்டு என்னைச் சிக்க வைக்கப் பார்ப்பார். உடனே ஹெட்போன் மாட்டி என் மடிக்கணினியைத் திறந்து எதையோ எழுதத் தொடங்கி மெல்ல நகர்ந்து அப்படியே எஸ்கேப் ஆகிவிடுவேன். இது என் மனநிம்மதியை இன்னும் மேம்படுத்தி இருக்கிறது. சிலர் பேஸ...

"காதல் நாடகம்" குறித்து மா அண்ணாமலை

நூல்                     : காதல் நாடகம்  ஆசிரியர்            : ஆர். அபிலாஷ்  வெளியீடு          : எழுத்து பிரசுரம்  பக்கங்கள்          : 168  வகை                   : நாடகம்  ஆர். அபிலாஷ், டேவிட் வெஸ்ஸி என்ற நாடக இயக்குனர் கேட்டதற்கு இணங்க இந்நாடகங்களை எழுதியுள்ளார். தன் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப் படிப்பின்போது  இவற்றை ரசித்து எழுதியுள்ளார். காரணம் அவரின் படைப்பு கூட்டாக வாசிக்கப்பட்டு பின் அரங்கேற்றம் செய்யப்படுவதை நேரில் கண்டதே. இவை வெறுமனே வீதி நாடகங்கள் மட்டுமல்ல ஆசிரியர் சொல்வதைப் போன்று சிறுகதைகளாக வாசிக்கவும் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளன.  தன் எழுத்து தத்ரூபமாக காட்சியாக்கப்படுவதை கண்டவர் தன் முன்னுரையில் இவ்வாறு சொல்கிறார். "அந்த நாடகப் பிரதியானது கூட்டு வாசிப்பு மற்றும் ஒத்திகைகளின் போது, இறுதியில் அரங்கேற்றத்தின் போது, எப்படியெல்லாம் மாற்றங்களுக்கு ...

சிறந்த நிறுவனங்களில் கல்வி பெறுவதன் பயன் என்ன?

  நான் பிறந்து வளர்ந்தது, படித்தது ஒரு கிராமத்திலும் அதை ஒட்டிய சிறுநகரங்களிலுமே. அப்போது இணையத் தொடர்பு இல்லை. அப்போது அதிகமாகப் புத்தகங்கள் கூடக் கிடைக்காது. பள்ளிப் படிப்பை அரசுப் பள்ளியிலும் இளங்கலைப் படிப்பை அரசு உதவி பெறும் கல்லூரி ஒன்றிலும் முடித்தேன். நான் அதன் பிறகு முதுகலைப் படிப்பதற்காக சென்னைக்குப் போனேன். அது மிகப் பிரசித்தமான கல்லூரி. அங்கு போனதும் ஒரு விசயம் என்னை ஆச்சரியப்படுத்தியது - அங்குள்ள மாணவர்கள் நகரங்களில் உள்ள தனியார் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்து வந்தவர்கள். ஆனால் வகுப்பில் அவர்களை விட அதிகம் வாசித்தவனாக, அறிவு படைத்தவனாக நான் இருந்தேன். எங்களுடைய பேராசிரியர்கள் மிகச் சிறந்தவர்கள். அவர்களையும் வகுப்பில் பேசித் திணறடிக்க என்னால் முடிந்தது - அதற்காக நான் தனியாக வாசித்துத் தயாரித்துக் கொண்டு, என் மூத்த எழுத்தாள நண்பர்களுடன் விவாதித்து கேள்விகளைத் தயார் பண்ணிப் போவேன். கேள்விக்கு என்னென்ன பதில்கள் கிடைக்கும் என ஒரு கட்டத்தில் தெரிந்து போக அப்பதில்களுக்கும் கேள்விகளைத் தயார் பண்ணிக் கொண்டு போவேன். ஒரு கட்டத்தில் அதுவும் அலுத்துப் போக என்னைப் போன்ற இன்னொரு...

நவீன கவிதை குறித்த என் உரை

  அண்மையில் கார்த்திக் ராஜாவின் ஆங்கிலக் கவிதைகளைக் குறித்து ஆற்றிய உரையின் காணொளி இது. இதில் நவீன கவிதையை எப்படிப் புரிந்துகொள்வது, இரு உலகப் போர்களும் நவீனச் சிந்தனை மீது ஆற்றிய தாக்கம், அது இந்தியர்களை எப்படி ஆரம்பத்தில் பெரிதாகப் பாதிக்காமல் இப்போது ஒரு மாற்றம் வந்துள்ளது, வன்முறையின் அழகியல் என்றால் என்ன, கவிதையில் வெளியும் காலமும் எப்படி கையாளப்பட வேண்டும் என விரிவாகப் பேசியிருக்கிறேன். ஆர்வமுள்ளோர் கண்டிப்பாகப் பாருங்கள்: https://drive.google.com/file/d/1RmpQzpnoUyJH6_W7ew6CaAtKcDVfQ_G5/view?ts=6ad5914c

மனதுக்குள் நடக்கும் ஆட்டம்

  ரொம்ப நாட்களுக்குப் பிறகு இன்றைய இந்தியா நியுசிலாந்து டி20ஐ போட்டியை வெகுவாக ரசித்தேன். முதல் போட்டியில் 225 அடித்தும் வெல்ல முடியவில்லை என்பதை விட நியுசிலாந்தை மற்றொரு விசயம் வெகுவாக வருத்தியது - அவர்களால் பவர் பிளேயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சாம்ஸனும் வேகவீச்சாளர்களை அடிக்கிற பாணி அவர்களை மனதளவில் உலுக்கி எடுத்துவிட்டது. ஆகையால் இரண்டாவது போட்டியின் ஆடுதளத்தை மாற்றினார்கள். கொஞ்சம் நின்று வருகிற ஆடுதளத்தைத் தேர்வு பண்ணினார்கள். இந்தியா ஒரு சுழலருடன் ஆடுவதும் நியுசிலாந்து இரு சுழலர்களுடன் ஆடுவதும் மற்றொரு காரணம். ஆகையால் பவர் பிளேவை ஆதிக்கம் செய்தால் இந்தியாவை 140-150க்குள் சுருட்டலாம். முதலில் மட்டையாடும் பட்சத்தில் தாம் 170-180 அடித்தால் கூடப் போதும். அதை வைத்துத் தடுத்தாடலாம் என நம்பினர். இதே திட்டத்தைத்தான் அயர்லாந்தும் இங்கிலாந்தும் கூட அண்மையில் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தினர். ஆனால் அந்தத் திட்டம் இரண்டு கட்டங்களில் அவர்களுக்கு வேலை செய்யவில்லை. 1) அவர்களுடைய வேகவீச்சாளர்கள் ஒரு சிக்ஸர் / பவுண்டரி கொடுத்ததுமே பந்தின் நீளத்தை இழுத்து ஷார்...

தமிழரின் தாழ்வுணர்வு

  நான் நீண்ட காலமாக தமிழ் நவீன இலக்கியத்தைப் படித்து வருகிறவன். மொழிபெயர்ப்புகள் வழியாக இந்திய இலக்கியப் படைப்புகளையும் படிக்கிறவன். ஆங்கிலம் வழியாக நேரடியாகவும் மொழிபெயர்ப்பிலும் உலக இலக்கியத்தைப் படிப்பவன். நான் ஒரு எழுத்தாளரும் விமர்சகரும் கூட. என்னுடைய இந்த அனுபவத்தின் ஊடாக நான் தெரிந்துகொண்ட ஒரு உண்மை மொழிக்கும் இனத்துக்கும் தேசத்துக்கும் ஒரு படைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரத்துக்கும் பெரும் தொடர்பு இருக்கிறது என்பதே. மொழிபெயர்ப்பு வழியாகத் தமிழில் நாம் படிக்க நேர்ந்து கொண்டாடுகிற ஒரு படைப்பை ஒருவேளை அந்தப் படைப்பாளர் நம்மூரில் பிறந்து நம் மொழியிலே எழுதியிருந்தால் கொடுக்க மாட்டோம். நாம் மட்டுமல்ல உலக விருதுகள், விமர்சன அங்கீகாரம் எதுவும் அவருக்குத் தரப்பட மாட்டாது. இதை நான் அங்கலாய்ப்பாகச் சொல்லவில்லை - இதுவே எதார்த்தம். ஏனெனில் இதற்குப் பின்னால் முன்னூறு ஆண்டுகளுக்கு மேலான காலனிய ஆதிக்க வரலாறும், இனவாதமும் உண்டு. சில சுமாரான படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வரும்போதெல்லாம் எனக்குத் தோன்றும் - இவை நேரடியாகத் தமிழில் எழுதப்பட்டிருந்தால் நாம் தூக்கிப் போட்டு மிதித்திருப்போம...

போராட்ட விடுமுறை

  "போராட்டத்தில் இருந்து அடுத்த இரு வாரங்கள் விடுமுறை எடுப்போம். தீபாவளி கொண்டாடுவோம். குடும்பத்துடன் நேரம் செலவழிப்போம்." என அபிஜீத் தீப்கே பேசிய காணொளியைப் பார்த்தேன். அவரைப் பாராட்டத் தோன்றியது. ஏனென்றால் போராட்டம் செய்ய உற்சாகமான தொண்டர்களும் தன்னார்வலர்களும் தேவை. அரசுக்கு எதிரான போராட்டம் ஒரு யுத்தத்திற்கு சமானமானது. கடந்த முறை கரப்பான்களுக்கு சற்று சுலபமான முறையில் பாஜக அரசின் நடத்தை இருந்தது. பெரிதாகக் கைதில்லை, தடையில்லை. ஆனால் இம்முறை அடி பலமாக இருந்தது. எல்லா பாதைகளையும் முடக்கியதுடன் அவர்களுடைய தலைவர்கள் மீதும் பல வழக்குகளைப் போட்டுவிட்டார்கள். ஆகையால் தோல்வியை ஒப்புக்கொண்டு பதுங்கிவிட்டு திரும்ப வருவோம் என்கிறார். இது ஒரு பாராட்டத்தக்க அணுகுமுறை. நீங்கள் பழங்காலத்தில் மன்னர்கள் படையெடுத்துப் போரிடும்போது காட்டிய பொறுமையைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். பல ஆண்டுகள் திரும்பத் திரும்ப வந்து தாக்கிக் கொண்டு இருப்பார்கள். அடி பலமாக விழுந்தால் பின்வாங்குவார்கள். இம்முறை கரப்பான்கள் மிகவும் நொடிந்து விட்டிருக்கிறார்கள். ஆகையால் இனிமேலும் அவர்களை நெருக்க முடியாது என அறி...

என்னவொரு துயரமான மாற்றம்

  கரன் தாப்பர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எடுத்த பழைய நேர்முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் அரசியல் வாழ்க்கை என்றாலே ஏற்ற இறக்கமானதே, இன்று வெற்றி பெறுவோர் நாளை தோல்வி அடைவார், நாளை தோல்வி அடைபவர் அதற்கு அடுத்து வெல்வார் என்று சொல்கிறார். எனக்கு இன்றைய அரசியல் நிலை எந்தளவுக்கு மாறிவிட்டது என வியப்பேற்பட்டது. இதை ஜெயலலிதா நிச்சயமாக எதிர்பார்த்திருக்க மாட்டார். முன்பு நீங்கள் ஒரு தேர்தலில் தோற்றால், ஒன்றிய அரசின் காலாட்படைகளான சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகியோர் உங்களுக்கு எதிராக வழக்குகள் புனைந்தாலும், ஊடகங்கள் உங்களை மோசமாகச் சித்தரித்தாலும் நீங்கள் தேர்தலில் நின்று மக்களை ஏற்க வைத்து வென்றுவிட்டால் எல்லாமே சரியாகிவிடும். மக்களிடம் செல்வது ஒரு திறந்த வாய்ப்பாக கட்சிகளுக்கு அன்று இருந்தது. இன்று அது முழுக்க மாறிவிட்டது. அண்மையில் ஒட்டுமொத்த இந்திய வாக்காளர்களில் கிட்டத்த 10% மேல் தேர்தல் ஆணையம் தூக்கிவிட்டது. மோடியும் தான் 100 வயது வரை ஆள வேண்டும் என விரும்புகிறார். அது சாத்தியமே! மோடி இன்னும் பத்து ஆண்டுகள் ஆண்டால் இந்த வாக்காளர் நீக்கச் சதவீதம் 20-30% ஆக வளரக் கூடும். அ...

கரப்பான் பூச்சிகள் அடுத்தென்ன செய்ய வேண்டும்?

  கரப்பான் பூச்சிப் போராட்டங்கள் இரு கூறுகளாகப் பிரிந்திருக்கின்றன. ஒரு பக்கம் காங்கிரஸுடன் லெனினிய கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பின் நேஹா போரா; இன்னொரு பக்கம் ஆம் ஆத்மி பின்னணி கொண்ட தீப்கே, ரங்கா போன்றோர். ராகுல் காந்தி ஆம் ஆத்மி பின்னணி கொண்ட கரப்பான் பூச்சித் தலைவர்களை பாஜகவுக்கு எதிர்க்கட்சியாக, காங்கிரஸுக்குப் பதிலியாக முன்வைக்க சில சக்திகள் முயல்வதாகச் சந்தேகப்படுகிறார் (தமிழ்நாட்டில் திமுக இரு தரப்பு கரப்பான்களையும் ஆதரிக்கிறது, ராகுலுக்குச் சார்பாகப் பேசாமல் இருக்கிறது). இப்போது போராட்டம் யார் மூன்றாவது அணி என்பதில்தான். இன்னொரு பக்கம், கடந்த முறை விமர்சகர்கள் கேட்ட கேள்விக்கு ஓரளவுக்கு விடை கிடைத்துவிட்டது - முதல் நிலைப் போராட்டத்தின்போது பாஜக அரசு எப்படி தீப்கே, நேஹா போரா உள்ளிட்டோரை ஜந்தர் மந்தரில் தொடர்ச்சியாகப் போராட அனுமதித்தது? அப்போது பாஜகவுக்கு இப்போராட்டங்களைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம் என ஒரு உத்தேசம் இருந்திருக்க வேண்டும். அவர்கள் கரப்பான் பூச்சிகளைக் குறைத்து மதிப்பிட்டிருக்க வாய்ப்பு மிக மிகக் குறைவே. ஆனால் வடமாநில கல்லூரிகளின் மாணவர் அமைப்...

ஆங்கில வகுப்புகள் நவம்பரில் இருந்து

 

ஆன் கார்ஸனும் தேவதேவனும் - ஒற்றுமையும் மாறுபாடுகளும்

ஒரு கவிஞரைப் புரிந்துகொள்ள அவரைப் போன்ற ஒருவருடன் அவரை ஒப்பிட்டு மாறுபாடுகளை அலசுவது நல்ல அணுகுமுறை. ஆன் கார்ஸனின் கவிதைகள் எனக்குத் தமிழில் ஒருவரை நினைவுபடுத்துகின்றன: தேவதேவன். இந்த உலகில் நமது ஆன்மீகத் தத்தளிப்பு எவ்வாறு பல்வேறு இயற்கை சார்ந்த குறியீடுகளுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது என தேவதேவன் பேசுகிறார். கார்ஸன் இப்பிணைப்பு எவ்வாறு வெறும் பிரமையாக உள்ளது எனப் பேசுகிறார். இருவருக்குமான வித்தியாசம் தீவிரமான நம்பிக்கை, அது ஏற்படுத்தும் பக்தி vs அவநம்பிக்கை, அது ஏற்படுத்தும் காலத்தின், வெளியின் மீதான சுதந்திரம் என்பதில் உள்ளது. இருவரின் கவிதைகளிலும் பூமி, வானுலகம் முக்கியமான உருவகங்கள். இருவருமே நம் இருத்தலைக் குறித்துப் பேசுகிறார்கள். தேவதேவன் பறவைகளையும், மரத்தையும் உருவகங்களாகக் கொண்டு நாம் தொடர்ந்து ஒரு ஒப்பற்ற உண்மையை நாடும் ஆன்மாக்களாக இருக்கிறோம் எனச் சித்தரிக்கிறார். பறவைகள் ஆகாயம் எனும் தூய பிரக்ஞையைத் தொட்டு அதைக் கடந்து என்னவுள்ளது என வினவுகின்றன. மரங்களும் அதையே செய்கின்றன என்றாலும் அவற்றை விட பறவைகள் சுதந்திரமானவை என்கிறார். ஏனெனில் அவற்றுக்கு வேர்கள் இல்லை. வேர்கள் என்பவை...

துறைமுகம் இப்போது இல்லை (ஆன் கார்ஸன் கவிதைகள் 4)

  துறைமுகம் இப்போது இல்லை - ஆன் கார்ஸன் - தமிழில் ஆர். அபிலாஷ் சுவாசத்துக்கும் மரணத்துக்குமான பழங்காலப் போராட்டத்தில் கையளிக்கப்பட்டது மற்றோர் நாள் உறக்கம் வீட்டுக்காக சொல்லப்பட்ட விலையொன்றை ஏற்றுக் கொண்டோம். பாகங்களின் கூட்டில் பாகங்கள் எங்கே? மௌனமாக (அங்கு) காத்திருக்கின்றன இலைகளும் ஜன்னல்களும். சாயும் இரவை அறுக்கிறது எங்கள் காலியான துணிக்கயிறு. தேவலோக ஒளியினாலான துகிலை இழந்தமைக்காக அழுது புலம்பியபடி தேவதைகளும் குப்பைகளும் அழைக்கின்றன எங்களது தாழிட்ட வாயிற்கதவைக் கடந்து பறந்து போகையில். “NO PORT NOW In the ancient struggle of breath against death, one more sleep given. We took an offer on the house. In the sum of the parts where are the parts? Silently (there) leaves and windows wait. Our empty clothesline cuts the sloping night. And making their lament for a lost apparel of celestial light angels and detritus call out as they flow past our still latched gate.” Excerpt From Decreation Anne Carson வாசகக் குறிப்பு: நேரடியான சம்பவ விவரணை கொண்ட கவிதை இது. வீடுதான் இதன் மையம். வீடு சம...

நவீன உலகில் மௌன விரதம்

நான் அண்மையில் சென்னைக்கு வந்தபோது நண்பர்களிடம் நடந்த அரட்டையில் கேட்ட முக்கிய விசயம் ஏன் இப்போது பலரும் நாம் அனுப்பும் செய்திகளைப் பார்ப்பதோ அழைப்புகளுக்குப் பதில் அளிப்பதோ இல்லை என்பதே. ஒருவித டிஜிட்டல் சோர்வு எல்லாருக்கும் வந்துவிட்டது என உளவியலாளர்கள் கருதுவதாகப் படித்தேன். பதிலளிப்பது ஒருவித உளவியல் ஆற்றலை உறிஞ்சிக் கொள்கிறது, கட்டாயம் இல்லாத போது நாம் நம் உளவியல் ஆற்றலைப் பாதுகாக்கவே நினைக்கிறோம், கவனத்தை யாருக்கும் கொடுக்காமல் இருக்க நினைக்கிறோம். ஆனால் நண்பர்கள் என்னிடம் இன்னொரு தகவலைச் சொன்னார்கள்: சமூகவலைதளங்களால் எல்லாருமே நன்றாக இயல்பாக இருப்பதாக ஒரு பிம்பம் உருவாகிறது. ஆனால் அது உண்மையல்ல. கடுமையான மன அழுத்தத்தில், நெருக்கடியில் வாழ்கிறவர்கள் கணிசமாக உள்ளனர். அதையும் மீறித்தான் அவர்கள் நம்முடன் உரையாடுகிறார்கள். அவர்களில் சிலர் ஒரேயடியாக மௌனிக்கிறார்கள். சிலர் வீட்டுக்குள்ளேயே பெரும்பாலும் இருந்து கொள்கிறார்கள். சிலர் உளவியல் சிகிச்சையை எடுத்துக் கொள்கிறார்கள். சிலருக்கு பேசக் கூட நேரம் இருப்பதில்லை. அடுத்தடுத்து வேலைகள் - அலுவலகத்திலும் வீட்டிலும் - வந்துகொண்டே இருக்கின்ற...

இன்று அவளது ஐம்பதாவது திருமண நாளாக இருக்க வேண்டும் (ஆன் கார்ஸன் கவிதைகள் 3)

  ரொமானிய சுவரை நோக்கி உரையாற்றுகிறது குளிர் - ஆன் கார்ஸன் - தமிழில் ஆர். அபிலாஷ் ஒளி மட்டற்று ( சிறைப்படுத்தப்பட்டது ) மேலும் , நிழல்கள் விழக் காத்திருக்கின்றன தலைமறைப்புகளைப் போல . மூளை தட்டுகிறது இருமுறைகள் உப்புக்காக .   WOULD BE HER 50TH WEDDING ANNIVERSARY TODAY Cold orates upon a Roman wall. Light is extreme (caught) and shadows wait like hoods to drop. Brain taps twice for salt. Was it Ovid who said, There is so much wind here stones go blank. (Excerpt From Decreation, Anne Carson) வாசகக் குறிப்பு : இதுவும் ஒரு கீறல் ஓவியம் போன்ற கவிதைதான் . விளக்கக் குறிப்புகளோ விவரணைகளோ இல்லை . கதையாடல் கவிதையென்றாலும் யார் , என்ன , எப்படி , ஏன் ஆகிய தகவல்களை நாமே அனுமானிக்க வேண்டும் . இப்போது ஒவ்வொரு சொல்லும் ஒரு உருவகமாகிறது ( ஏனெனில் தலைப்பில் உள்ள திருமண பந்தம் குறித்த விபரம் இதைக் குறியீடாக்காமல் தடுக்கிறது ). ஐம்பதாவது திருமண நாளெனில் அவருக்கு வயது 70 இருக்குமா ? அவர் ரொமானிய வரலாற்றுச் சின்னங்களைக் காண வந்...