முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமகாலத்தின் மிகப்பெரிய நச்சுக்கிருமி

 நான் அண்மையில் எடுத்த மிகச் சிறந்த முடிவு என நான் கருதுவது இதுதான்: என்ன நடந்தாலும், எவ்வளவுதான் நண்பர்களும் அன்பர்களும் புகழ்ந்தாலும் வெளியாகும் தமிழ் மற்றும் மலையாளப் படங்களைப் பார்க்கக் கூடாது. இதனால் என் மனநிம்மதி வெகுவாக மேம்பட்டுள்ளது. அண்மையில் கூட என் மாணவர் ஒருவர் "நீங்க ஜெய்லர் 2 பார்த்துட்டீங்களா? அதன் கிளைமேக்ஸ் எனக்கு உங்கள் மின்சார சக்கர நாற்காலியைப் பார்த்ததும் நினைவுக்கு வந்துவிட்டது" என்றார். நான் சிரித்து எஸ்கேப் ஆகிவிட்டேன். இன்று மற்றொரு நண்பர் மற்றொரு படத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். "ஓ அப்படியா" என எஸ்கேப் ஆகிவிட்டேன். இந்த உணர்வு மிகப் பிரமாதமாக இருக்கிறது. மலையாளப் படங்களின் ரசிகர் மன்றத் தலைவியும் கேரள சினிமாவை ஒட்டுமொத்தமாக குத்தகைத்து எடுத்த கணக்கில் பேசுபவருமான தோழர் பல்லவி அடிக்கடி எதாவது ஒரு புதிய மலையாளப் படத்தை டிவியில் போட்டு என்னைச் சிக்க வைக்கப் பார்ப்பார். உடனே ஹெட்போன் மாட்டி என் மடிக்கணினியைத் திறந்து எதையோ எழுதத் தொடங்கி மெல்ல நகர்ந்து அப்படியே எஸ்கேப் ஆகிவிடுவேன். இது என் மனநிம்மதியை இன்னும் மேம்படுத்தி இருக்கிறது.

சிலர் பேஸ்புக்கில் இருந்தும் வெளியேறியதும் நிம்மதி வருவதாகச் சொல்வார்கள். என்னைப் பேஸ்புக் பெரிதும் பாதிப்பதில்லை. நாளைக்கே மோடி பதவி இழப்பார், ஒரு மணிநேரத்தில் விஜய் பனை மரத்தில் ஏறப் போகிறார், கூட்டணிக் கட்சிகள் பரபரப்பு என்கிற அரசியல் காணொளிகளைக் கூட யுடியூபில் தவிர்ப்பது எளிது. ஆனால் சினிமா அப்படி அல்ல. அது நம் ஆன்மாவை அரித்து ஒருவித எரிச்சலை விட்டுச் செல்கிறது. அடிப்படையில் நான் தென்னிந்திய சினிமா குறித்த நம்பிக்கையை முழுக்க இழந்துவிட்டேன். நான் பாலிவுட், ஹாலிவுட் படங்களை ஒருபோதும் பார்ப்பதில்லை. அவற்றிலும் பல ஆண்டுகள் கழித்தும் நினைவுகூரப்படுபவற்றில் சிலவற்றை மட்டுமே பார்க்கிறேன்.
அண்மைக் காலச் சினிமாவை நிராகரிப்பதில் வேறு ஒரு அனுகூலம் உள்ளது. அப்படி அது ஒரு பிரமாதமான படமாக இருந்தால் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் அது நினைவுகூரப்படும். வேற்று மொழிக்காரர்களும் அதைப் பற்றிக் குறிப்பிடுவார்கள். அப்படி நிலைக்காத ஒன்றை எதற்கு இப்போதே பார்க்க வேண்டும். நிலைக்காமல் போனால் நமக்குப் பார்த்து போலியாகக் கொண்டாட ஒன்றுமே இல்லாமல் போய் விடுமே எனும் அச்சத்தினாலா? எனக்கு அப்பயம் இல்லை.
வெகுமக்கள் சினிமா சமகாலத்தின் மிகப்பெரிய நச்சுக்கிருமி ஆகிவிட்டது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இன்று அவளது ஐம்பதாவது திருமண நாளாக இருக்க வேண்டும் (ஆன் கார்ஸன் கவிதைகள் 3)

  ரொமானிய சுவரை நோக்கி உரையாற்றுகிறது குளிர் - ஆன் கார்ஸன் - தமிழில் ஆர். அபிலாஷ் ஒளி மட்டற்று ( சிறைப்படுத்தப்பட்டது ) மேலும் , நிழல்கள் விழக் காத்திருக்கின்றன தலைமறைப்புகளைப் போல . மூளை தட்டுகிறது இருமுறைகள் உப்புக்காக .   WOULD BE HER 50TH WEDDING ANNIVERSARY TODAY Cold orates upon a Roman wall. Light is extreme (caught) and shadows wait like hoods to drop. Brain taps twice for salt. Was it Ovid who said, There is so much wind here stones go blank. (Excerpt From Decreation, Anne Carson) வாசகக் குறிப்பு : இதுவும் ஒரு கீறல் ஓவியம் போன்ற கவிதைதான் . விளக்கக் குறிப்புகளோ விவரணைகளோ இல்லை . கதையாடல் கவிதையென்றாலும் யார் , என்ன , எப்படி , ஏன் ஆகிய தகவல்களை நாமே அனுமானிக்க வேண்டும் . இப்போது ஒவ்வொரு சொல்லும் ஒரு உருவகமாகிறது ( ஏனெனில் தலைப்பில் உள்ள திருமண பந்தம் குறித்த விபரம் இதைக் குறியீடாக்காமல் தடுக்கிறது ). ஐம்பதாவது திருமண நாளெனில் அவருக்கு வயது 70 இருக்குமா ? அவர் ரொமானிய வரலாற்றுச் சின்னங்களைக் காண வந்...

இருளின் காலம்

ஊடகவியலாளர்களைக் கொத்துக்கொத்தாகக் கைது பண்ணுகிறார்கள் எனும்போதே நெருக்கடி நிலை ஆரம்பித்துவிட்டது ஊர்ஜிதம் ஆகிறது. அதுவும் போராட்டங்களைப் பதிவு பண்ணுவதற்குப் போனவர்களை. ஒட்டுமொத்தமாக போராடுபவர்களைத் தூக்கிச் சிறையில் வைப்பது, அவர்களைக் குறித்த விபரங்கள், காணொளிகள், செய்திகள் வெளிவராமல் பார்ப்பதே பாஜக அரசின் திட்டம். இனி அடுத்து என்னவெல்லாம் செய்வார்கள்? எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டாளர்களை கண்ட இடத்தில் கைது, மறைமுகமாக பல ஊடகங்கள் முடக்கம், மக்கள் சில பகுதிகளில் பயணிக்க மறைமுகத் தடை, எந்தெந்த விசயங்கள் ஊடகங்களில் பேசப்படலாம் என்பதற்கான மறைமுக அறிவுறுத்தல் எனப் போகும். முடிவில் எதிர்க்கட்சிகள் தாம் ஆளும் மாநிலங்களில் போராடினால் ஆட்சிக் கலைப்பு நடக்கும். ஆளுநர் ஆட்சி வரும். இப்போதைக்கு நீதிமன்றங்கள் பிணை வழங்குவதால் சிறிது அவகாசம் போராளிகளுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் கிடைத்துள்ளது. வெளிவர முடியாத சட்டங்களில் கைது நடக்கும்போது நிலைமைத் தீவிரமாகும். ராகுல் காந்தி இப்போராட்டங்களை முன்னறிந்து பாராளுமன்றத்தில் பேசியது நினைவுக்கு வருகிறது. அதாவது கரப்பான்கள் தோன்றும் முன்பே இப்படியான போராட்ட...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.