முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஊடகவியலாளர்கள் மீதான சங்கிகளின் தாக்குதல்

நியூஸ் 18 சேனலின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து குணசேகரன் விலகுகிறார் எனும் செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன் . ஹசீப் முகமதைப் போன்றே இவரும் பதவி விலக வற்புறுத்தப்பட்டாரா அல்லது வேறு என்ன நடந்தது எனத் தெரியவில்லை . ஹிந்துவின் என் . ராம் ஒரு பேட்டியில் சொன்னதைப் போல நியூஸ் 18 நிர்வாகத்துக்கு இவர்களை நீக்கும்படி தில்லியில் பிரதமர் அலுவலகத்தில் இருந்தே நேரடியாக ஆணை வருகிறது . அதாவது சில சமூக நோக்கும் நேர்மையும் கொண்ட ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிக்க கால்கள் நமது ஜியின் வரவேற்பறையில் இருந்து நீள்கின்றன . முதலில் ஹசீப் முகமதுக்கு என்ன நடந்தது என அறிவோம் . இப்போது குணசேகரனுக்கும் அது நடக்கிறது . வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இந்துத்துவாவை எதிர்த்துப் பேசும் அனைத்து நெறியாளர்களும் வெளியே அனுப்பப்பட வேண்டும் எனும் திட்டம் அவசரமாய் நிறைவேற்றப்படுகிறது . விகடன் போன்ற பத்திரிகைகளில் வேலை பார்த்தவர்களுக்கும் இது நடந்தது . உயிர்மை இணையதளமும் பேஸ்புக்கில் பகிரப்படக் கூடாது என இவர்களால் முடக்கப்பட்டது . இதன...

அண்ணாமலையும் ரஜினியும்: தலைவிரித்தாடும் விஷப்பாம்புகள்

ரஜினிக்கும் அண்ணாமலை ஐ.பி.எஸ்ஸுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அதில் ஒன்று இப்படி நாவில் நஞ்சைத் தடவிக் கொண்டு சாந்த சொரூபமாக முகத்தை வைத்தபடி பேசுவது. இவரைப் போன்றவர்களின் உடம்பில் இருந்து ஒரு லிட்டர் ரத்தம் எடுத்தால் அதைக் கொண்டு பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கான பூச்சி மருந்தைத் தயாரிக்கலாம். அவர் பேசுவதை கவனியுங்கள்:  1) இட ஒதுக்கீட்டை நான் ஆதரிக்கிறேன். ஆனால் பாஜக இட ஒதுக்கீட்டை மறுப்பதை கண்டிக்க மாட்டேன். 2) பாஜகவின் அடிமட்டத் தலைவர்கள் சரியில்லை. அவர்கள் சரியான கருத்தை தலைமைக்கு கொண்டு செல்லாததாலே பாஜக இப்படி தவறாக முடிவெடுக்கிறது. 3) நான் அரசியல்வாதி அல்ல, சாமான்யன். ஆகையால் அரசியல் பேச மாட்டேன். இப்போது என் எதிர்வினைக்கு வருகிறேன்: 1) பாஜகவின் இந்துத்துவ கொள்கை என்பதே வர்ணாசிரமம் சார்ந்தது, இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது. இதை 'சிங்கம்' அண்ணாமலை அறிய மாட்டாரா? அறிவார். ஆனால் இப்போதைக்கு அவரது ஆசான்கள் குருமூர்த்தியும் ரஜினியும் என்பதால் பாஜகவை விமர்சிக்கக் கூடாது என கவனமாக இருக்கிறார். முடிவெடுப்பது நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் கும்பல், நிறைவேற்றுவது பிரதமர் ஜி. ஆனால் அண்ண...

சாருவை ஒரு பிரதியாக வாசித்தல்

நண்பர்களே, சாருவை வாசிப்பதில் பல குழப்பங்கள், இடர்கள் நமக்கு உள்ளன. இவை அவர் நவீனத்துவ எழுத்தாளர்களிடம் இருந்து வேறுபட்டவர் என்பதாலோ, ஒரு transgressive எழுத்தாளர் என்பதாலோ மட்டுமல்ல. மிக முக்கியமாக சாரு தன் காலத்து பின்நவீன எழுத்தாளர்களிடம் இருந்தே முழுக்க வேறுபட்டவராக தனித்துவமானராக இருக்கிறார். அவர் தன் படைப்புகளை தன்னிடம் இருந்து துண்டித்து படைப்பாளி-படைப்பு எனும் இருமையை ஏற்படுத்துவது இல்லை.  இன்று ஒரு எழுத்தாளனுக்குள் மூவர் இருக்கிறார்கள் - தனிமனிதன் (அவன் சமூக மனிதனாகவும் இணைய உலகில், நுகர்வு உலகில் இருப்பதால் இரண்டையும் சேர்த்தே தனி-சமூக மனிதனாகப் பார்க்கிறேன்), எழுத்தாளன், படைப்புலகம். இந்த பிளவு இல்லாத சொற்பம் எழுத்தாளர்களே நம் மத்தியில் இருக்கிறார்கள். இதற்கு முன்னோடியாக உடனடியாய் நம் நினைவில் தோன்றும் படைப்பாளிகள் ஜி.நாகராஜனும், புக்காவஸ்கியும். அந்த அளவுக்கு படைப்பூக்கத்தில் ஏற்படும் தனிமனித உடைவில், நெகிழ்நிலையில் ஒரு தனிமனிதன் தன்னையும் ஆட்படுத்துவது சுலபம் அல்ல. சாருவுக்கு அது இயல்பாகவே வருகிறது. அவர் தன்னையே எழுதிக்கொள்கிறார், அவர் எழுதும் முகநூல் குறிப்புகள், சாட் ...

தல்ஸ்தாயும் தஸ்தாவஸ்கியும் - இரு ரஷ்ய மேதைகள் குறித்து ஒரு அறிமுக உரை

ஸ்டான்லி குப்ரிக் - ஒழுக்க சமூகத்தின் நிதானத்துக்கும் ஒழுக்க மீறலின் விடுதலைக்கும் நடுவே

எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக். இயக்குநர் ராம் தான் அவரை எனக்கு அறிமுகம் செய்தார். Full Metal Jacket அவரது கணினியில் ஒரு இரவில் பார்த்தது நினைவில் இருக்கிறது. பிறகு சிடியில் அவரது லோலிட்டா, Eyes Wide Shut, A Clockwork Orange பார்த்தேன். Clockwork Orange அப்போது ரொம்பவும் பிடித்திருந்தது. அந்த பாணியில் ஒரு நாவல் எழுத வேண்டும் என்று கூட ஆசைப்பட்டேன். The Shining ஒரு அபாரமான படம். Eyes Wide Shut ஒருவித புதிர்மை கொண்ட அழகான படம். அண்மையில் டிவியில் திரும்பப் பார்த்தேன். என்ன ஒரு அழகான படம். பார்க்கப் பார்க்க புது விசயங்களைத் திறந்து காட்டியபடி இருக்கும் (வழவழப்பான பெண்ணுடல்களை மட்டும் சொல்லவில்லை.)  ஒருவித ஒழுக்கவியலும் அதை மீறிச்செல்கிற எதிர்மனமும் ஒரே சமயம் அவரிடம் உண்டு. படம் ஆரம்பிக்கும் போது ஒழுக்கத்தின் எதிர் திசையில் சென்று விட்டு கிளைமேக்ஸில் கிறித்துவ ஒழுக்கம், பாரம்பரிய குடும்ப அமைப்பின் அமைதிக்கு திரும்பி விடுவார். ஆனால் இந்த நுட்பமான அரசியலை, எப்போது எந்த குப்ரிக் நம்மிடம் வருகிறார் என்பதை நமக்கு சுலபத்தில் புலப்படாதவாறு நுட்பமாய் செய்து விடுவார். அவர் எ...

ஜனநாயக விழுமியங்களை ஒரு பொருட்டாக மதிக்காத இந்துத்துவா

//"சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை இல்லாமலே ஒரு திட்டத்தைத் தொடங்கவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் இந்த வரைவு வழி வகை செய்கிறது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையின்றி தொடங்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் இந்த திட்டங்கள் குறித்து பிறகு ஒரு குழு போடப்பட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பு யார் அதனை முடக்குவார்கள். எளிமையாகக் கேட்கிறேன் ஒரு ஸ்டெர்லைட் ஆலையை மூட வைக்க எத்தனை பேர் உயிர் துறக்க வேண்டி இருந்தது," என்று கேள்வி எழுப்புகிறார் சுந்தராஜன். "குறிப்பாக இன்னொரு விஷயத்தைக் கூற வேண்டுமானால், சூழலுக்கு ஊறு விளைவிக்கும் தொழிற்சாலைகளை எதிர்த்து சில அமைப்புகள் நீதிமன்றங்களுக்குச் செல்கின்றன அல்லவா. அதனைத் தடை செய்கிறது இந்த வரைவு. ஒரு நிறுவனத்தை எதிர்த்து குடிமை சமூகமோ, தனி நபர்களோ இனி நீதிமன்றங்களுக்குச் செல்ல முடியாது. அரசு அமைப்புகள் மட்டுமே செல்ல முடியும் என்கிறது இந்த வரைவு. இது மோசமான ஆபத்தாக முடியும்," என்கிறார் அவர். சூழலியல் தாக்க மதிப்பீடு 2...

பேஸ்புக் ஏன் உங்களுக்கு வருமானம் தருவதில்லை?

வனிதா விஜயகுமார் அண்மையில் தான் யுடியூப் சேனல் ஆரம்பித்தார் . அவரது ஆரம்ப கட்ட பிரபல்யம் , அடாவடிப் பேச்சு , துணிச்சல் , சுயபிரஸ்தாபம் , சுவாரஸ்யமான மேக் அப் காணொளிகள் , தொடர்ந்து பார்க்க வைக்கும் அதே நேரம் ரொம்ப சொதப்பலான , அசுத்தமான சமையல் குறிப்பு காணொளிகள் ( ஒருமுறை அவர் செய்த நெய்ச்சோறு குழைந்து விட்டது , பிட்ஸா பாதி வேகாமல் வந்தது - ஆனாலும் எனக்கு வலிக்கலியே என்பதைப் போல அதை தானும் சாப்பிட்டு தன் குழந்தைகளையும் சாப்பிட வைத்து ரொம்ப நல்லா இருக்கில்ல என சொல்ல வைத்தார் .) என பதிவேற்று நிறைய ரசிகர்களைப் பெற்றார் . அடுத்து தன் திருமணத்தை நேரலையாகக் காட்டி , அதில் பீட்டர் பாலை உதட்டோடு முத்தம் பதித்து , அதன் பிறகு இதைக் கண்டு பீட்டர் பாலின் மனைவி கண்டிக்க , அதை வனிதா கண்டிக்க , நடுவே லஷ்மி ராமகிருஷ்ணன் , கஸ்தூரி , அடிக்கொரு தரம் துப்புகிற சூர்யா தேவி என ஆளாளுக்கு நடுவே புகுந்து அடிதடி கலவரம் பண்ண கடந்த சில வாரங்களாக மொத்த தமிழகமே வனிதாவைப் பற்றித்தான் பேசுகிறது . இதில் “ யாரும்மா நீ வனிதா ?”...