வாழ்த்துக்கள் சு.வெங்கடேசன். இந்த இந்தித் திணிப்பு பிரச்சனையை, இதன் வரலாற்றை நான் எனது “நான் ஏன் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறேன்?” நூலில் பேசி உள்ளேன். இந்த விசயத்தில் காங்கிரஸ், பாஜக அரசுகள் ஒரே மாதிரியே இருந்துள்ளன என வரலாறு காட்டுகிறது. காங்கிரஸாவது கொஞ்சமாவது மாற்றுக்குரல்களை காதுகொடுத்து கேட்கும் மாண்பு கொண்டது, அவ்வப்போது சமரசம் பண்ணிக்கொள்வது. ஆனால் பாஜக ஒரு ரௌடி அரசு. “சொல், கேட்காவிட்டால் அடித்து பணிய வை” என்பதே அவர்களின் அணுகுமுறை. இந்த முரட்டுத்தனத்தின் விளைவாகவே மாநில உரிமை குறித்த விவாதங்கள் அண்மையில் அதிகமாகி உள்ளன. அதன் நீட்சியே சு.வெங்கடேசன் இப்போது மத்திய அரசுடன் எழுப்பி உள்ள பிரச்சனையும் அவரது எதிர்ப்பு அரசியலும். இன்னொரு விசயம்: இந்தி மையமான இந்துக்களின் இந்தியா எனும் கருத்தாக்கம் நமது தமிழ் தேசிய வரலாற்றை விட நெடியது தான். அது ஜெர்மானிய, பிரஞ்சு, ஆங்கிலேய Indology ஆய்வாளர்கள் ஆசியா, அதன் மதம், கலாச்சாரம், மொழி வரலாறு குறித்து ஆய்வு செய்த காலத்திலேயே துவங்கி விட்டது. சிலர் இந்த வரலாறு யுவான் சுவாங் இந்தியாவுக்கு பயணம் வந்து குறிப்புகள் எழுதிய கால...