முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நேர்முகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலர் தின நேர்முகம்

  காதலர் தினத்தை ஒட்டி தினகரன் நிருபர் ஒருவர் என்னிடம் ஒரு குறுநேர்முகத்தைச் செய்தார். அக்கேள்வி பதிலை இங்கே பகிர்கிறேன்: 1.⁠ ⁠காத்திருத்தல் vs உடனடித் தீர்வு: சங்க அகத்திணையில் 'காத்திருத்தல்' (முல்லை) என்பது காதலின் மிகப்பெரிய தவமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்வது போல காதலையும் 'இன்ஸ்டன்ட்' ஆக எதிர்பார்க்கும் இன்றைய 'ஜென் இசட்' மனநிலை, காதலின் ஆழத்தை நீர்த்துப்போகச் செய்கிறதா? அல்லது இதுதான் காலத்தின் நவீன வடிவமா? பதில்: சங்க அகத்திணையில் காத்திருத்தல் கடுந்துன்பமான அனுபவம். அது காதலுக்கு ஆழம் கொடுக்கும் என்பது சங்கக் கவிதைகளின் கருத்தல்ல. அது பின்னர் வந்த பக்திக் கவிதைகளின் மனநிலை - அதாவது அனுபவத்தை முடிவிலி வரை முடிவற்றுத் தள்ளிப் போட்டபடியே இருத்தல். இன்று நாம் (அதாவது ஜென் ஸெட் யுகத்தில்) காதல் குறித்த பழமையான விழுமியங்களையும் சுமக்கிறோம் (கற்பு, சார்ந்திருத்தல், தீராக் காதல்); காதலைப் பண்டமாக பாவிக்கும் நுகர்வு மனநிலையையும் கொண்டிருக்கிறோம். இது நுகர்வுப் பண்பாட்டால் மட்டுமே ஏற்படவில்லை. மிதமிஞ்சிய தரவுகள், நேரம் குறைந்து விட்டத...