முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரிஸ்க் எடுக்காதபோது எதை இழக்கிறோம்?

டேனியல் கெல்மானின் "இயக்குநர்" நாவலைப் படித்தபோது ஏற்பட்ட முதல் இப்படி ஒரு நாவலை யாராவது தமிழில் எழுதியிருந்தால் என்னவாகி இருக்கும்? ஒன்றும் ஆகியிருக்காது. பெரிய சலனங்கள் எழுந்திருக்காது. ஐரோப்பாவிலும் ஆங்கிலத்திலும் இந்நாவல் பெரிதாக விவாதிக்கவும் பாராட்டவும் படுகிறது. புக்கர் குறும்பட்டியலில் நுழைந்திருக்கிறது. இவ்விதத்தில் ஐரோப்பிய படைப்பாளிகள் அதிர்ஷ்டசாலிகள். இந்தியாவில் பிறந்து இந்திய மொழிகளில் எழுதுவது பிறக்கும் முன்னே இறப்பதற்கு சமானமானது. அடுத்து இத்தகைய நாவலைத் தமிழில் எழுத வாய்ப்புண்டா எனக் கேட்போம். குறைவே. பொதுவாக தமிழில் நாம் நிறைய ஆராய்ச்சி செய்து வரலாற்றுத் தகவல்களைச் சேகரித்து நாவல் எழுதுவதில்லை. தமிழில் நவீனத்துவ காலம் முதற்கொண்டே உள்ள இலக்கியப் போக்கு ஒருவரது தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் வரலாற்று நிகழ்வுகளைத் தொகுப்பதுதான். வெகுஜன நாவல்களில் உள்ள போக்கு அரசர்களை தமிழ்தேசிய அடையாளமாக, சாகசக்காரர்களாக, சாதனையாளர்களாகச் சித்தரிப்பது, அவர்களை நம்மூர் தேசியத் தலைவர்களுடன் இணைவைக்கும்படியாக எழுதுவது(நேரு-இந்திரா - "கல்கியின் பொன்னியின் செல்வன்"...

கனமற்று - ஆர். அபிலாஷ்

மஞ்சளித்து உலர்ந்த சின்னஞ்சிறு இலைகளின் தூவல் என் தலையிலும் தோளிலும் முதுகிலும் கனமற்ற மழையைப் போல அவை நழுவ மறுக்கின்றன என் மேலிருந்து காற்றில் எங்கோ கூட்டமாய்ப் பறக்கும் மஞ்சள் பட்டாம்பூச்சி சிறகுகள்

சின்னஞ்சிறு வானவில் - ஆர். அபிலாஷ்

  மரக்கொப்புகள் வரிசை வரிசையாக இடுங்கின பாதையில் இரு மருங்கும் சத்தமே எழாமல் விழுவதே தெரியாமல் போர்க்காட்சிகளைத் துல்லியமாக வர்ணங்கள் தழுவிட காட்டும் டிவி கடை எல்.இ.டி திரையில் இடைவிடாமல் பொழிகிற குண்டுகளை, எய்யப்படுகிற ஏவுகணை போல மழை என்னை அச்சுறுத்துகிறது நான் இரு பக்கமும் பார்த்துக் கொண்டே அவசரமாக நடக்கிறேன் என் புறங்கையில் ஈரம் படிகிறது ஒரு குழந்தை ஒப்புவிக்கும் எழுத்துக்களைப் போல என் சப்பாத்துகளைத் தொட்டுத்தொட்டு துளிகளின் வரிசை சப்தங்கள் திரும்பிப் பார்க்கையில் மறைகின்றன என் சிறுவயது மழைகள் நினைவுக்கு வருகின்றன சரளைக் கற்களை வாரி அடித்ததைப் போன்ற மழை கண்ணாடிச் சில்லுகள் காற்றின் குறுக்கே பறப்பதைப் போன்ற மழை இடிமுழக்கமும் குளத்துக்குள் யாரோ தொபுக்கெனக் குதிப்பதான ஒலிகளும் நிரம்பிய அடைமழை வானின் கதவைப் படாரெனச் சாத்தியதைப் போன்ற மழை நினைவுகளைத் துலக்கமாகக் கழுவி திகைத்து நிற்க வைக்கும் மழை தேம்பலை, கண்ணீர்க் கசிவைக் கேட்டபடி பேசிக்கொண்டே போகும் மழை போகிற போக்கில் ஜன்னல்களுக்குள் அள்ளித் தெளித்துப் போகும் கதவின் விளிம்பின் வழி விரல்கள் நுழைத்து எட்டிப் பார்க்கும் மழை வீடு முழுக...

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

முதல் பயிலரங்கு அனுபவம்

  முதல் இணையவழிப் பயிலரங்கு நன்றாகப் போயிற்று. என்னுடைய முன்னாள் மாணவர் ஒருவரும் சில புதிய இளம் நண்பர்களும் கீதாஞ்சலி ப்ரியதர்ஷினியும் கலந்து கொண்டார்கள். அடுத்து கதாபாத்திர அமைப்பு குறித்து சில பயிலரங்குகளைத் திட்டமிட இருக்கிறேன். அடுத்த பயிலரங்குகளை மாலையில் நடத்த நினைக்கிறேன். அது அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தோருக்குக் கலந்து கொள்ள உதவியாக இருக்கும் (நேர வித்தியாசம்). கால அளவையும் இரண்டு மணிநேரங்களாக மாற்ற உள்ளேன். அடுத்தப் பயிலரங்கில் சந்திப்போம்.

அவுட்லைனும் சினிமாவும்

  ஒரு நண்பர் இக்கேள்வியைக் கேட்டார்: நாளைய இணையவழிப் பயிலரங்கில் இளம் திரைக்கதையாளர்கள் கலந்து கொள்ளலாமா? அவுல்டைனிங் எனப்படும் கதையின் வடிவைச் சுருக்கமாக எழுதி வைத்துக் கொள்வதும், அதைத் தொடர்ந்து செறிவுபடுத்துவதும் நாவல், நெடுங்கதைகளுக்கு மட்டுமல்ல, திரைக்கதைக்கும் முக்கியமான திறனே. ஒரே வித்தியாசம் திரைக்கதையில் அகவுலகைச் சித்தரிக்க பெரும்பாலும் பிம்பங்களையே நம்பியிருக்க வேண்டும். அல்லாவிடில் வசனங்கள். ஆகையால் திரையில் கதை வெளிமுகமாகச் சொல்லப்பட வேண்டும்; திரைக்கதை ஆசிரியர்கள் ஒரு கதையை காட்சித் துண்டுகளாக, நிகழ்வுத் தொடர்களாகச் சிந்திக்கிறார்கள், கற்பனை பண்ணுகிறார்கள். ஆனால் இவற்றைத் தொகுத்து அர்த்தபூர்வமான கதையாக்க கதை வடிவைத் தெரிந்திருப்பது அவசியம். ஆகையால், நான் நாளை காலையில் நடத்துகிற பயிலரங்களில் இளம் திரைக்கதையாளர்களும் இயக்குநர்களும் கலந்துகொள்வது அவர்களுக்கு வெகுவாக உதவும். சினிமாவில் இன்று இல்லாத ஒன்றை அவர்கள் கொண்டு வரலாம்: அது கதை.

பயிலரங்குக்கான கடைசிக் கட்ட அறிவிப்பு

  நாளை காலை நான் ஆங்கிலத்தில் நடத்தப் போகிற இணையவழிப் பயிலரங்குக்கான கடைசிக் கட்ட அறிவிப்பு இது. விருப்பமுள்ளோர் கலந்து கொள்ளுங்கள். உங்கள் பரிச்சயங்களுடன் இத்தகவலைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் இதைத் தொடர்ந்து கதையெழுதுவது குறித்து வேறு பல பயிலரங்குகளையும் நடத்த உள்ளேன். அதாவது புனைவெழுத்துப் பயிற்சிக்கான பல பகுதிகளை எடுத்து தனித்தனி பயிலரங்குகளாக நடத்தவிருக்கிறேன். நாளைய பயிலரங்கே இதன் அடித்தளத்தைக் கொடுக்கும் என்பதால் அதில் பங்கேற்பது அவசியமானது.

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.

முற்றதிகாரத்தின் முன் படைப்பாளிக்கு வரும் தடுமாற்றங்கள்

  டானியல் கெல்மானின் "இயக்குநர்" நாவல் இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஜிக்களின் கீழ் அவர்களுடைய நிதியைப் பெற்றுப் படமெடுத்த ஒரு தலைசிறந்த இயக்குநரான பாப்ஸ்ட் என்பவரின் வாழ்க்கையைப் பேசுகிறது. அவர் எப்படி அறத்தைக் குறித்துக் கவலைப்படாமல், வதை முகாம்களில் மக்கள் கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க கலையை முன்னெடுப்பதே ஒரு கலைஞனின் பணி எனும் லட்சியத்துடன் செயல்பட்டார் என்பதை நகைமுரணுடன் சித்தரிக்கிறது. ஒருவிதத்தில் இந்நாவல் இன் று பலருக்கும் பொருத்தமானதாகப் படும் - இன்றைய காலம் அபடி. இன்று பல படைப்பாளிகள் நடுங்கிப் போய்த்தான் இருக்கிறார்கள். முதலீட்டிய சக்திகளும் வலதுசாரி ஆட்சியாளர்களும் கைகோக்கும்போது படைப்பாளிகள் தமக்கு முடிவெடுக்க சுதந்திரமே இல்லையென உணர்ந்ந்து ஒரேயடியாக அடிபணிவார்கள். அடிபணிவதென்றால் ஆட்சியாளர்களுக்குப் பிரச்சாரம் செய்வதல்ல. மௌனம் காப்பது. இந்த மௌனத்துக்கு அவர்கள் மனம் பலவித நியாயங்களைக் கற்பிக்கும். கலைஞர்கள் அரசியல் பேசக் கூடாது, அரசியலில் அக்கறை கொள்ளக் கூடாது, தன்னுடைய கலையில் கவனம் செலுத்தி அதில் ஆழம் காண்பதே கலைஞர்களின் இலக்கு என இவர்கள் நம்புவா...

கதையமைப்பு எனும் நுட்பம்

  ஒரு நாவலையோ நீண்ட கதைகளையோ ஒரு மன எழுச்சியில் பரபரப்பாக எழுதி முடிக்கலாம். எழுதத் தொடங்கி எங்கோ திசையைத் தொலைத்து விடலாம். அதேநேரம் இந்த உணர்வெழுச்சியானது ஒரு கவித்துவமான வரைபடத்தின் மீதே தோன்றி நம்மை நடத்துகிறது. இந்த வரைபடத்தை ஒரு குறியீடு அல்லது உருவகம் என்று புரிந்துகொள்ளலாம். இதுதான் கதையமைப்பு என்றும் சொல்லப்படுகிறது. கதையமைப்பு உள்ளிருந்து தோன்றாதபோது நம்மால் வெளியில் இருந்தும் உருவாக்க முடியும். இப்போது நாம் உருவாக்கியுள்ள கதையமைப்பு நம்மைத் தூண்டி ஆவேசப்பட வைக்கும். அதுவே நம் எழுத்தைச் செலுத்தும். இந்த நுட்பமானது ஒரு பார்முலாவை வைத்து எழுதுவது எப்படி என்பது அல்ல. மாறாக கதையைக் குறித்துச் சிந்தித்து அதைக் கொண்டு நமக்குள் இயங்கும் ஒரு ஆதாரமான உணர்வைக் கிளர்த்துவது, ஒரு சிந்தனையை வெளியே தோண்டி எடுப்பது. இதனாலே கதையமைப்பைத் திட்டமிடுவது ஒரு அடிப்படையான புனைவுப் பயிற்சி என பல படைப்பாளிகள் நினைக்கிறார்கள். இதையே வரும் ஞாயிற்றுக் கிழமை நான் பயிலரங்கில் சொல்லித் தர இருக்கிறேன். விருப்பமுள்ளோர் ஒரு சிறு கட்டணத்தைச் செலுத்தி விபரங்களை கூகிள் படிவத்தில் சேர்த்து விட்டுக் கலந்து கொள...