இக்கட்டுரையில் இமையத்தின் கேள்வி முக்கியமானது. ஏன் மாணவர்கள் நாள் முழுக்க கழிப்பறையை பயன்படுத்தாமல் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறார்கள். ஏன் ஒரு பள்ளி நிர்வாகம் கழிவை வெளியேற்றுவதை முக்கியம் என நினைப்பதில்லை? ஏன் போதுமான கட்டமைப்பு வசதிகள், நேரம் இதற்கு வழங்கப்படுவதில்லை? நான் பள்ளி மாணவனாய் இருக்கும் போது வகுப்பில் இருந்து கழிப்பறை தொலைவில் இருக்கும். போலியோ காரணமாய் என்னால் வேகமாய் நடக்க இயலாது. நான் கழிப்பறையை நெருங்கும் போது மணி அடித்து விடும். இடைவேளை முடிந்து விடும். இதனால் நான் நாள் முழுக்க மூத்திரத்தை அடக்க கற்றுக் கொண்டேன். இதை சமாளிக்க அதிகமாய் தண்ணீரும் அருந்த மாட்டேன்.