முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

”அகல்யா” சிறுகதை குறித்து...

எனது அகல்யா” சிறுகதை குறித்து சத்யானந்தன் தன் பிளாகில் எழுதியுள்ள விமர்சனம் இது. இதை பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்
ஆர். அபிலாஷின் சிறுகதை – அகல்யா
சமகால களன் கள், கரு, சூழல் மற்றும் பண்பாட்டுச் சிக்கல்கள் என்றெல்லாம் எதுவுமே கிடையாது அனேகமான தமிழ் எழுத்தாளர்களுக்கு. பல காலமாக இருந்து வரும் பிரச்சனைகளை நூறாவது முறையாக எழுதுவது அவர்களுக்கு மிகவும் பிடித்தது. அதற்கு இணையாகப் பிடித்தது சமகால எழுத்துக்கள் எதுவுமே சரியில்லை என்று சுமார் முப்பது நாற்பது வருடங்கள் பின்னோக்கிப் போய் விடுவது அல்லது தன் எழுத்துக்களைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்வது.
ஆர். அபிலாஷ் விதிவிலக்காக அனேகமாக எழுத்தாளர்கள் தொடாத ஒரு கதைக்களனை எடுத்துக் கொண்டிருக்கிறார். சமகால ஆண் பெண் உறவுச் சிக்கல்கள். உண்மையில் நம் எழுத்தாளர்களுக்கு முற்றிலும் தெரியாத களன் இது இல்லையா. அபிலாஷ் மிகவும் நுட்பமாகக் கையாண்டிருக்கிறார் திராநதி செப்டம்பர் 2015 இதழில் அகல்யா என்னும் சிறுகதையில்.

கதை அழகாக கவனமாக நெய்யப்பட்டது. எனவே கதை என்று ஒன்று ஒரு வரி வேண்டுமானால் வரும்- ஒரு இளம் பெண்- உடலுறவு பற்றிய ஒவ்வாமை எதுவுமில்லாதவள் வலிய வந்து ஒரு இளைஞனுடன் ஒரு இரவு தங்குகிறாள். அவர்கள் உடலாலாலோ மனதாலோ அணுக்கமாகமலேயே அந்த இரவு கடந்து செல்கிறது.
இந்தக் கதையில் நான் மிகவும் ரசித்த இடம் அந்தப் பெண் முக்கிய பாத்திரமான இளைஞனிடம் தன் தோழிகளின் ஆண் நண்பர்கள் தன்னிடம் பாலியல் ரீதியான அணுக்கம் காட்ட முற்படுகிறார்கள் என்னும் புகார். தன் மனம் கவர்ந்தவன் என்று தான் கருதும் ஆணிடம் தவறாமல் ஒரு பெண் தனக்குப் பாலியல் ரீதியாக சிறிதாகவோ பெரிதாகவோ ஒரு தொல்லை ஏற்பட்டது என்று தெரிவிக்காமல் இருக்கவே மாட்டாள். அபிலாஷ் சமகாலப் பெண் மனதை ஆண் பெண் உறவு கடந்து செல்லும் புதிய மைல்கற்களை சரியாக சித்தரித்து இருக்கிறார்.
கதையின் மிக முக்கியமான இடமாக நான் கருதுவது மழையில் நனைந்தவளாக அவன் அறைக்கு வரும் அவள் அவனது உடைகளை அணிந்தாலும் அதன் மேல் தனது ‘ரெயின் கோட்’டை அறைக்கு உள்ளேயே அணிவது.
ஆண் பெண் இரண்டு வெவ்வேறு உலகங்கள். இது எல்லாக்காலத்திலும் அப்படியே தான் இருந்தது. இருக்கிறது. ஆனால் ஆணின் அணுக்கம் பற்றிப் பெண்ணுக்கும் பெண்ணின் அரவணைப்பைப் பற்றி ஆணுக்கும் உள்ளார்ந்த கனவுகளும் எதிர்பார்ப்புக்களும் இருக்க வேண்டும். அது இல்லாத பட்சத்தில் ஆண் பெண் ஈர்க்கப்படுவதும் ஒரு நல்லுறவு அவர்களுக்குள் உருவாவதற்கும் வாய்ப்பே இல்லை.
இன்றைய பெண்ணின் முதல் கனவு தன் படிப்பு வேலை இவையாகவே இருக்க வேண்டும். அது சரிதான். ஆனால் அதற்காகத் தரும்விலைகளில் ஒன்று ஆணின் அணுக்கம் பற்றிய கனவுகள். என்றும் நினைவு கூரத்தகுந்த தருணங்கள் ஆண் பெண் இடையே நிகழ படிப்பு மற்றும் தொழில் சார்ந்த அழுத்தங்களைத் தாண்டி நிகழ்கின்றன அபூர்வமாய். அனேகமாக நிகழ்வதே இல்லை. இது தட்டையான சிந்தனை உள்ள சமூகத்தின் பார்வைப்புலனுக்கு உள்ளேயே இல்லை. அபிலாஷ் நம்பிக்கை தரும் எழுத்தாளர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...