எங்கள் பக்கத்து தெருவில் எங்களை ஒட்டின வீட்டில் இருப்பவர் ஒரு மார்வாரி . பால்கனியில் இருந்து பார்த்தாலே அவரது வீடு தெரியும் . அவர் சிறிய அளவிலான வணிகர் . ராஜஸ்தானை சேர்ந்தவர் . தீவிர மோடி பக்தர் . கடந்த ஆண்டு கொரோனாவை விரட்டும் முயற்சிகளில் ஒன்றாக அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒன்பது மணிக்கு அந்த தெருவே விளக்கணைத்து அகல்விளக்குகள் , மெழுகுவர்த்திகள் ஏற்றியது . தட்டுகளால் ஓசையெழுப்பி கோ கொரோனா என ஆர்ப்பரித்தது . எங்கள் வீட்டில் மட்டுமே அந்த திருப்பணியை யாரும் செய்யவில்லை . அப்போது அந்த நபர் என்னிடம் சிநேகமாக கடிந்து கொண்டார் . “ நீங்கள் ஏன் மெழுகுவர்த்தி கூட ஏற்றவில்லை ?” நான் பதிலளிக்காமல் புன்னகைத்து விலகிக் கொண்டேன் . இந்த வருடம் இரண்டாவது அலையின் போது ஊரில் அவருடைய உறவினர்களே நோய்த்தொற்றில் மடிந்து விட்டார்கள் . அவருக்கும் மோடி மீதிருந்த நம்பிக்கை வெகுவாக குறைந்து விட்டது . தில்லியில் 16,000 கோடிக்கு மோடி மாளிகை கட்டுவது பற்றி பேசிக் கொண்டிருந்த போது சோர்வாக “ அடுத்த தேர்தலில் மோடி ஜ...