முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கல்ட் அமைப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதக் கடவுள் எனும் இழிவு

மதமும் அரசியலில் மிக மோசமான கூட்டு. அரசியல் தலைவரை கடவுளாக்குவது இன்னும் ஆபத்தானது. இது கல்ட் வழிபாட்டை நோக்கி நகர்த்தக் கூடியது. இவர்கள் விஜய்யை அங்குதான் எடுத்துச் செல்கிறார்கள் என்று நான் எழுதினேன் நேற்று சட்டமன்றத்தில் நடந்துவிட்டது. கடவுளே என்று இவர்கள் அழைப்பதும் இவர் புன்னகையுடன் தலையசைப்பதும் பார்க்க அருவருப்பாக இருக்கிறது. இதற்கு இவர்கள் கடவுள் அறிய என்று கடவுளை நேரடியாகக் குறித்திருந்தாலும் இவ்வளவு கேவலமாக இருந்திருக்காது. இப்போது அரசியலை வழிபாடாக்கி விட்டர்கள். மனித வழிபாடு கூட அல்ல, மனிதக் கடவுள் வழிபாடு. இம்மாதிரி மதவாத கல்ட் அரசியல் கிறிஸ்தவம், இந்து மதத்திற்கு அப்பாலானது. பொதுவாக எல்லா கல்ட் அமைப்புகளிலும் அப்படியே நடக்கும். ஒரு கடவுளை ஒழித்துவிட்டு மனிதரைக் கடவுளாக்குவார்கள். அதன்பிறகு அவர் எந்த விதிமுறையையும் சட்டத்தையும் மீற, மனித நேயத்தை ஒழிக்க, மனிதர்களை அடிமையாக்க ஒரு தனி உரிமை கிடைத்துவிடும். மக்களாட்சி அமைப்புக்கு அப்பால் தலைமையையும் ஆட்சியையும் இது கொண்டு போகத் தொடங்கி விட்டது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. ஆறு மாதம் பொறுப்போம், பத்து மாதம் கவனிப்போம் என்பதெல...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...