முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனிதக் கடவுள் எனும் இழிவு



மதமும் அரசியலில் மிக மோசமான கூட்டு. அரசியல் தலைவரை கடவுளாக்குவது இன்னும் ஆபத்தானது. இது கல்ட் வழிபாட்டை நோக்கி நகர்த்தக் கூடியது. இவர்கள் விஜய்யை அங்குதான் எடுத்துச் செல்கிறார்கள் என்று நான் எழுதினேன் நேற்று சட்டமன்றத்தில் நடந்துவிட்டது. கடவுளே என்று இவர்கள் அழைப்பதும் இவர் புன்னகையுடன் தலையசைப்பதும் பார்க்க அருவருப்பாக இருக்கிறது. இதற்கு இவர்கள் கடவுள் அறிய என்று கடவுளை நேரடியாகக் குறித்திருந்தாலும் இவ்வளவு கேவலமாக இருந்திருக்காது. இப்போது அரசியலை வழிபாடாக்கி விட்டர்கள். மனித வழிபாடு கூட அல்ல, மனிதக் கடவுள் வழிபாடு.
இம்மாதிரி மதவாத கல்ட் அரசியல் கிறிஸ்தவம், இந்து மதத்திற்கு அப்பாலானது. பொதுவாக எல்லா கல்ட் அமைப்புகளிலும் அப்படியே நடக்கும். ஒரு கடவுளை ஒழித்துவிட்டு மனிதரைக் கடவுளாக்குவார்கள். அதன்பிறகு அவர் எந்த விதிமுறையையும் சட்டத்தையும் மீற, மனித நேயத்தை ஒழிக்க, மனிதர்களை அடிமையாக்க ஒரு தனி உரிமை கிடைத்துவிடும். மக்களாட்சி அமைப்புக்கு அப்பால் தலைமையையும் ஆட்சியையும் இது கொண்டு போகத் தொடங்கி விட்டது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. ஆறு மாதம் பொறுப்போம், பத்து மாதம் கவனிப்போம் என்பதெல்லாம் கட்சிகளின் தலையெழுத்து. ஒரு தனிமனிதராக, எழுத்தாளராக என்னால் இதை வேடிக்கை பார்க்க இயலவில்லை. அவலமாக உள்ளது. இவர்களை மிகக் கடுமையாகக் கண்டிப்பது அவசியம். எதுவும் நடக்கும், எதையும் செய்யலாம், எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை, இதெல்லாம் தனிப்பட்ட முடிவுகள் என நினைத்ததால்தான் இங்கு நித்தியானந்தாவும் ஜக்கியும் தோன்றினார்கள். அவர்களுடைய அரசியல் வடிவமே மோடியும் இங்கு விஜய்யும்.
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இங்கு மதத்தைப் போதிக்கலாம், பரப்பலாம், பின்பற்றலாம். ஆனால் சட்டமன்றம், அரசு அலுவலகங்கள் முழுக்க மதத்திற்கு அப்பால் இருக்க வேண்டும். மேம்போக்காகக் கூட அங்கு வழிபாடுகளோ மனிதக் கடவுள்களோ இருக்கலாகாது. குற்றங்களையும் ஒடுக்குமுறைகளையும் நியாயப்படுத்த மிகச்சிறந்த வழி மனிதக் கடவுள்களை உருவாக்குவதே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...