நாட்டின் நடக்கும் குற்றங்களின் மொத்தப் பழியையும் தவெக ஆட்சி மீது சுமத்தக் கூடாது என்பதை ஏற்கிறேன். குற்றங்களை மொத்தமாகத் தடுப்பது அல்ல, குற்றங்களில் இருந்து அடிப்படையான பாதுகாப்பளிப்பதும், குற்றங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பதான நம்பிக்கை அளிப்பதும்தன அரசின் பணிகள். அதாவது ஒரு கட்டமைப்பும் அதற்கான நடைமுறையும் உள்ளதாகக் காட்டுவதற்கே அரசும் அமைச்சரவையும் முதல்வரும் இருக்கிறார்கள். சூலூர் சிறுமியின் கொலைச் சம்பவத்தில் காவல்துறை வேகமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்தது பாராட்டத்தக்கது. காவல் அதிகாரிகள் எப்படி ஊடகங்களிடம் பேசினார்கள், எவ்வளவு சீரியஸாகத் தெரிந்தார்கள் என்பது முக்கியமல்ல. அது optics. அதேநேரம், தவெக அரசு மேற்சொன்ன opticsக்காகத்தான் அக்குழந்தையின் சடலத்தை அவசரமாக எரித்தார்கள். தாயிடம் கூடக் காட்டாமல் அநீதி இழைத்தார்கள். குழந்தையின் தாய் ஆவேசமாகப் பேட்டியளித்ததும் உறவினர்கள் போராட்டம் நடத்தியதும் ரூட்ஸ் மீடியாவை கலங்க வைத்துவிட்டது. குழந்தையின் சடலத்தை வைத்து எதாவது ஊர்வலம் போவது, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் வந்து துக்கம் விசாரிப்பது, அறிக்கை விடுவதெல்லாம் நட...