முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"ஏன் வாசிக்க வேண்டும்?" குறித்து மா. அண்ணாமலை

  நூலனுபவம் ( 21 ) நூல் : "ஏன் வாசிக்க வேண்டும்?" ஆசிரியர் : ஆர். அபிலாஷ் வெளியீடு : எழுத்து பிரசுரம் பக்கங்கள் : 176 வகை : கட்டுரை நூலின் தலைப்பினைக் கொண்டு இந்நூல் என்ன சொல்ல வருகிறது என ஒற்றை முடிவிற்கு என்னால் உடனடியாக வர முடியவில்லை. காரணம் அபிலாஷ். தான் எடுத்தாளும் எந்தக் கருத்தையும் அதன் பின்புலத்தோடு விசாரணைக்குட்படுத்துவது அபிலாஷின் பாணி. செடிகளாய் விதைகளிலிருந்து முளைத்து கிளை பரப்பும் விருட்சங்கள். அபிலாஷின் படைப்புகளோ கிளை பரப்பும் மரங்களை படைப்பெனும் விதைகளுக்குள்ளேயே கொண்டவை. அம்மாதிரியான படைப்புதான், ஏன் வாசிக்க வேண்டும்? என்பதும். பொது, இலக்கியம், தத்துவம், உளவியல் என பிரித்து எழுதியுள்ளார். ஆனால் நூலின் பெரும்பான்மையை பொதுவாசிப்பும் இலக்கியவாசிப்புமே எடுத்துக் கொண்டுள்ளன. வாசிக்க யாரேனும் சொல்லித் தர வேண்டுமா? என நாம் வினவினால் அபிலாஷ் ஆமாம் என்கிறார். வாசிப்பு பற்றிய நான்கு கேள்விகள் - பகுதியில் அவர் எழுப்பும் எந்த வினாக்களுக்கும் தீர்க்கமான பதில் இல்லை. ஆனால் அக் கேள்விகளுக்கு உறுதியற்ற பதில்களை அளிப்பதன் மூலம் வாசகனை...

தமிழ்ச் சமூகத்தின் விருப்பங்களைக் குறித்து கருத்துக் கணிப்புகள் சொல்வதென்ன?

  நான் அடுத்துச் சொல்லப் போவதெல்லாம் வெளியாகியுள்ள கணிப்புகளின் அடிப்படையிலே. அனைத்து தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளின் சராசரியை எடுத்தால் திமுக கூட்டணி கிட்டத்தட்ட 120 இடங்களும், அதிமுக 80 இடங்களும் த.வெ.க 8-12 இடங்களும் பெறுகிறார்கள். அதாவது திமுகவினர் 2021 தேர்தலில் இருந்து ஒரு பின்னடைவைச் சந்தித்தாலும் ஆட்சியைத் தக்க வைக்கிறார்கள். வலுவான எதிர்க்கட்சி ஒன்று அமைகிறது. அதிமுக திமுகவுக்கு நெருங்கி வருகிறது. மற்றபடி அதிமுகவை த.வெ.க காலி பண்ணிவிட்டு இரண்டாவது இடத்தைப் பெறும் என்பது வெறுங்கனவாகிறது. அடுத்து 5-15 ஆண்டுகளில் நடைபெறும் தேர்தல்களில் ஒன்று அதிமுக முன்னேறி வந்து திமுகவைத் தாண்டிச் செல்லும் அல்லது த.வெ.க தன்னைத் தக்க வைத்து 25-30 இடங்களைப் பெறும் மூன்றாவது அணித் தலைமைக் கட்சியாகும். பொதுவாக சமூகத்தில் வரும் மாற்றங்கள் ஊடகங்களில் பெருக்கிச் சொல்லப்படுவதைப் போல ஊழிப்பேரலையாக வருவதில்லை. 1930களில் நீதிக்கட்சி தேர்தலில் நின்று வென்ற போது அது 17 வருடங்களாக ஆதிக்கம் பண்ணிய கட்சியாக இருந்தது. பின்னர் வந்த தேர்தல்களில் நீதிக்கட்சி தோற்று காங்கிரஸ் ஆட்சியமைத்து தி.க உருவாகி வளர்ந்த...

வாக்காளர் ஊழலை நாம் ஏன் தண்டிப்பதில்லை?

  வாக்குக்கு பணம் கொடுப்பது, பெறுவது எல்லாமே குற்றம்தான். அதில் எவ்வித நியாயப்படுத்தலும் எடுபடாது. பத்தாண்டுகளுக்கு முன் வந்த செய்தியின்படி ஓராண்டு வரை தண்டனை வழங்கப்படலாம். ஆனால் நாம் அனேகமாக யாரும் இக்குற்றத்துக்காக கைது பண்ணப்படுவதைக் காண்பதில்லை. வாக்காளர் ஆணையத்தின் விதிமுறைகளிலும் இக்குற்றம் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுவது வாக்களிப்பு ரகசியமாக நடப்பதால் ஒரு வாக்காளர் வாக்குக்காகப் பணம் வாங்கினாலும் அவர் தன் வாக்கை தான் பெற்ற லஞ்சத்தின்படி சம்மந்தப்பட்டவருக்குத்தான் அளித்தாரா என்று உறுதிப்படுத்த இயலாது என்பது. ஆனால் இதுவும் நீதிமன்றத்தில் நிரூபிப்பதில் உள்ள சிக்கலே. எங்கெல்லாம் பணம் வழங்குகிறார்கள் எனும் செய்தி கிட்டத்தட்ட எல்லார் காதுக்கும் வந்துவிடுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தபின்னர் தேர்தல் ஆணையத்துக்கு அபரிதமான அதிகாரம் வந்துவிடுகிறது. அவர்கள் நினைத்தால் அங்கங்கே சிலரைக் கைது பண்ணலாம். அப்படி ஒன்று நடந்தாலே பணத்தைக் கொடுப்பதிலும் வாங்குவதிலும் அச்சம் நிலவும். பெயருக்காவது தேர்தல் ஆணையம் இதைச் செய்ய வேண்டும், ஆனால் செய்வதில்லை...

Phenomenon

  ஜெயமோகனின் தீவிர வாசகர் / தொண்டர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு அதிர்ச்சிகரமான கருத்தைச் சொன்னார். "அண்ணே, உண்மையில் விஜய்யின் த.வெ.கவும் அவரது தொண்டர்களாக மாற்றப்பட்ட ரசிகர்களும் ஒரு புதிய தோற்றப்பாடு (phenomenon) அல்ல. நான் இதைக் குறித்து சொல்லப்போகும் ஒரு விசயம் உங்களுக்கு பயங்கர அதிர்ச்சியாகக் கூட இருக்கும். அதைக் கேட்டு நீங்கள் வெடித்துச் சிரித்து விடவும் கூடும். விஜய் அரசியல் செய்துள்ள ஊடுருவல் ஏற்கனவே இலக்கியத்தில் ஜெயமோகன் செய்துவிட்டார். விஜய் ரெண்டாவதுதான். த.வெ.க என்பது விஷ்ணுபுரத்தின் சற்றே வெகுமக்கள்தனமான ஒரு வடிவம்தான். தற்குறித்தனம் என்று நாம் சொல்கிறோமே அதை இலக்கியத்தில் தோற்றுவித்து வெற்றிகரமாகப் முதலில் பரிசோதித்தவர் ஜெயமோகன். விஜய் அதை அரசியலில் விஜய் அறுவடை செய்திருக்கிறார். அவ்வளவுதான். நீங்கள் எங்களைத்தான் முதலில் ஜோம்பிகள் என்று அழைத்தீர்கள். நாங்கள் அதைக் கண்டுகொள்ளாமல் பெருகிக் கொண்டே இருந்தோம். உங்கள் ஆட்கள் எல்லாருமே எங்கள் பக்கம் வந்து சேர்ந்தார்கள். இப்போது தவெக தொண்டர்களை அவ்வாறு அழைக்கிறீர்கள். அவர்களும் இன்று தமிழ்நாட்டு அரசியலையே தீர்...

சர்வாதிகார ஆதரவாளர்கள்

  நான் அண்மைக் காலமாக சில நண்பர்களிடம் உரையாடும்போது மக்களாட்சி குறித்த கடுமையான தாக்குதலை எதிர்கொள்கிறேன். மக்களாட்சி குறித்து பல விமர்சனங்களைக் கொண்டுள்ள எனக்கே அவர்களின் வன்மத்தைப் பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் நான் மக்களாட்சியை இன்னும் decentralize செய்ய வேண்டும், மக்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும், இந்திய ஜனநாயகத்தில் அத்தகைய போக்குகள் இல்லை எனும் கவலை கொண்டவன். ஆனால் இவர்களோ மக்களுக்கு ஜனநாயகத்தைக் கையாளத் தெரியாது, அவர்களுக்கு சர்வாதிகாரமே சிறந்தது எனும் கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பேசும் நண்பர்கள் தவறாமல் பாஜக ஆதரவாளர்களாகவும் இருக்கிறார்கள். லஞ்சம் பற்றிப் பேசினால், வளர்ச்சி பற்றிப் பேசினால் மக்களாட்சியில் லஞ்சம் மட்டுமே இருக்கும், ஆட்சியாளர்கள் பொறுப்பாக இருக்க மாட்டார்கள், மக்கள் சிந்தித்து முடிவெடுக்க மாட்டார்கள், மக்களுக்கு பகுத்தறிவே இல்லை எனக் கூறிவிட்டு, அதனால் என்று ஆரம்பித்து 'மாட்டை' இழுத்து சர்வாதிகாரத்தில் கட்டிவிடுகிறார்கள். மக்களாட்சியில் ஒரு பிரச்சினை இருக்கிறதென்றால் மக்களாட்சியே ஒரு பிரச்சினை எனப் பொருளில்லை என விளக்க...

அறிவுஜீவி அடியாட்கள் எனு மாய ரூபங்கள்

  இன்று நான் ருத்திரமூர்த்தி என்ற ஒரு நண்பரின் சமூகவலைதளப் பக்கத்தில் வந்த பின்னூட்டத்தைப் படித்து சிரித்துக் கொண்டிருந்தேன். நண்பர் ஒரு பிரசித்தமான அறிவுஜீவி அடியாள். பின்னூட்டத்தில் ருத்திரமூர்த்தியிடம் ஒருவர் இவ்வாறு கேட்கிறார்: "அமித் ஷா பத்திரிகை ஆரம்பித்து உங்களுக்கு எழுத வாய்ப்பளித்தால் எழுதுவீர்களா?" அதற்கு ருத்திர மூர்த்தி "ஓ எஸ், அதற்கு என்ன எழுதுவேனே. எனக்குத் தேவை என் கருத்துக்களை பொதுமக்களிடம் பரவலாக்க ஒரு வெளி. அதை யார் அளித்தாலும் பயன்படுத்திக் கொள்வேன்." என்று பதிலளிக்கிறார். ருத்திரமூர்த்தி எதையும் தன் நாவன்மையால் நியாயப்படுத்த முடியும் என நம்பக் கூடியவர். உ.தா., ஊழலால்தான் எளிய மக்கள் சமூக நீதியைப் பெறுகிறார்கள் என்று நிறைய கலைச்சொற்களுடன் ஐம்பது பக்க கட்டுரையை எழுதுவார். ஊழலால் தான் சமூக நீதி சாத்தியமாவதில்லை என்று கட்டுரை எழுதிக் கொடுங்கள் என்று கேட்டால் அதையும் அதே தீவிரத்துடன் சில கருத்துக்களை வளைத்து ஒடித்து எழுதிக் கொடுப்பார். எனக்கு இந்த பயங்கர தன்முனைப்பின் காரணமாகவே ருத்திர மூர்த்தியை ரொம்பப் பிடிக்கும். தான் செய்கிற கிறுக்குத்தனங்களை உணரா...

"I Have the Streets" - ரவிச்சந்திரன் அஷ்வினின் (பாதி) சுயசரிதை

குழந்தைப் பருவத்தில் அஷ்வினுக்கு ஏற்பட்ட உடல் உபாதைகள், அதனால் அவர் கிரிக்கெட் ஆடும்போதும், அன்றாட வாழ்க்கையை நடத்தும்போதும் ஏற்பட்ட தடைகளும், அவரது பெற்றோர் அவருக்கு அளித்த ஆதரவும்தாம் இப்புத்தகத்தின் துவக்கம். சொல்லப்போனால் அஷ்வின் தன் இளமையைப் பற்றி நேர்முகங்களில் பேசும்போதும் இதையேதான் சொல்லி ஆரம்பிக்கிறார். ஆனால் நேர்முகங்களில் பார்க்கையில் கிடைக்காத அனுகூலம் புத்தகமாக இதைப் படிக்கையில் உண்டு - அஷ்வினைக் குறித்து சிறிது வேறுவிதமாக யோசித்துப் பார்க்க இப்புத்தகம் அனுமதிக்கிறது. அஷ்வினுக்கு தனது பெற்றோரிடத்து மிகுந்த அன்பும் நன்றியுணர்வும் உள்ளதைப் போன்றே ஒருவித குற்றவுணர்வும் இருக்கிறது - தன் தகுதிக்கு மீறி தன் பெற்றோர் தன்னைப் போற்றி வளர்த்தார்கள், தன் வளர்ச்சிக்காக மிகுந்த தியாகங்கள் செய்தார்கள் எனும் எண்ணம் அவரைச் செலுத்துகிறது. இதை நான் ஒரு 'அனாதைக் குழந்தை மனநிலை' என்பேன். நான் இதை என் அப்பாவின் தலைமுறை ஆட்களிடம் அதிகம் கண்டிருக்கிறேன். பெற்றோர் ஒன்றுமே பெரிதாகச் செய்திருக்க மாட்டார்கள். சோறு போட்டிருப்பார்கள், கஞ்சி ஊற்றியிருப்பார்கள், வருடத்திற்கு ஒரு செட் துணி வாங்க...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...

கோமாளித் தலைவர்

  விஜய்யின் கிறுக்குத்தனமான பேச்சைக் கேட்டேன். ஒன்று தோன்றியது - நமது தற்போதைய சமூகத்துக்கு மிகப் பொருத்தமான தலைவர் அவர்தான். சமூகம் கேளிக்கைகளாலும் வெற்றுக் கூச்சல்களாலும் நிறைந்திருக்கும்போது இத்தகையோரே தலைவர்களாக முடியும். லோசா வேடிக்கை வினோத சமூகமாக (society of the spectacle) மாறும்போது கோமாளிகளே அங்கு மன்னர்கள் ஆக முடியும் என்கிறார். கோமாளிகளாக அல்லாதவர்கள் அங்கு தம்மைத் தக்க வைக்க கோமாளித்தனங்கள் நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பர். கோமாளித்தனம் என்று நான் சொல்வது எதையும் தீவிரமாக நம்பாமல், பற்றிக் கொள்ளாமல் கைத்தட்டையும் பாராட்டையும் சிரிப்பையும் தூண்டுவதற்காக எதையாவது ஒன்றைப் பேசுவது, செய்வது, உடல்மொழியில் தான் சொல்வது, செய்வது எல்லாம் வேடிக்கைதான், ஆனால் அதற்காக தன்னை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என சிரிக்க வைத்துக்கொண்டே எச்சரிப்பது. உணர்ச்சிவசப்பட்டு சவால் விட்டுவிட்டு அடுத்த நொடியே உடலை நெகிழ்த்தி நடனமாடுவதைப் போல கேலி பண்ணிச் சிரித்தபடிப் பேசுவது, எகிறுவது, தலையாட்டுவது. பண்படுவதன் பின்னுள்ள நிலைதான் கோமாளித்தனம். அதனாலே நாம் அதை சினிமாவிலும் நாடகத்திலும் ரசிக்கிறோம். ப...

சறுக்கல்

  இது சும்மா ஒரு கணிப்புதான். எனக்கு ஆரம்பத்தில் விஜய் 7% வாக்குகளைப் பெறுவார் என்று தோன்றியது. இப்போதுள்ள பரபரப்பைப் பார்க்க திமுக மீதுள்ள அதிருப்தி வாக்குகள் அவரிடம் கொஞ்சம் அதிகமாகப் போகும் எனத் தோன்றுகிறது - அதாவது 12-15% உச்சபட்சமாக. அதுவே ஒரு பெரிய சாதனைதான். குறைந்தது 10%. இதனால் விஜய்க்கு என்ன லாபம் என்பதைவிட திமுகவுக்கும் அதிமுகவுக்கும் என்னவிதமான பாதகங்கள் என்பதையே பலரும் பேசுகிறார்கள். திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சற்று அதிகம் பெற்று ஆட்சியமைப்பதற்கு இது வழிவகுக்கும். அதாவது ஒரு சற்றே பலவீனமான அரசு அமையும். எதிர்க்கட்சிகள் பலமடையும். எப்போதுமே அரசியலில் ஒரு பலத்த குற்றச்சாட்டு வந்தால் அதை மறுக்காமல் பரிசீலிப்பதாக 'நடிக்க' வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்தீகரிப்பதாக ஒரு சடங்கில் ஈடுபட வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக 'ஊழல் எதிர்ப்பு' பற்றிப் பேச வேண்டும். மக்களுக்கு அள்ளிக் கொடுப்பதான பிம்பத்தை உருவாக்க வேண்டும். அப்போதே அரசு தன்னைப் புதுப்பிக்க இயலும். மக்களுக்கு அந்த அரசு மீதான அபிமானம் அப்போது பலமடங்கு அ...

கமல் தவற விட்ட வாய்ப்பு

  விஜய் என்னதான் ஒரு கோமாளித் தலைவர் என்றாலும் அவர் தன் கட்சியை ஆரம்பித்தது முதலே வைத்த 'பிட்ச்' எனக்குப் பிடித்திருந்தது. (அவருக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தவர்கள் விளம்பர நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.) ஏரியல், சர்ப் எக்ஸல் விளம்பரங்களில் கறைதான் 'ஒரே ஒரு எதிரி'. விஜய்க்கு ஸ்டாலினே ஒரே எதிரி. இன்னும் சொல்லப்போனால் அவர் திமுக என்றுகூட கூட முயலவில்லை. தொடர்ச்சியாக ஸ்டாலின் சார் என்றே பேசிப்பேசி தன்னை அவருக்குச் சமமாக பாவித்துக் கொண்டார். என்னதான் அவர் பாஜகவை விமர்சிக்காதது சிலருக்குப் பிரச்சினையாகத் தெரிந்தாலும் அதுவும் ஒரு நல்ல உத்திதான் எனத் தோன்றுகிறது - இது மாநிலத் தேர்தல். இங்கு பாஜகவைத் தாக்கிப் பேசினால் அதற்குத்தான் திமுக இருக்கிறதே என்று மக்கள் யோசிப்பார்கள். திமுக பாஜகவுக்குப் பணிந்து விட்டார்கள் (ஒருவேளை நம்புவார்கள்), நானே பாஜகவின் ஒரே எதிரி என்றால் நிச்சயமாக நம்ப மாட்டார்கள். தொடர்ந்து ஊழலை முன்னிலைப்படுத்தியது, அதுவும் ஸ்டாலின் ஊழல் செய்கிறார் என்று அதை ஹைலைட் செய்தது, அதிகமாக வரி வாங்குவதாக, அவரது ஆட்சியினால் விலைவாசி அதிகரித்துவிட்டது ...

போதை மருந்துப் பயன்பாடும் தத்துவப் போதாமையும்

  “Today, the mass consumption of marijuana, cocaine, ecstasy, crack, heroin, etc., is a response to a social environment that pushes men and women towards quick and easy pleasure, that immunizes them against worries and responsibility, allowing them to turn their backs on any self-knowledge that might be gained through thought and introspection, two eminently intellectual activities that are now considered tedious in our fickle, ludic culture. “This need for distraction, the driving force of the society in which we live, stems from a desire to flee from the void and anguish that we feel when we are free, and forced to make decisions such as what to do with our lives and our world, especially in challenging times. For millions of people drugs now have the role, previously played by religions and high culture, of assuaging doubts and questions about the human condition, life, death, the beyond, the sense or senselessness of existence.” Excerpt From Notes on the Death of Culture Mari...