முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Phenomenon



 

ஜெயமோகனின் தீவிர வாசகர் / தொண்டர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு அதிர்ச்சிகரமான கருத்தைச் சொன்னார்.
"அண்ணே, உண்மையில் விஜய்யின் த.வெ.கவும் அவரது தொண்டர்களாக மாற்றப்பட்ட ரசிகர்களும் ஒரு புதிய தோற்றப்பாடு (phenomenon) அல்ல. நான் இதைக் குறித்து சொல்லப்போகும் ஒரு விசயம் உங்களுக்கு பயங்கர அதிர்ச்சியாகக் கூட இருக்கும். அதைக் கேட்டு நீங்கள் வெடித்துச் சிரித்து விடவும் கூடும். விஜய் அரசியல் செய்துள்ள ஊடுருவல் ஏற்கனவே இலக்கியத்தில் ஜெயமோகன் செய்துவிட்டார். விஜய் ரெண்டாவதுதான். த.வெ.க என்பது விஷ்ணுபுரத்தின் சற்றே வெகுமக்கள்தனமான ஒரு வடிவம்தான். தற்குறித்தனம் என்று நாம் சொல்கிறோமே அதை இலக்கியத்தில் தோற்றுவித்து வெற்றிகரமாகப் முதலில் பரிசோதித்தவர் ஜெயமோகன். விஜய் அதை அரசியலில் விஜய் அறுவடை செய்திருக்கிறார். அவ்வளவுதான். நீங்கள் எங்களைத்தான் முதலில் ஜோம்பிகள் என்று அழைத்தீர்கள். நாங்கள் அதைக் கண்டுகொள்ளாமல் பெருகிக் கொண்டே இருந்தோம். உங்கள் ஆட்கள் எல்லாருமே எங்கள் பக்கம் வந்து சேர்ந்தார்கள். இப்போது தவெக தொண்டர்களை அவ்வாறு அழைக்கிறீர்கள். அவர்களும் இன்று தமிழ்நாட்டு அரசியலையே தீர்மானிக்கும் இடத்திற்குப் போய் விட்டார்கள். நீங்கள் எங்களை ஆர்.எஸ்.எஸ்ஸின் பண்பாட்டு அமைப்பு என்றீர்கள். நாங்கள் பொருட்படுத்தாமல் முன்னேறிப் போய்க் கொண்டே இருந்தோம். நீங்கள் தவெகவை பாஜகவின் பி டீம் என்றீர்கள். அவர்கள் தேர்தலையே ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள். தமிழில் தோன்றிய முதல் கல்ட் அமைப்பு எங்களுடையது. அடுத்ததுதான் தவெக. முதல் phenomenon எப்போதுமே நாங்கள்தாம். தமிழ்ச் சிந்தனையின் மையத்தில் எப்போதும் இருப்பவர் ஜெயமோகன். அவர் என்ன சொல்வாரோ எனும் பதற்றத்தில் எல்லாரையும் வைத்திருக்கிறார். தமிழ்ச் சமூகத்தின் நகர்வுகளைத் தீர்மானிக்கும் இப்போது இருப்பவர் விஜய். அப்போது என்ன செய்வாரோ எனும் பயத்தில் மொத்த சமூகத்தையும், அரசியல் சிந்தனையாளர்களையும் இப்போது வைத்திருக்கிறார்."
என்னால் அவர் சொன்னதை ஒரேதடியாக மறுக்க முடியவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...