முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்" - அறிமுகம் 2

இந்த அத்தியாயத்தில், முதிய துறவி யாரைக் குறிக்கிறார், "சாம்பலை மலையின்மேல் சுமந்து செல்வது" என்று நீட்சே கூறுவதன் பொருள் என்ன,  ஜரதுஷ்ட்ரா காட்டில் தங்குவதற்குப் பதிலாக மனிதர்களிடையே திரும்பிச் செல்ல ஏன் விரும்புகிறான் என்பதையும் விளக்கி இருக்கிறேன். மேலும் முதிய துறவி ஏன் ஜரதுஷ்டிரனை பறவைகள் இடையே ஒரு பறவையாகவும், கரடிகள் மத்தியில் ஒரு கரடியாகவும் வாழ்வதற்கு ஏன் கேட்கிறார், அதை விடுத்து அவன் ஏன் மனிதர்களோடு மனிதனாக வாழ்வதைத் தேர்கிறான்  என்பதையும் விளக்குகிறேன். https://youtu.be/Wgl_KnGY5LE?si=zCnbkZMNMioti6Jq

ஒரு எழுத்தாளரின் கற்பனை

  நேற்று மனம் கொஞ்சம் உடைந்து விட்டது. காலை முதல் என் நாவலில் அமர்ந்து சில பகுதிகளைத் திருத்திக் கொண்டிருந்தபோது 30% பக்கங்களை அழிக்க வேண்டும் என ஒரு அனுமானம் தோன்றியது. நிச்சயமில்லைதான். ஆனாலும் அதை நினைத்ததும் மனம் உடைந்துவிட்டது. எவ்வளவு நேரம் செலவழித்து ரசித்து எழுதிய பகுதிகள். ஆனால் வேறு வழியில்லை எனத் தோன்றுகிறது. சில நாவல்கள் நாம் எழுத எழுதத் தோன்றுகின்றன. அப்போது தேவையானவற்றை வைத்துக் கொண்டு தேவையில்லாதவற்றை நீக்கத் தேவையேற்படும். பல்வேறு பாதைகள் கொண்ட ஒரு வரைபடத்தைக் கற்பனை செய்யுங்கள். எந்தப் பாதையில் சென்று இலக்கை அடையலாம் என்றாலும் சிறந்த பாதையை நாம் பயணித்தே கண்டுபிடிக்க முடியும். அச்சிறந்த பாதை சில நேரங்களில் இலக்குக்கு அப்பால், முழுக்க வேறு ஒரு திசைக்கு நம்மை இட்டுச் செல்லக் கூடும். இப்போது நாம் வந்த வழியை மறந்துவிட்டு இன்னொரு சிறந்த வழியைக் கண்டுபிடிப்போம். சில நேரங்களில் நாவல் எழுதுவதும் அப்படித்தான். பத்து தவறுகளில் இரண்டு சரிகளே ஒரு நல்ல நாவலுக்கான வெளிச்சத்தைத் தரும். அதுவும் அந்த இலக்கு இதற்கு முன் அதிகமாகச் சென்றடையாததாக இருக்கையில். நேற்று நள்ளிரவு வரையில் இந...

பிந்தை-உண்மைகளில் இருந்து மீள்வது

  நாம் முதலில் நமது நம்பிக்கைகளுக்கு ஏற்ப வாழத் தலைப்பட வேண்டும். சமரசமில்லாமல். அப்போதுதான் உண்மைக்கான மதிப்பு தோன்றும். அது எந்த நம்பிக்கையாக வேண்டுமெனினும் இருக்கலாம். ஒருவர் தான் ஒரு ஒழுக்கத்துக்கு எதிரானவர் என்று சொல்லிவிட்டுக் கூட அதையே பின்பற்றலாம். ஆனால் அப்படிச் சொல்கிறவர்கள் அடுத்த நொடியே ஒழுங்கின் முகமூடியை பணத்துக்காக, அதிகாரத்துக்காக அணிவார்கள். அல்லது இதற்கு நேரெதிராகவும் செய்வார்கள். நாம் அப்படிச் செய்யாதபோது இப்படித்தான் ஆகும். இன்று உண்மையின் பொருள் மாறிவிட்டதா, மக்கள் எதைச் சொன்னாலும் நம்புகிறார்களா, மக்கள் தாம் விரும்பும் (கட்டமைக்கப்பட்ட) உண்மைகளை மட்டுமே பின் தொடர்கிறார்களா? இல்லை. உண்மை என்பது நம் உடலால் நாம் உருப்பெற வைப்பது. நாம் உண்மையை வாழ்ந்தாக வேண்டும். நினைத்தாலோ, சொன்னாலோ போதாது. மக்களுக்கும் தமது உலகுக்கும் இடையில் ஒரு இடைவெளி எந்திரமயமாக்கலின்போது தோன்றியது என்கிறார்கள். கடவுளின் கண்டுபிடிப்பின்போதுதான் இது முதலில் தோன்றியது என நினைக்கிறேன். ஏனென்றால் நாம் கடவுளுக்காக யோசிக்கவும், உணர்வுவயப்படவும் துவங்கியபோது நாம் அதை எப்படிச் செய்ய வேண்டும் என சொல்...

தனிமையுணர்ச்சி

  இன்றைய தலைமுறைப் படைப்பாளிகளுக்கும் சரி ஒட்டுமொத்தமாக இத்தலைமுறையினரும் கூடத்தான் உள்ள ஒரு சிக்கலைப் பற்றி ஒரு நண்பரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர்தான் இந்த விசயத்தைப் பற்றி பேசித் தன் வருத்தத்தை முதலில் பகிர்ந்தார். அப்படியே அது எப்படி ஒரு பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது என்று விவாதித்தோம். நான் அவ்விவாதத்தில் இருந்து நிறைய அவதானித்தேன். பிரச்சினை இதுதான் - ஒரு இலக்கியக் கூட்டத்துக்குச் செல்கிறோம் என்றால் அங்கு வரும் இளைஞர்களுடன் இலக்கியம், தத்துவம் என எதைக் குறித்தும் விவாதிக்க முடிவதில்லை. அவர்கள் எதை, யாரைப் படிக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. கூடியபட்சமாக தம்மைப் பற்றி மட்டும் சொல்கிறார்கள். கேலி கிண்டலைத் தாண்டி அவர்களுக்குப் பெரிய இலக்கிய ஆர்வமோ தத்துவ ஆர்வமோ உள்ளதாகத் தெரியவில்லை. அவர்கள் மூத்த படைப்பாளிகளைச் சந்திக்கையிலும் அங்கும் அவர்களுடைய நூலைக் கொடுக்கிறார்கள், ஆனால் அந்த மூத்த படைப்பாளியின் நூல்கள் குறித்த தம் கருத்துக்கள் என்னவெனச் சொல்வதில்லை. இதனாலே இலக்கியக் கூட்டங்களில் ஒன்று என் தலைமுறையைச் சேர்ந்தோரிடமோ எனக்கு முந்தின தலைமுறையினரோ மட்டும்...

நீட்சே - “நன்மைக்கும் தீமைக்கும் அப்பால்” குறிப்புகள் (2)

                                                              அத்தியாயம் 1 தத்துவவாதிகளின் மனச்சாய்வுகள் பிரிவு - 1 இங்கு நீட்சே “உண்மையை நோக்கி விழைவை” அடையாளம் காணத் தொடங்கியிருக்கிறோம், இது ஒரு முக்கியமான துவக்கம் என்கிறார். இதை அவர் சாராம்சமான உண்மையொன்றை நம்மைச் சுற்றிய விசயங்களிலும் (தோற்றப்பாடுகள்) நம் அனுபவங்களிலும் தேடுவதில் இருந்து வேறுபட்டது என்கிறார். நீங்கள் ஒரு அழகிய பெண்ணின் கன்னத்தைத் தொடுகிறீர்கள் (அவளுக்கு உங்களைப் பிடிக்காவிடில் உங்கள் கன்னத்தில் அவள் அறைகிறாள்.). அங்கு ‘தொடும்’ அனுபவமும் உங்கள் இருத்தலுமே உங்களைச் செலுத்துகிறது. அது கன்னம் என்பதோ, அதைத் தொடுவதே நல்லது என்பதல்ல. எந்தப் பெண்ணும் தன் கழுத்தில் அத்தகைய வழிகாட்டும் குறிப்புகளை தொங்கப்போட்டுக் கொண்டு வருவதில்லை. ஆனாலும் அக்கன்னம் உங்களை ஈர்க்கிறது. அந்த ஈர்ப்பு வெறுமனே ‘காமம்’ அல்ல. காமம் என்றால் உடலின்பத்துக்கும், இனப்பெரு...

அமைச்சர் கீர்த்தனாவின் முன்னெண்ணமும் திமிரும்

  அமைச்சர் கீர்த்தனாவின் காணொளி ஒன்றைக் கண்டேன். அவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தன் காமிரா டீமுடன் ஆய்வுக்குப் போய் ஒரு வகுப்பறைக்குள் நுழைகிறார். மாணவிகளைக் காட்டுவது, கீர்த்தனாவிடம் மிட் ஷாட், குளோஸ் அப், லாங் ஷாட் என காமிரா பாய்ந்து பாய்ந்து படம் பிடிக்கிறது. கீர்த்தனாவிடம் ஏற்கனவே ஒரு திரைக்கதை இருந்தது தெரிகிறது - அவர் ஒரு மாணவியை அழைத்து அவரிடம் உள்ள பாடநூலில் இருந்து ஒரு ஆங்கில வார்த்தைக்குப் பொருள் கேட்கிறார். மொத்த மாணவர்களும் பதிலளிக்கிறார்கள். ஓக்கே என்று இன்னொரு சொல்லை எடுக்கிறார். சற்று நேரம் அமைதி நிலவுகிறது. பார்த்தீங்களா என்றவாறு கீர்த்தனா ஆங்கில ஆசிரியைப் பார்க்கிறார். முதல் வரிசைப் பெண் குழந்தை எழுந்து அதற்கு ஒருவாறு பதில் சொல்கிறார். இப்போது கீர்த்தனா தன் திரைக்கதையில் இருந்து விலக விரும்பாமல் "இப்படி புத்தகத்தில் உள்ளதை மட்டும் படிச்சு பதில் சொன்னா போதாது. ஸ்போக்க இங்கிஷ் தெரியுமா?" என்கிரார். அப்பெண் குழந்தை தயங்குகிறது. அதான் சொல்றேன் எனும் கணக்கில் பேசிவிட்டு கீர்த்தனா அடுத்து அக்குழந்தையிட...

மோடியின் சீன உறவு - சவால், மௌனம், சரண்டர்

  செய்தி: இந்தியாவின் முக்கிய மின் உள்கட்டமைப்பு திட்டங்களில் பங்கேற்க நான்கு சீன நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. என் கருத்து: 2020இல் லடாக்கை சீனப் படையினர் ஆக்கிரமித்ததுடன் இந்திய வீரர்களைத் தாக்கிக் கொன்றார்கள். இதன்பிறகே சீன எதிர்ப்பு இந்தியாவில் குறிப்பாக இணையதளங்களில் வலுத்தது. அப்போது அமேசானில் பொருட்களின் ரெய்வ்யூக்களில் தொடர்ச்சியாக தேசபக்தர்கள் தோன்றி "இது சீனப் பொருள். இதை எதிர்க்க வேண்டும்" என்பார்கள். ஆனால் மோடியின் அரசு சீன எதிர்ப்பை பிடிக்காத மனைவியை பார்க்கும்போதெல்லாம் டார்லிங் எனக் கொஞ்சுகிற கணவரைப் போலத்தான் கையாண்டது. போகப்போக சீன எதிர்ப்பை அது கைவிட்டது. பல சீனப் பொருட்களே நம் சந்தையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் அமெரிக்காவுக்கு கடும் எதிரியாக ஆசிய ராட்சசனாக சீனா உருவாகி வந்ததால் மோடி கொஞ்சம் தயங்கித் தயங்கித்தான் சீனாவைக் கையாண்டார். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் டிரம்பிடம் போய் வணக்கம் வைத்தார், கட்டிப் பிடித்தார், வாய்நிறைய சிரித்தா...

கவனம் திருப்பித் திருடும் பழைய உத்தி

  செய்தி: //தமிழகம் முழு​வதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்​துக்கு ரூ.5 லட்​சம் முதல் ரூ.30 லட்​சம்வரை அமைச்​சர்​கள் லஞ்​சம் பெறு​வ​தாக தவெக பெண் வழக்​கறிஞர் ஒரு​வர் வழக்கு தொடர்ந்​துள்​ளார். இது தொடர்​பாக விழுப்​புரத்தை சேர்ந்த தவெக வழக்​கறிஞரணி நிர்​வாகி​யான எம்​.​ஞானசவுந்​தரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​: தமிழகம் முழு​வதும் உள்ள நீதி​மன்​றங்​களில் அரசு வழக்​கறிஞர்​களை நியமிப்​பது தொடர்பாக தமிழக அரசு கடந்த ஜூன் 5-ம் தேதி அறி​விப்​பாணை வெளி​யிட்​டது.// இதை சுமார் 120 கோடி மதிப்பிலான ஊழல் என்கிறார்கள். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. தவெக மாவட்டச் செயலாளர்களைக் கொண்டு எல்லா மாவட்டங்களிலும் பட்டியலில் உள்ள வழக்கறிஞர்களிடம் பேசி வாங்கியிருக்கிறார்கள். ஒரு கட்சியின் ம.செக்கள் தலைமைக்கு - அமைச்சர்களுக்கு - தெரியாமல் இதைச் செய்ய முடியாது என்பது பொது அறிவு. இம்மாதிரி ஊழல்கள் ஒவ்வொரு துறைக்கும் மாதாமாதம் நடந்தால் வருடத்திற்கு எவ்வளவு வரும்? நான் என்றுமே தவெக ஒரு தூய ஆட்சியை நடத்துகிறது என நம்பியதில்லை என்பதால் எனக்கு இது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. இது இயல...

எதிர்க்கட்சிகளை ஒழிக்கும் பாசிச சிந்தனை

  விஜய் ஆட்சிக்கு வந்ததுமே நான் சொன்னேன் - அவர் ஒரு பாசிஸ்டு என்று. என் கணிப்பு உண்மையாகிக் கொண்டே வருவதில் எனக்குச் சற்று வருத்தம் உண்டு. அனிதா ராதா கிருஷ்ணன் மீதான கைது, அவரிடம் பேசப்பட்ட பேரம், மிரட்டலை எடுத்துக் கொள்வோம். ஊடகங்களிடம் இதைக் குறித்துப் பேசிய ஒரு திமுக தலைவர் இது பாஜகவின் வாஷிங் மெஷின் பாணி என்றார். அதாவது அமலாக்கத்துறையை அனுப்பி எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை மிரட்டி தன் கட்சியில் சேர்த்து பொய் வழக்குகளைக் களைந்து அவர்களை உத்தமர்களாக அறிவிப்பது பாஜக தொடர்ந்து நாடு முழுக்கச் செய்து வருவது. ஆனால் பாஜகவுக்கும் ஒரு நடைமுறை ஒழுங்கு, பொறுமை உண்டு - அவர்கள் மெல்ல மெல்ல அழுத்தம் கொடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களைக் கரைத்து தன் வசம் இழுக்கப் பார்க்கும். முடியாதபட்சத்தில் அமலாக்கத்துறை மிரட்டல் வரும். அப்போதும் கனிந்து விழக் காத்திருக்கும் கனிகளே அவர்கள் மடியில் விழும். பாஜக தன் நோக்கம் எதிர்க்கட்சிகளே (அதாவது காங்கிரஸ்) இல்லாத பாரதம் என்பதை வெளிப்படையாக அறிவித்தவர்கள். ஏன் என்று நாம் கேட்க வேண்டும் - எதிர்க்கட்சிகளே ஒரு மக்களாட்சி அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பவ...

விஜய் உருவாக்கி உள்ள சுதந்திரம்

  தவெகவில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சேர்வது ஒரு செய்தி அல்ல. அரசியல்வாதிகளுக்குத் தேவை அதிகாரம். அதிகாரத்தை நோக்கி அவர்கள் குவிவார்கள். 'தவெக' என்பது பெயர் மட்டும்தான். அந்த இடத்தில் பாஜக இருந்து ஆட்சிக்கு வந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும் - கம்யூனிஸ்டுகள் கூட 'தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தக்க வைக்கவும், தமிழ்நாட்டு பாஜக ஒன்றிய அரசிலுள்ள பாஜகவைப் போலல்லாது சமூகநீதியையும் மதசார்பின்மையையும் காப்பாற்றுவதாக உள்ளதாக இருப்பதால்' என்று சொல்லிச் சேர்ந்திருப் பார்கள். பாஜக என்ன குரங்குக் கூட்டம் ஒன்று கட்சி ஆரம்பித்து கூடத்தான் அதிலும் பல கட்சியில் இருந்து மக்கள் சேர்ந்து அதிகாரத்தைக் கோருவார்கள். இது பிற கட்சிகளின் பலவீனத்தைக் காட்டவில்லை. அதிகாரத்தின் ருசியை மட்டுமே காட்டுகிறது. இது செய்தியல்ல, தவெகவின் வசீகரத்தையும் இது காட்டவில்லை. தவெக இப்போதைய சூழலைக் கருதி இவர்களை வரவேற்கிறது. எந்தக் கட்டுப்பாடோ நிபந்தனையோ இல்லாமல் வரவேற்கிறது. ஒருவேளை, தனிப்பெரும்பான்மை தவெகவுக்கு கிடைத்திருந்தால் அங்கு போவது இவ்வளவு வளமான வாய்ப்பாக இருந்திருக்காது. தவெக என ஒன்று இல்லாதிருந்தால் இப்போத...