முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இவரை அமைச்சராக்கத்தான் போராடினீர்களா?


 

கரப்பான் பூச்சிகள் போராடி பதவி நீக்கம் செய்த பிரதானுக்குப் பதில் கல்வி அமைச்சராகப் போகிறவர் பிரல்ஹாத் ஜோஷி. இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?

90களின் துவக்கத்தில் ஹுப்பாலி இத்கா மைதானத்தில் 'தேசியக் கொடி ஏற்றுகிறோம்' எனும் பெயரில் இஸ்லாமியர் அம்மைதானத்தை தம் பிராத்தனைகளை நடத்துவதைத் தடுக்க முயற்சி எடுத்தவர். இவர் முன்னின்று நடத்திய கலவரங்களில் ஆறு பேர்கள் கொல்லப்பட்டார்கள். நூறு பேர்களுக்கு மேல் காயம்பட்டார்கள். இதனால் அப்பகுதி கர்நாடகாவின் மினி அயோத்தியா என அழைக்கப்படுகிறது. அப்போது துவங்கி எதாவது ஒரு இஸ்லாமிய வழிபாட்டு விவகாரத்தை வைத்து பாஜக கர்நாடகத்தில் கலவரம் பண்ணி வருகிறார்கள்.
அண்மையில், இவர் கர்நாடகாவில் இஸ்லாமிய ஆண்கள் இந்துப் பெண்களை ஏமாற்றிக் கல்யாணம் பண்ணுவதாக, லவ் ஜிகாத் பண்ணுவதாகக் குற்றம் சாட்டினார்.
இவரது சகோதரர், சகோதரி உள்ளிட்டோர் ஒரு முன்னாள் எம்.எல்.ஏவிடம் தேர்தலில் போட்டியிட இடம் பெற்றுத் தருவதாகக் கூறி ரெண்டு கோடிக்கு மேல் வாங்கி ஏமாற்றிவிட்டனர். அவர் வழக்குத் தொடுத்ததும் ஜோஷி தனக்கும் தன் சகோதர சகோதரிக்கும் சம்மந்தம் இல்லை என்று நழுவி விட்டார்.
2019-2024 கட்டத்தில் இவர் ஒன்றிய நிலக்கரி அமைச்சராக இருந்தபோது தனியாருக்கு நிலக்கரி சுரங்கங்களை தாரை வார்த்ததுடன் பல சுற்றுச்சூழல் பாதிப்புள்ள சுரங்கங்களுக்கு அனுமதி அளித்தார் எனக் குற்றச்சாட்டு உள்ளது.
2023இல் இவர் எய்ம்ஸிலும் தேசிய மருத்துவக் குழுவிலும் முக்கியப் பொறுப்புகளைப் பெற்றுத் தருவதாக ரெண்டரைக் கோடி பணத்தை இருவரிடம் (இன்னொரு அமைச்சருக்கு வாங்கிக் கொடுத்து) வாங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது.
இவர் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சிகளின் விவாத நேரத்தை வெகுவாகக் குறைத்து மோடிக்கு எதிராக தொடர் விவாதங்கள் நடக்காமல் பார்த்துக் கொண்டார்.
ஜோஷியின் 'தனிச்சிறப்பு' என்னவென்றால் மாட்டிக்கொள்ளும் படியாகவே ஊழல் செய்வார். இவரது சகோதரி பணத்தை காசோலையாகப் பெற்றுக் கொண்டார். ரெண்டரை கோடி ஊழல் விசயத்தில் தன் அலுவலக ஊழியரின் கணக்கிலேயே பணம் வாங்கிக் கொண்டார்.
இப்படிப்பட்ட பிரல்ஹாத் ஜோஷியை கல்வியமைச்சராக்கத்தான் கரப்பான்கள் இவ்வளவு ஆயிரம் மாணவர்களை கைகால்களை உடைத்துக் கொண்டு, ரப்பர் பெல்லட்டுகளால் தாக்கப்பட்டு துன்பப்பட வைத்தார்களா? இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாமே? இவர் மாற்றங்களைக் கொண்டு வருவாரா என இளைஞர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என கரப்பான் கட்சித் தலைமை எச்சரித்துள்ளது. அதற்கு ஏன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்? அவரது கடந்த காலத்தைப் பார்த்தாலே போதுமே. செய்தியே படிக்காதவர்கள் போல.
பி.கு: நம்மில் இளைஞர்கள் புரட்சி எனும் வசீகரமான கனவால் ஆட்பட்டிருக்கலாம். கரப்பான்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டிவிட்டார்கள் என புன்னகைத்து காலாட்டிக் கொண்டு நாம் இன்றிரவு தூங்கி விடலாம். ஆனால் எதார்த்தம் நாற்றமெடுக்கக் கூடியது. தம் கனவு கலையக் கூடாது என்பதற்காக ஒரு மட்டமான அமைச்சரின் இடத்தில் பாஜக தலைமை இன்னொரு மோசடிக்காரரை, சிறுபான்மை வெறுப்பாளரை கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளாமலே அடுத்த சில வாரங்களும் கனவில் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். வாழ்வில் நம்பிக்கை இருக்கலாம், ஆனால் அதிகாரத்தின் மீது இவ்வளவு நம்பிக்கை வைக்கக் கூடாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...