முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஞானக்கூத்தன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஞானக்கூத்தனுக்கு அஞ்சலி

ஞானக்கூட்டத்துக்கு ஆழ்ந்த அஞ்சலி . நான் நவீன கவிதையை படிக்க துவங்கிய காலத்தில் நண்பர்கள் ஞானக்கூத்தனை சிலாகித்து பாராட்டுவதை கேட்டிருக்கிறேன் . ஆனால் நான் அவரை அப்போது படிக்க தவறவிட்டேன் . ஆங்கில இலக்கிய படிப்பு எனக்கு பல நவீன ஐரோப்பிய கவிஞர்களை அறிமுகப்படுத்தியது . அதன் பிறகு நான் அப்பின்புலத்தில் தமிழின் நவீன கவிஞர்களை அறிமுகப்படுத்திக் கொண்டேன் . இவர்களுக்கு பிறகு தான் ஞானக்கூட்டத்தின் மொத்த கவிதைத் தொகுப்பை எடுத்து வாசித்தேன் . இயல்பாகவே எனக்கு ஏமாற்றமாக இருந்தது . எனக்கு ஞானக்கூத்தன் ஒரு நவீன கவிஞரே அல்ல எனப் பட்டது . நவீன கவிதையின் வளர்ச்சிக்கு வைரமுத்து , மேத்தா , அப்துல் ரகுமானுக்கு கூட ஒரு பங்கு உண்டென சொல்வேன் . கலீல் கிப்ரான் கூட நவீன கவிதை வாசகனுக்கு முக்கியமானவர் தான் . ஆனால் ஞானக்கூத்தன் இவர்களுக்கு வெகுபின்னால் இருக்கிறார் . அவர் எழுதியவை ஒருவித செவ்வியல் தனிப்பாடல்கள் . சற்றே லகுவான நேரடி மொழியில் எழுதப்பட்ட மரபுக் கவிதைகள் . அவரது பகடியும் எனக்கு வெகுசிலாக்கியமாய் பட்டதில்லை ...