Skip to main content

Posts

Showing posts from March, 2026

எதிர்மறை கிரிக்கெட்

  சன் ரைசர்ஸ் அணிக்கு நேர் எதிரான திசையில் செல்லும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ். ஆடுதளம் நின்று வந்தாலோ அதில் அதிக பவுன்ஸும் வேகமும் இருந்தாலோ அவுட் ஆகாமல் ஆட வேண்டும் எனும் உஷார்தன்மை சென்னை மட்டையாளர்களிடம் வந்துவிடும். கடந்த சில ஆண்டுகளாக துவக்க மட்டையாளர்களில் இருந்து மத்திய வரிசை வீரர்கள் வரை மோசமான ஆட்டநிலையில் இருப்பதால் ஏற்பட்ட தற்காப்பு மனநிலையாக இருக்கலாம். இதன் பிரச்சினை என்னவென்றால் எதிரணி வீச்சாளர்களை பதற்றமாக்கி தவறான நீளத்தில் வீச வைக்காமல் அவர்களை செட்டில் ஆக விட்டுவிடுகிறார்கள். இன்று ருத்துராஜும் ஷார்ட்ஸும் ஆட்டத்தை ஆரம்பித்த விதம் ஒரு உதாரணம். இதனால் ஏற்படும் நெருக்கடியாலே பின்னர் தேவையில்லாமல் ரிஸ்க் எடுத்து ஆடி ஆட்டத்தை இழக்கிறார்கள். இதற்குப் பதில் துவக்கத்தில் ரிஸ்க் எடுத்துவிட்டு பின்பு நிதானம் காட்டினால் சென்னை 160-170 எடுத்திருக்க முடியும். சர்பராஸ் கான் சரியாகத் துவங்கினார். ஆனால் ஒரே ஒரு தவறு அவருக்கு விக்கெட்டைப் பறிகொடுக்கச் செய்தது. சென்னைக்கு உண்மையில் தேவை முதல் ஆறு ஓவர்களில் சன் ரைசர்ஸின் அணுகுமுறை. தோற்றாலும் அதிரடியாகத் தோற்போம் எனும் மனநிலை. அதற்க...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

ஐ.பி.எல் watch along

  ஐ.பி.எல் திருவிழா கோலம் பூண்டுவிட்டது. வரக்கூடிய போட்டிகளில் சிலவற்றிற்கு யுடியூபில் நேரலையில் watch along செய்யலாம் என நினைக்கிறேன். எத்தனை பேரால் இணைய முடியும் எனப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். ஓரளவுக்கு கிரிக்கெட் ஆர்வலர்கள் இணைவதானால் செய்வோம். நன்றி.

அவன் கெட்டவன் என்பதால் நான் நல்லவன்

  நேற்று ஒரு இலக்கிய நண்பரிடம் உரையாடும்போது அவர் வைரமுத்து VS தீவிர இலக்கியம் என ஒரு டிராக்கில் சென்றார்; அயல்மொழியினர் இவர் படைப்புகளை மொழியாக்கத்தில் படித்த்தால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று அங்கலாய்த்தார். நான் அவரிடம் அக்கவலை மிகையானது என்றேன். புத்தக வாசிப்பு சிறந்த படைப்புகளை யாரோ முன்வைத்து அதைப் பலரும் படித்து நடப்பதல்ல. சந்தைப்படுத்துதலும் பரிந்துரைகளும் ஒரு புத்தகத்தைக் கொண்டு சேர்க்க உதவும். ஆனால் அதைத் தாண்டியும் வாசிப்பு நிகழும். அதுதான் அசல் வாசிப்பு. இதையெல்லாம் நெறிப்படுத்த முடியாது, அதைச் செய்யவும் கூடாது. ஏனென்றால் இலக்கியம் என்பது அரசியல் அல்ல. அது புறமேயிருந்து நிர்வகிக்க வேண்டியது அல்ல. அது சுதந்திரமாக இயங்க வேண்டும். வைரமுத்துவுக்கு என்று ஒரு இடம் இருக்கும். அவரை வாசிக்கிறவர்கள் இருப்பார்கள். இலக்கிய வாசகர்கள் என்ன நடந்தாலும் அவர் எழுத்தை ஏற்கப் போவதில்லை. எந்த மொழிக்குச் சென்றாலும் இதுவே நடக்கும். ஒருவேளை அவரது சில எழுத்துக்களில் உள்ள நாட்டார் கூறுகளுக்காக அவரைச் சிலர் படிக்கலாம். இந்த ஞானபீடம் வரும் முன்பே அவர் ஒரு முக்கியமான ஆங்கிலப் பதிப்பகம் மூ...

"ஏன் வாசிக்க வேண்டும்?" விமர்சனம் - அன்புக்குமரன் எத்தியரசன்

  புத்தகம்: ஏன் வாசிக்க வேண்டும் எழுதியவர்: எழுத்தாளர்: Abilash Chandran வாங்கிய இடம்: சீரோ டிகிரி அரங்கு, சென்னை புத்தகக் கண்காட்சி வாங்கிய தேதி : 02 மார்ச் 2022 "வாசிப்பது எப்படி?" என்ற புத்தகத்தை அண்மையில் வாசித்தபோது , அதன் தொடர்ச்சியாய் "ஏன் வாசிக்க வேண்டும்?" என்ற புத்தகத்தையும் வாசிக்க நேரிட்டது. நம் வாழ்வாதாரத்தை முன் வைத்து வாசிப்பின் தேவை குறித்து புத்தகத்தின் வாசத்தை நுகராதவர்களுக்கு ஒரு அறிமுக நூலாக இருந்தது செல்வேந்திரன் அவர்களின் கட்டுரை தொகுப்பு. ஆனால் எழுத்தாளர் அபிலாஷ் ஏன் வாசிக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை மிக விரிவாகவும் நேர்மையாகவும் (வாசிப்பும் ஒரு போதைதான் என்பது போன்ற கருத்துகள் ஊடாக ) தனது கருத்துகளை தனது பிரஞையினால் நமக்கு கடத்தியிருக்கிறார். எழுத்தாளர் அபிலாஷ் அவர்களின் முகப்புத்தக பதிவுகளை சில வருடங்களுக்கு முன்பாக பின்தொடர்ந்தேன். அதன் நீட்சியாக ஒரு நாள் ஹருதயம் என்ற மலையாளதிரைப்படத்தை பற்றிய இவரது கட்டுரையால் கவரப்பட்டேன். அப்படி ஒரு பகுப்பாய்வு. அவரின் அவதானிப்புகள் மிகவும் ஆழ் நிலையில் இருப்பதை உணர்ந்தேன். பின்பு பல கட்டுரைகளை வாச...

கால்கள் நாவல் விமர்சனம் - திருப்பதி மகேஷ்

  I’ve been following R. Abilash Chandran sir’s blogs for years and always wanted to read his debut novel Kaalkal, which won the Yuva Puraskar Sahitya Akademi Award in 2014. I finally got the chance when it was released on Kindle recently. As a visually challenged person, I already understand the world of the visually impaired. But Kaalkal offered me a powerful new perspective — it allowed me to step into the world of people with locomotor disabilities through the beautifully written character of Mathu. Choosing a female protagonist and placing her at the heart of the story added emotional depth and a unique resonance. That intention was clearly felt throughout the novel. Though I found it slightly lengthy, I truly enjoyed the reading experience. I feel deeply satisfied after completing Kaalkal, and I’m excited to read his latest novel, Nilal Bommai.

"கால்கள்" நாவல் விமர்சனம் - கவிப்பூரணி

ஃபேஸ்புக்கில் திரு அபிலாஷ் அவர்களின் பதிவுகளை அவ்வப்போது மட்டுமே பார்த்து வந்த நான், அவரது சிந்தனைகளை பலமுறை ரசித்திருக்கிறேன். அவர் தேர்ந்தெடுக்கும் சிக்கல்கள், அதை ஆராயும் ஆழம், அவரது பார்வையின் தனித்துவம்—இவை அனைத்தும் என்னைக் கவர்ந்தன. அவர் சிந்திக்கும் விதம் எப்போதும் வேறுபட்டதும் தீவிரமானதும். அபிலாஷ் சந்திரன் அவர்களின் “கால்கள்” நாவல் ஏப்ரல் 6ஆம் தேதி கிண்டிலில் வெளியாகியதாகத் தெரிந்துகொண்டேன், அவருடன் தொடர்ந்த தொடர்பில் இருக்கும் நண்பர் மஹேஷ் மூலமாக. மற்ற எதையும் யோசிக்காமல், உடனே அந்த நாவலை டவுன்லோட் செய்து, அன்றிரவு வாசிக்கத் தொடங்கினேன். அதற்கு முந்தைய நாள் நான் "நிழல் பொம்மை" நாவலை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். ஆனால் "கால்கள்" கிடைத்தவுடன், நீண்ட நாட்களாக காத்திருந்த ஏக்கத்தில், "நிழல் பொம்மை"யை இடைநிறுத்திவிட்டேன். மது — இந்த கதையின் கதாநாயகி, மாற்றுத்திறனாளிகளின் உள்ளத்தை நேரடியாக நெஞ்சோடு இணைக்கும் ஒரு பாத்திரம். அவளது உலகம், சவால்கள், மனவுரைகள், காதலையும் காமத்தையும் பற்றிய எண்ணங்கள் — இவை அனைத்தும் மிக நுட்பமாக எழுதியிருக்கிறார். அவளது பெற்...

"பெரிய மனிதர்"

  "பெரிய மனிதர்" க.நா.சுவின் குறுநாவல். அவரது நாவல்களைப் படிக்கையில் இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்க வேண்டிய சிறப்பான படைப்புகள் என்று தோன்றும். "பெரிய மனிதரும்" அப்படியான ஒன்றே. ஈவிரக்கம் இல்லாத ஒரு பணக்காரரின் நினைவுக் குறிப்புகள் என்று இதை வர்ணிக்கலாம். 45 வயதை எட்டிய நிலையில் தனக்கு ஒரு நிச்சயமின்மை, எதிலும் கசப்பு தோன்றுவதை அவர் உணர்கிறார். கசப்பு ஒரு பெரும் பந்தாக தன்னை நோக்கி உருண்டு வருவதாக அவருக்குத் தோன்றுகிரது. அவரிடம் மலைமலையாகப் பணம் உள்ளது. அவரது மனைவி, மக்கள் அவருடன் உள்ளனர். அவருக்குப் பல பங்களாக்களும் கார்களும் வேலையாட்களும் உண்டு. ஆனால் உள்ளார்ந்த துக்கம் அவரைச் சூழ்கிறது. அவர் தன் அந்தஸ்து, அடையாளம், வாழ்க்கை என ஒவ்வொன்றாகக் கசந்து சபித்துக் கொண்டும் மறுத்துக் கொண்டும் வருகிறார். அதற்காக அவர் இவற்றையெல்லாம் துறக்கப் போகிறார் என்றில்லை. அவர் தன் பணம், அந்தஸ்து, சாதனைகளைக் குறித்துப் பெருமைப்பட்டுக் கொண்டும் அவற்றைக் காப்பாற்ற வேண்டும் எனத் துடித்துக் கொண்டும் இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்குத் தன் துன்பத்துக்குக் காரணம் தன் வாழ்வில் அன்பு இல்...

அகச்சித்திரமும் குற்றமின்மையும்

  கேப்ரியல் மேட்ஸ்னெப் ஒரு சர்ச்சைக்குரிய பிரஞ்சு எழுத்தாளர். குழந்தைகளுடன் பாலுறவு கொண்டதற்காக கண்டனத்துக்குள்ளானவர். தன்னுடைய பாலியல் வாழ்க்கையைக் குறித்து அவர் நாவல், அபுனைவு என பல சுவாரஸ்யமான நூல்களை எழுதியுள்ளார். அவை மேற்சொன்ன காரணத்துக்காக தமிழில் கிடைப்பதில்லை. நீங்கள் அவரது எழுத்தை செய்யறிவைக் கொண்டும் மொழியாக்க இயலாது. அங்கும் தடைதான். ஆனால் இந்த இடத்தில்தான் கூகிள் மொழியாக்கச் செயலி ஒரு வரப்பிரசாதமாகிறது. அதில் பி.டி.எப்பைப் பதிவேற்றினால் சில நொடிகள் மொத்தத்ததையும் மொழியாக்கித் தந்து விடுகிறது. இப்படித்தான் மேட்ஸ்னெப்பின் "பதினாறு வயதுக்குக் கீழானவர்கள்" (Les Moins de seize ans) புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். இத்தகையோரின் மனநிலை, சிந்தனைகள், அனுபவங்கள் என்னவெனத் தெரிந்து கொள்ளும் ஆர்வமே என்னைச் செலுத்தியது. அவர் பாலுறவு குறித்தப் பகுதிகளைத் தவிர்த்து விடுகிறார். அவரது மனநிலையிலும் அக-அனுபவங்களிலுமே பக்கங்கள் தொய்கின்றன. இங்கு ஒரு விடயம் என்னை ஆச்சரியப்படுத்தியது - ஒரு குற்றம் அது அகவயப்படும்போது நமக்குக் குற்றமாகத் தெரிவதில்லை. புறவயமாகும்போதே அதன் ஒழுக்கம், அறம...

நவீன கவிதை வாசிப்பு - பயிலரங்குக் குறிப்பு 1

  இன்றைய கவிதை வாசிப்புக்கான இணையவழிப் பயிலரங்கிற்கு வருவோர் அதில் இணையும் முன்பு இதை ஒருமுறைப் படித்து விடவும். அப்போதே உங்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும்: நமது இப்போதைய கவிதை வாசிப்பு முறைமை உரையெழுதுவதில் இருந்து தோன்றியிருக்க வேண்டும். தொல்காப்பியம், சங்க இலக்கியத்தை நோக்குங்கால் நாம் இன்னும் ஆழமான, சுதந்திரமான வாசிப்புக்கு பழகியவர்களாக முன்பு இருந்திருந்தாலும் நவீன காலத்துக்கு வந்து நவீன கல்வியைப் பழகும் வேளையில் நாம் மனனம் செய்வதை பிரதானப்படுத்தத் தொடங்கி இருந்தோம். செய்யுள்களை மனனம் செய்வது, உரையாசிரியர்களின் விளக்கங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது என. பல்வேறு பின்னணிகளின் பொருளில் விதவிதமாக அர்த்தப்படுத்தும் சுதந்திரத்தைக் கூட இத்தகைய வாசிப்பு நமக்கு வழங்கவில்லை. கல்விப் புலத்துக்கு வெளியில் இதழ்களிலும் இலக்கியக் கூட்டங்களிலும் நாம் ரசனை சார்ந்த ஒரு வாசிப்பு முறைமையைப் பழகிக் கொண்டோம். இது வெகுஜன ஊடகத்துக்கும் ஏற்புடையதாக இருந்தது. இதன் நோக்கம் ஒரு படைப்பை அதன் உணர்வு சார்ந்த, மிகையான பகுதிகளை மட்டுமே பிரதானப்படுத்தி வாசிப்பது, வாசிப்பின் முடிவில் மானுடவாத விழுமியங்களான மனிதனி...

கவிதை வாசிப்புப் பயிலரங்கு - அமர்வு 1

  விருப்பமுள்ளோர் வருக! தொடுவழியைக் கிளிக் செய்து நுழைக. சனிக்கிழமை, 21 மார்ச் · 6:00 – 7:00pm Time zone: Asia/Kolkata Google Meet joining info Video call link: https://meet.google.com/iff-eqhg-ghp

சி.சு செல்லப்பா நினைவோடை

எனக்கு நினைவோடைகளில் படிப்பதில் ஒரு தனி ஆர்வம். இலக்கியச் சூழல் என்றைக்குமே சில விசயங்களில் ஒரே மாதிரித்தான் இருக்கும் என்பதால் 50-60 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததைப் படிப்பது கூட பயனளிக்கும், எழுத்தாளர்களை, குழுக்களை, அவர்களின் நடத்தை, மனப்போக்குகளை அணுக்கமாகப் புரிந்துகொள்ள. மேலும் அபூர்வமானதொரு இன்பமும் இத்தகைய நினைவுக் குறிப்புகளில் உண்டு. பழைய காலப் படங்களில் மாரில் பாய்ந்த கத்தியை உருவி விட்டு ரத்தம் வழியவழியப் பேசுவார்களே அதைப் பார்ப்பது போல. சுந்தர ராமசாமியிடம் அரவிந்தன் சி.சு செல்லப்பா குறித்து நேர்காணல் எடுத்து அதை அப்படியே பிரசுரித்ததே இந்தப் புத்தகம். அதனாலே துண்டுத்துண்டாய் நினைவுகள் முன்னுக்குப் பின்னாய் பாய்கிற தோரணையில் அமைந்திருக்கிறது. செல்லப்பாவைக் குறித்த பகுதிகளைவிட க.நா.சுவைக் குறித்த பகுதிகள் அபாரமாய் வந்திருக்கின்றன. தருமு சிவராமு எனப்படும் பிரமிளின் ஆளுமையும் முக்கியமாக வருகிறது. அதைப் படிக்கையில் தமிழ்ச்சூழலில் அவர் ஏற்படுத்திய கசப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது. நான் முன்பு ஒரு பைட்டர் மீனை வளர்த்தேன். எனக்கு மீன் வளர்ப்பு குறித்த அறிவு இல்லை. ஆகையால் அதன் வர்ண எழ...

ஒரு கவிதை வாசிப்புப் பயிலரங்கு

ஒரு தோழி நவீன கவிதை வாசிக்க நான் கூட இருந்தேன். அவர் படிக்கப் படிக்க தன் அபிப்ராயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் "உங்களுக்கு இன்னும் சரியாகப் படிக்கத் தெரியவில்லை. ஒரு கவிதையில் உடனடியாகத் திறந்து கொள்ளாத பல தளங்கள் இருக்கும். கற்பனையால் விரிக்க வேண்டிய இடங்கள் இருக்கும். கற்பனையில் கண்டதைத் தெளிவாகச் சொல்லவும் ஒரு மொழி இருக்கிறது. இதை முறையாகக் கற்றுக் கொள்ளலாம்." என்று சொன்னேன். அவர் எப்படி என்று கேட்டார். அப்போதுதான் எனக்கு இந்த ஐடியா தோன்றியது. ஏன் இதை ஒரு இணையப் பயிலரங்காக நடத்தக் கூடாது? அதில் அவரைக் கலந்துகொள்ளச் சொல்லிவிட்டேன். என்னுடைய திட்டம் ஐந்து பகுதிகளாக தலா 45 நிமிடப் பயிலரங்குகள். 45 நிமிடம் முடிந்ததும் 15 நிமிடங்கள் கேள்வி-பதில். கவிதைக்கு பெரிய சந்தை மதிப்பில்லை என்பதால் கவிஞர்கள், கவிதை வாசகர்களிட கட்டணம் வாங்குவதில் அர்த்தமில்லை. ஆகையால் இது முழுக்க இலவசம்தான். நாளை மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கிறேன். ஏற்கனவே கவிதை எழுதுவதற்கான வகுப்புகளை நடத்தி இருக்கிறேன். ஆனால் இது அப்படியானது அல்ல. என் நோக்கம் இங்கு கவிதையெழுதச் சொல்லித் தருவதல்ல. வாசிப்பதற்கு...

துன்பமின்றி துன்பத்தை எழுதுவது

புக்காவஸ்கியை வாசிப்பது எப்போதுமே மிகச்சிறந்த மதுவை அருந்தும் அனுபவம். அவரது மிகச்சிறந்த படைப்புகள் செக்ஸில் திளைப்பதற்கு ஈடான புலனின்பத்தைத் தருவதுண்டு. ஆனால் "ஹாலிவுட்" ஒரு தரமான மது மட்டுமே. ஒரு நாவலாக இது எழுந்து வரவில்லை. அவரது அனுபவங்களின் குறிப்புகள் அவரது திரைக்கதை படமாக்கப்பட்டதை ஒட்டித் தொகுக்கப்பட்டுள்ளன. படத்துக்கான திட்டமிடலிலும் துவங்கி படம் எடுத்து வெளியாகி அதை ஒரு மாதத்திற்குப் பின் புக்காவஸ்கி ஒரு திரையரங்கில் குறைவான பார்வையாளர்கள் மத்தியில் பார்த்துவிட்டு ஒருவித நிறைவற்ற நிறைவுணர்வுடன் வெளிவருவதுடன் நாவல் முடிகிறது. ஆனால் அது சரியான முடிவு அல்ல. நாவலின் மையச் சிக்கலை அவர் கண்டடையவே இல்லை. முழுக்கவே வெளியுலகின் அலைகழிப்புகள் மத்தியில் அவர் தன்னைக் கண்டடையும் தத்தளிப்பு தெரிகிறது. ஒரு படைப்பாளியாக அவரது வலிமை இந்த அகவுலகம்தான். அவரது அந்தரங்கமான அன்றாட உலகம்தான். சினிமா உலகின் பல சிக்கல்களை, வேடிக்கைகளை, அபத்தங்களை, தனிமனிதர்களுக்கு அது இழைக்கும் கொடூரங்களைப் பற்றிப் பேசும் கவனம் புக்காவஸ்கியின் ஆதாரமான நெருக்கடிக்குள் நாவலைக் கொண்டு செல்ல விடாமல் தடுக்கிறது....

இன்னொரு மனம்

  இந்நூலுக்கு இந்த வாரம் மட்டுமே ஆச்சரியமாக இருவர் விரிவாக விமர்சனம் செய்துள்ளார்கள். ஒருவர் என் நீண்டகால நண்பர். சக-எழுத்தாளர். திகட்டத் திகட்டப் பாரட்டித் தள்ளிவிட்டார். அரைமணிநேரம் போனில் புத்தகத்தை இரண்டு முறைகள் தான் படித்ததையும், அது தந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். இன்னும் நிறைய பேரைப் படிக்கச் சொல்லப் போகிறேன் என்றார். நிறைய எழுத வேண்டும் எனும் உற்சாகம் பாராட்டுக்களில் இருந்தே கிடைக்கின்றன. அவர் வாய்க்குச் சர்க்கரை போட வேண்டும். அடுத்தது மா. அண்ணாமலையின் விரிவான நேர்மையான விமர்சனம். அவருக்கும் என் அன்பு. நான் இன்னொன்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் - எழுதுவது குறித்து, எழுத்தாளராக இருப்பது குறித்து எனக்கு இப்போதுள்ள கேள்விகளும் கவலைகளும் முற்றிலும் வேறாக மாறி வருவதை உணர்கிறேன். எழுத்துக்கும் மரணத்துக்குமான, எழுத்துக்கும் இல்லாமல் போவதற்கும், தன்னையே அழிப்பதற்குமான தொடர்பு என்னவென்று சிந்திக்கிறேன். காலம் என்னை மிகவும் பயமுறுத்துகிறது. ஆச்சரியமாக என் நண்பரான ஒரு அயல்மொழிக் கவிஞரும் இதே கவலையுடன் சதா இருப்பார். நான் அவரைக் கிண்டல் செய்வேன். இப்போது அது என்னையும் தொற்றிக் க...

"எழுத்தாளராக இருப்பது எப்படி?" - மா. அண்ணாமலை விமர்சனம்

  நூல் : எழுத்தாளராக இருப்பது எப்படி? ஆசிரியர் : ஆர். அபிலாஷ் வெளியீடு : எழுத்து பிரசுரம் பக்கங்கள் : 332 வகை : துறைசார் நூல் எழுத்தாளர் என்ற ஒற்றை வார்த்தையை சிறு செடியாய்க் கொண்டு 332 பக்கத்தில் கிளைகள், சிறுகிளைகள், குறுங்கிளைகள் என அடர்த்தியான ஒரு பெருமரமாய் வளர்த்திக் காட்டியுள்ளார் அபிலாஷ். அபிலாஷிடம் எனக்குள்ள சிக்கலே இருமுறை படிக்க வைப்பது. இந்நூலையும் அவ்வாறே செய்வித்தார். அந்தளவிற்கு தரமானதுதான். எழுத்துத்துறை பற்றி இதற்கு முன்னர் சி. சரவண கார்த்திகேயனின் 'ரைட்டர் ' நூலும், பாராவின் 'எழுதுதல் பற்றிய குறிப்புகளும்' அறிமுகமாகி இருந்தன. இரண்டுமே தன் அனுபவ குறிப்புகள். இந்நூலும் அனுபவங்களை அடிக்கடி பேசினாலும் ஒரு எழுத்தாளனின் சிக்கல்களை ஆழ்ந்து பேசி இருப்பதால் அவற்றிலிருந்து வேறுபடுகிறது. கூடவே தத்துவார்த்தமான பார்வையும் இணைந்து தமிழ் இலக்கிய, வெகுஜன ‍ , வணிக எழுத்தாளர்களின் இருப்பைப் பேசுகிறது. ஒரு எழுத்தாளனை எழுதுவதற்கு ஆயத்தப்படுத்தி; அவன் எழுத்துக்களை வளர...