முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தவெக லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு மோசடி நாடகம் - இரையாக்கப்படும் எழுத்தாளர்கள்

அமைச்சர் ராஜ்மோகனின் ஊடகச் சந்திப்பைப் பார்த்தேன். அவரது எச்சரிக்கைகள், உறுதியளிப்புகள் குழப்பமாக இருந்தன. அதுவே ஒரு மோசடிதான் என நினைக்கிறேன். 1) அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பக நூல்களின் ஆணையை கடந்த வருடமே அளித்துவிட்டதாக ஒரு பட்டியலை அளித்து அதில் நிபுணர் குழுவில் உள்ள படைப்பாளிகளும் சான்றோரும் பேராசிரியர்களும் ஒப்பமிட்டுள்ளதாகக் கூறினார். ஆனால் எங்குமே அவர்களே பொறுப்பென்று அவர் கூறவில்லை. கடைசியில் திமுக அரசின் அழுத்தத்தினாலே அவர்கள் அகல் விளக்கு, பீனிக்ஸுக்கு ஆணை வழங்க ஒப்பியுள்ளதாகவும் கூறினார். ஆனால் பேஸ்புக்கில் இதைக் குறித்து எழுதும் பரிந்துரைக் குழு உறுப்பினர்களான எழுத்தாளர்கள் தாம் அவ்வாறு ஒப்புதல் அளித்ததாகவோ தம் மீது அழுத்தம் ஏற்பட்டதாகவோ சொல்லவில்லை. அதெப்படி நூற்றுக்கணக்கான உறுப்பினர்களில் ஒருவர் கூட சொல்லாமல் இருப்பர்? ஒன்று அவர்களும் பணம் வாங்கியிருக்க வேண்டும் அல்லது அவர்களை திமுக மிரட்டியிருக்க வேண்டும். அவர்கள் பணம் வாங்கவில்லை என்று ராஜ்மோகன் கூறுகிறார். அவர்கள் மிரட்டப்பட்டால் இப்போது அதை வெளிப்படுத்த வேண்டியதுதானே. இப்பரிந்துரைக் குழுவைச் சேர்ந்த பெருமாள் முருகனே ...

தமிழ்நாடு ஏன் க்யானேஷ் குமாருக்கு எதிராகப் பொங்குவதில்லை?

  சினிமா போதையின் பிரச்சினைகளைப் பற்றி தமிழ்நாட்டு எழுத்தாளர்களே தொடர்ந்து அழுது புலம்பி சபித்து சமாதானமாகி இருக்கிறார்கள் இதுவரை. ஆனால் இப்போது முதன்முறையாக வெகுமக்கள் இடையில் சினிமா வெறியர்கள் அரசியல்மயமாவதற்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. குறிப்பாக 40-70 வயதுக்கு உட்பட்டோர் பேசுவதைக் கேட்டால் புரியும். அரசியல் நோக்கர்களும் இதனால் கசப்படைகிறார்கள். தமிழ்நாட்டினர் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டனர் என திருப்பூர் குணாவும், ஜீவாவும், ஆர்.கே. சண்முகவேலும் சேர்ந்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்கள் ("டிஜிட்டல் போதையில் நாம் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை"). அவர்கள் சமூகவலைதளச் செயல்பாடுகளும் தரவுப் பகுப்பாய்வுத் தொழில்நுட்பமும் விஜய்யின் வெற்றிக்கு எப்படிப் பயன்பெற்றன என்றே பிரதானமாகப் பேசினாலும் விஜய்யின் சினிமாப் புகழ் அவரை வைத்து நடந்த டிஜிட்டல் பிரச்சாரத்துக்கு அடிப்படை என்பதை அவர்கள் மறுக்கவில்லை. கடந்த தேர்தலின் போதிருந்தே 'தற்குறி' எனும் சொல் இதற்கென மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுவதையும் பார்க்கிறோம். 'தற்குறி' சினிமா ரசிக மனநிலை, சினிமா மந்தைத்தனம் ஆகியவற்றை...

தவெக வெற்றியும் வாக்காளர் நீக்க மோசடியும்

தவெக சில புதிய முதலீட்டிய சக்திகளால் ஆட்சிக்குக் கொண்டு வரப்பட்டது, ஆட்டுவிக்கப்படுகிறது என இடதுசாரிகள் சொல்வதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் பல்லாயிரம் கோடிகள் நிதியும் ஊடக ஆதரவும் மட்டுமே ஒரு கட்சியை சட்டென ஆட்சிக்குக் கொண்டு வராது. அதுவும் முழுமையான மக்கள் ஆதரவு இல்லாத, பெரும்பான்மை மக்களின் வாக்குகளை வெல்லாத ஒரு கட்சியை முதலாளிகளால் மட்டுமே வெல்ல வைக்க முடியாது. அங்குதான் தேர்தல் ஆணையர் க்யானேஷ் குமார் உள்ளே வருகிறார். அவரது தேர்தலில் சிறப்புத் தீவிர திருத்தம் எனும் வாக்குத் திருட்டும்தான் தவெக வெல்ல உதவியது. மிக அதிகமாக வாக்காளர்கள் நீக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக வென்றுள்ளதை ஹிந்து நாளிதழ் சுட்டிக் காட்டியுள்ளது. இது போக தவெக வென்ற சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் சரியாக வேலை செய்யாதது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையம் மறுக்கவும் இல்லை. முக்கியமாக, இது தற்செயலாக நடந்ததல்ல. அதாவது இந்த வாக்காளர் நீக்க மோசடி நிகழாதபட்சத்தில் தவெக உச்சபட்சமாக 50-80 இடங்களைக் கடந்திருக்காது. திமுகவும் அதிமுகவும் அழிக்கப்பட வேண்டும் என க்யானேஷ் குமார் விரும்பியுள்ளார். அதனாலே ...

வாக்காளர்களின் கருத்து மோதல்

அரசியல் மீம்களிலும் பதிவுகளிலும் தவெக எதிர்ப்பாளர்களின் கண்களை விஜய்யின் பெண் ஆதரவாளர்களின் செயல்கள் மீதுள்ள எரிச்சலை, அவர்களைப் பற்றின கவலைகளை, பகடிகளைப் பார்க்கிறேன். காட்சி ஊடகத்தைப் பொறுத்தவரையில் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதெல்லாம் ஒத்து வராது. தரவுகளைப் பார்ப்பதே சரி. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னால் டெக்கான் கிரானிக்கல் தொகுதி வாரியாக வாக்கு செலுத்திய வாக்காளர்களின் பாலின அடையாளத்தையும் அந்தந்த கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளையும் வைத்து ஒரு ஆய்வைச் செய்து வெளியிட்டிருந்தது. அதன்படி திமுக இம்முறை வெற்றி பெற்ற தொகுதிகளில் அதிகப் பெண்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்கள் அதிகமாக வாக்களிக்கும்போதெல்லாம் திமுக வெற்றிருக்கிறது. மாறாக ஆண்கள் அதிகமாக வாக்களித்தபோது தவெக வென்றிருக்கிறது. இதை நீங்கள் அப்பட்டமாகப் பார்க்க முடியாது. விஜய்யின் ரசிகைகளைப் போல இப்பெண்கள் தம்மை ஆரவாரமாக வெளிப்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் திமுகவின் ஏதோ சில திட்டங்களால் பலனடைந்ததாக உணரும் கணிசமான பெண்கள் இருக்கிறார்கள். இதை நான் ஒரு சாதனையாகச் சொல்லவில்லை - திமுக இந்த வாக்காளர்...

நாடகம் ஆரம்பம்!

  சரியாக இடைத்தேர்தலுக்கு முன் மத்தியப் குற்றப்பிரிவு போலிசார் ரெய்டு செய்கிறார்கள் எனில் இது ஏற்கனவே திட்டமிட்டது எனத் தெரிகிறது - அதாவது தவெக அரசின் நிர்வாகப் போதாமை, ஊழல் புகார்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றாமை, மின்தட்டு, மின்கட்டண உயர்வு எனப் பல பிரச்சினைகளால் மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இடைத்தேர்தலில் தம் சாதனைகளைச் சொல்லி தவெகவால் பிரச்சாரம் பண்ண இயலாது. ஒரே வழி கவனம் திருப்பி உணர்ச்சிகளைத் தூண்டி பிரச்சாரம் பண்ணுவது. இடைத்தேர்தலில் தவெக முழுக்க முழுக்க திமுகவின் ஊழல் புகார்களைப் பற்றியே பேசப் போகிறது. தன்னுடையது ஊழலற்ற ஆட்சி, திமுக ஊழல் ஆட்சி செய்தது என விஜய் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணப் போகிறார். எப்படியும் வழக்கில் ஆதாரம் இல்லையென அன்பில் மகேஸை விடுதலை பண்ணுவார்கள். அப்போது இன்னொரு வழக்கை திமுக மீது இவர்களோ மத்திய அரசை வைத்தோ பதிவு பண்ணுவார்கள். அதுவும் பின்னர் நீதிமன்றத்தால் கேள்விக்குள்ளாக்கப்படும். இப்படியே ஐந்தாண்டுகளை ஓட்டுவார்கள். ஒன்றிய அரசு இவர்களுக்குச் செய்யும் உதவிகளைப் பார்க்கையில் எந்தரங்கள் இடைத்தேர்தலிலும் வாக்குகளை தவெகவுக்கு அள்ளி வழங்குமெனத் தெரிகிறது. அ...

முதலையுடன் டின்னர் பார்ட்டி

ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வரும்போது அதன் மீதான அதிகாரமும் கட்டுப்பாடும் புதிய முதலாளித்துவ சக்திகளிடம் போகும். அவர்களிடம் நன்றி காட்டாவிடில் அக்கட்சியால் நீடிக்க இயலாது. ஆகையால் தாம் கொண்டு வரும், தம்மிடம் ஆதரவு கேட்டு நிதி தரும் சிறிதும் பெரிதுமான நிறுவனங்களுக்காக எதையும் விட்டுக் கொடுப்பார்கள் புதிய கட்சிக்காரர்கள். கன்னாபின்னாவென கட்டணத்தை உயர்த்தி தனியார் பேருந்து முதலாளிகளைச் சம்பாதிக்க தவெக அரசு கண்மூடித்தனமாக அனுமதிப்பது இதற்குத்தான். இம்மாதிரி 'ஒப்பந்தங்கள்' தேர்தலுக்கு முன்பே முடிந்திருக்கும். சரியான கொள்கையோ இலக்கோ இல்லாமல் மக்கள் வாக்களிக்கும்போது இப்படித்தான் அவர்கள் கைமாற்றி புதிய முதலாளிகளுக்கு ஆட்டு மந்தையாக விற்கப்படுகிறார்கள். அல்லது பழைய முதலாளிகள் புதிய அரசைப் பணிய வைக்க இயல்வதால் அவர்களிடம் நேரடியாக மக்கள் சிக்கிக் கொள்கிறார்கள். இது தவெகவில் மட்டும் நடக்கும் ஒன்றல்ல நேபாளத்திலும் ஒரு ரேப்பரை (பாலேந்திர ஷா) ஜென் ஸீயும் மத்திய வர்க்கமும் ஆதரவு கொடுத்து பிரதமர் ஆக்கியபோதும் நடந்தது. பல முடிவுகளை அவர் மக்கள் விரோதமாக எடுத்தார். எதிர்த்துப் போராடிய மக்களை காவல்...

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

வேலுக்கு அடுத்து சிலுவை அனுப்பு

தவெகவின் கிறிஸ்தவ சார்பு அரசியல் போலியான மிகைப்படுத்த்தப்பட்ட ஒன்று. அது ஒரு காட்சி அரசியல் மட்டுமே. சிறுபான்மை மக்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் தவெக அரசு கூட நிற்காது. ஏனென்றால் அது அவர்களுடைய கொள்கையே அல்ல. விவிலியத்தைக் கையில் சுமக்காத, ஜோசப், ஜேம்ஸ் என்றல்லாம் பெயர் வைத்துக் கொள்ளாதவர்களே உண்மையில் அம்மக்களுக்காக பாராளுமன்றத்தில் சண்டை போடுகிறார்கள். இந்த சிறுபான்மை பிம்பம் தமிழ்நாட்டு அரசியலில் மதத்தை ஒரு முக்கிய அலகாக்குவதற்காக பாஜகவால் மறைமுகமாகக் கொண்டு வரப்படுவது எனக் கூறப்படுவது உண்மைதான் - ஏனெனில் பல நேர்முகங்களில் இந்துத்துவர்களே இதை ஆதரிக்கிறார்கள். மதச்சின்னங்களை சட்டப்பேரவையில் பயன்படுத்துவது அவரவர் உரிமை என்கிறார்கள். இது ஒரு வெறுப்பரசியலை ஏற்படுத்தினால் அதைப் பின்னர் தம்மால் அறுவடை பண்ண முடியும் என நினைக்கிறார்கள். ஏனெனில் இதே கூட்டத்தினர்தாம் இன்னொரு பக்கம் கிறிஸ்தவ லாபி அரசியல் என்று விமர்சிக்கவும் செய்கிறார்கள். அடுத்து விஜய்யே செய்யும்போது நாங்கள் ஏன் இந்து மதத்தைத் தூக்கிப் பிடிக்கக் கூடாது எனக் கேட்பார்கள். முதலில் இப்படித்தான் முருகன், வேல் என்று எதையோ தூக்...

தமிழக டம்மி அரசு

  தமிழ்நாட்டு பட்ஜெட் கிட்டத்தட்ட ஒரு தேர்தல் அறிக்கையைப் போலவே உள்ளது. பல்வேறு கனவுத்திட்டங்கள், நனவுலகுக்கு வருவதற்கன நிதி ஒதுக்கீடு இல்லாத நிலை. அதுவும் முழுக்க முழுக்க சோ கால்ட் சமூக நீதித் திட்டங்களை வைத்து காதில் பூ சுற்றியிருக்கிறார். இவ்விசயத்தில் விஜய்க்கும் வேறு சில மாநில முதல்வர்களுக்கும் உள்ள ஒற்றுமையைக் குறிப்பிட வேண்டும்: சில மாநிலங்கள் மட்டுமே இன்று வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கிறார்கள். ஒன்றிய அரசு கூட சமூக நீதி எனும் பெயரில் ஏழைகளுக்கு ஆறுதல் உதவித் தொகைகளை பல்வேறு வழிகளில் கொடுத்து ஆறுதல்படுத்தவே செய்கிறது. ஏனென்றால் இன்னொரு பக்கம் பணவீக்கமும் வேலையின்மையும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. கட்சிகள் தம்மை நிலைப்படுத்திக் கொள்ளவும் தேர்தலில் தப்பிப் பிழைக்கவும் தங்க மோதிரம் தருகிறேன், பத்து சிலிண்டர் தருகிறேன், பைக் வாங்கித் தருகிறேன் என்று என்னென்னமோ ஆசை காட்டிக் கொண்டே ஆட்சிக்கு வருகின்றன. தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளைக் கேட்டால் தலைசுற்றுகிறது. தமிழ்நாட்டுடன் பத்து மாநிலங்களின் நிதியைச் சேர்த்தால் மட்டுமே அவற்றை நிறைவேற்ற முடியும். பட்ஜெட்டிலும் இவ்வாக்குறுதிகளி...

கொரில்லா ஆதரவாளர்கள்

  உதயநிதியைக் கண்டித்து ஏன் தவெகவினர் தமிழ்நாடு முழுக்க போராட்டங்கள் நடத்தவில்லை? ஏன் திமுகவால் முடிந்தது? தவெக அடிப்படையில் ஒரு கட்சியல்ல. அது ஒரு சற்றே பெரிய ரசிகர் மன்றம். அவர்களுடைய நோக்கம் தம் கட்சியை ஒரு மரபான கட்சியாகக் கட்டமைப்பது அல்ல. ஆகையால் அவர்கள் தெருவில் இறங்கி திரண்டு தம் குரலைப் பதிவு பண்ண மாட்டார்கள். விஜய்யின் பொதுக்கூட்டத்துக்கு கூட அந்தந்த ஊர்களில் இருந்து அல்ல வேறு ஊர்களில் இருந்தே பெருந்திரளாக பணம் கொடுத்து பார்வையாளர்களை அழைத்து வருகிறார்கள். அவர்கள் ரசிகர்களாகவும் இருக்கக் கூடும். அவர்களில் சிலர் தமக்கு உள்ளே செல்ல சீட்டுக் கிடைக்கவில்லை என்று அழுது மன்றாடியதைப் பார்த்திருக்கிறோம். டிஜிட்டல் உலகில் கூட எங்கே இருக்கிறார்கள் எனக் கண்டடைவது சிரமம். இன்ஸ்டா ஆதரவளர்கள் கூட கூலிக்கு அமர்த்தபட்டவர்களே என்கிறார்கள். திமுகவைப் போல இவர்களுக்கு நேரடி அரசியலில் நம்பிக்கையோ விருப்பமோ இல்லை. இவர்கள் அதற்குப் பதில் ஏற்கனவே நேரடி அரசியலில் இருக்கிற மாற்றுக் கட்சிக்காரர்களை தம் கட்சிக்குள் இழுத்து தேர்தலில் இடமளித்து பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகளை இக்கட்சி ஒரு...

தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்புப் போராட்டங்களை நீர்த்துப் போக வைக்கும் தவெக டூல் கிட்

  நியாயமாக தேர்வுத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டில் பொதுவெளிகளில்தான் நடந்திருக்க வேண்டும். தில்லி, பீகார், பஞ்சாபில் எல்லாம் அப்படித்தான் நடக்கின்றன. ஏன்? 1) தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் விஜய் அடிப்படையில் ஒரு பாசிஸ்டு என அறிவோம். அவர் இங்கு மக்கள் திரள்வதாக இருந்தாலும், அசைவதாக இருந்தாலும் அதனால் தனக்கும் தன் கட்சிக்கும் (அதாவது கட்சி எனும் ரசிகர் மன்றம்) லாபம் உள்ளதா எனப் பார்ப்பார். தான் இல்லாத எதுவொன்றையும் அவர் அனுமதிக்க மாட்டார். இது பொதுவாக சர்வாதிகாரிகளின் இயல்பே. 2) பாஜகவுக்கு எதிராக தானோ தன் கட்சிக்காரர்களோ (அதாவது போஸ்டர் ஒட்டும் ரசிகர்கள்) தன் மக்களோ (தனது ரசிகர்கள் என அவர் நம்புவோர் அல்லது இந்தியா முழுக்க தன் ரசிகர்கள் மட்டுமே இருப்பதாக அவர் நம்புவதால் அனைவருமே) தான் நினைப்பதை மட்டுமே பேச வேண்டுமென அவர் விரும்புகிறார். பாஜகவை நேரடியாகத் தான் எதிர்ப்பதாகபோ தன் மாநிலத்தில் எதிர்ப்பை தான் அனுமதிப்பதாகவோ ஒரு தோற்றம் ஏற்பட்டுவிட்டால் அடுத்த தேர்தலின்போது தனக்கு அவர்களின் 'உதவி' கிடைக்காமல் போய்விடக் கூடும், தனக்கெதிராக கரூர் வழக்கு முடுக்கி விடப்படும், கட...

திருடுவதற்குத்தான் இத்தனைப் பேச்சுமா?

  நாம் இந்த தவெக அரசை ரொம்பவே மிகை மதிப்பீடு செய்கிறோம் என தாமதமாகப் புரிந்துகொள்ள பழனி கோயில் நில மோசடி உதவியது. கடந்த சட்டமன்றக் கூட்டத்தில் அமைச்சர் ரமேஷ் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு கோயில் நிலத்தை பார்க்கிங் வசதிக் கட்டமைப்புக்காகப் பயன்படுத்தியது ஒரு முறைகேடு என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த கட்டமைப்புப் பணிக்கான ஒப்பந்தத்தை ரத்தும் செய்தார். நான் இதை ஒரு ஆர்.எஸ்.எஸ் கொள்கை என்றே பார்த்தேன். ஏனென்றால் ரமேஷ் ஒரு முன்னாள் ஆர்.எஸ்.எஸ் என்று அவரது பழைய முகநூல் பதிவுகளை வைத்துக் கணித்தேன். ஆர்.எஸ்.எஸ்காரர்கள் கோயில் சொத்தை வைத்துச் சம்பாதித்து அதைக் கோயிலுக்குப் பயன்படுத்துவதை அவர்கள் ஏற்க மாட்டார்கள். கோயில் நிதியைச் சமூகம் கொடுத்து அதைவைத்து விழா நடத்துவது, மதப்பிரச்சாரம் செய்வது ஆகிய பணிகளை மட்டும் செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய கொள்கை. இவ்வாறு செய்யும்போது அதற்குள் கறுப்புப் பணம் விளையாடுவது சுலபமாகும். பல கார்ப்பரேட் சாமியார்கள் இப்படித்தான் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கிக் கொடுக்கிறார்கள். ஆனால் பழனி நில மோசடியைப் பார்க்கையில் ரமேஷ் இந்தளவுக்கு எல்லாம் கொள்கை ரீதி...

அமைச்சர் கீர்த்தனாவின் முன்னெண்ணமும் திமிரும்

  அமைச்சர் கீர்த்தனாவின் காணொளி ஒன்றைக் கண்டேன். அவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தன் காமிரா டீமுடன் ஆய்வுக்குப் போய் ஒரு வகுப்பறைக்குள் நுழைகிறார். மாணவிகளைக் காட்டுவது, கீர்த்தனாவிடம் மிட் ஷாட், குளோஸ் அப், லாங் ஷாட் என காமிரா பாய்ந்து பாய்ந்து படம் பிடிக்கிறது. கீர்த்தனாவிடம் ஏற்கனவே ஒரு திரைக்கதை இருந்தது தெரிகிறது - அவர் ஒரு மாணவியை அழைத்து அவரிடம் உள்ள பாடநூலில் இருந்து ஒரு ஆங்கில வார்த்தைக்குப் பொருள் கேட்கிறார். மொத்த மாணவர்களும் பதிலளிக்கிறார்கள். ஓக்கே என்று இன்னொரு சொல்லை எடுக்கிறார். சற்று நேரம் அமைதி நிலவுகிறது. பார்த்தீங்களா என்றவாறு கீர்த்தனா ஆங்கில ஆசிரியைப் பார்க்கிறார். முதல் வரிசைப் பெண் குழந்தை எழுந்து அதற்கு ஒருவாறு பதில் சொல்கிறார். இப்போது கீர்த்தனா தன் திரைக்கதையில் இருந்து விலக விரும்பாமல் "இப்படி புத்தகத்தில் உள்ளதை மட்டும் படிச்சு பதில் சொன்னா போதாது. ஸ்போக்க இங்கிஷ் தெரியுமா?" என்கிரார். அப்பெண் குழந்தை தயங்குகிறது. அதான் சொல்றேன் எனும் கணக்கில் பேசிவிட்டு கீர்த்தனா அடுத்து அக்குழந்தையிட...

கவனம் திருப்பித் திருடும் பழைய உத்தி

  செய்தி: //தமிழகம் முழு​வதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்​துக்கு ரூ.5 லட்​சம் முதல் ரூ.30 லட்​சம்வரை அமைச்​சர்​கள் லஞ்​சம் பெறு​வ​தாக தவெக பெண் வழக்​கறிஞர் ஒரு​வர் வழக்கு தொடர்ந்​துள்​ளார். இது தொடர்​பாக விழுப்​புரத்தை சேர்ந்த தவெக வழக்​கறிஞரணி நிர்​வாகி​யான எம்​.​ஞானசவுந்​தரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​: தமிழகம் முழு​வதும் உள்ள நீதி​மன்​றங்​களில் அரசு வழக்​கறிஞர்​களை நியமிப்​பது தொடர்பாக தமிழக அரசு கடந்த ஜூன் 5-ம் தேதி அறி​விப்​பாணை வெளி​யிட்​டது.// இதை சுமார் 120 கோடி மதிப்பிலான ஊழல் என்கிறார்கள். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. தவெக மாவட்டச் செயலாளர்களைக் கொண்டு எல்லா மாவட்டங்களிலும் பட்டியலில் உள்ள வழக்கறிஞர்களிடம் பேசி வாங்கியிருக்கிறார்கள். ஒரு கட்சியின் ம.செக்கள் தலைமைக்கு - அமைச்சர்களுக்கு - தெரியாமல் இதைச் செய்ய முடியாது என்பது பொது அறிவு. இம்மாதிரி ஊழல்கள் ஒவ்வொரு துறைக்கும் மாதாமாதம் நடந்தால் வருடத்திற்கு எவ்வளவு வரும்? நான் என்றுமே தவெக ஒரு தூய ஆட்சியை நடத்துகிறது என நம்பியதில்லை என்பதால் எனக்கு இது ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை. இது இயல...