முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதலையுடன் டின்னர் பார்ட்டி

May be an image of text that says '1h Polimer News @poli... χ Polimer "சம்பளமே ஒரு நாளைக்கு ரூ. .1000 NEWS தான் ஆனா பஸ் டிக்கெட் ரூ. .2500.. பண்டிகை நாள் கூட ஊருக்கு போக முடியல.. தயவுசெஞ்சு ஆக்சன் எடுங்க cm சார்.." ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையால் திண்டாடும் பயணிக Show more ககோயம்பேடு Polimer NEWS Apple| Palimer ATS หหหบ'

ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வரும்போது அதன் மீதான அதிகாரமும் கட்டுப்பாடும் புதிய முதலாளித்துவ சக்திகளிடம் போகும். அவர்களிடம் நன்றி காட்டாவிடில் அக்கட்சியால் நீடிக்க இயலாது. ஆகையால் தாம் கொண்டு வரும், தம்மிடம் ஆதரவு கேட்டு நிதி தரும் சிறிதும் பெரிதுமான நிறுவனங்களுக்காக எதையும் விட்டுக் கொடுப்பார்கள் புதிய கட்சிக்காரர்கள். கன்னாபின்னாவென கட்டணத்தை உயர்த்தி தனியார் பேருந்து முதலாளிகளைச் சம்பாதிக்க தவெக அரசு கண்மூடித்தனமாக அனுமதிப்பது இதற்குத்தான். இம்மாதிரி 'ஒப்பந்தங்கள்' தேர்தலுக்கு முன்பே முடிந்திருக்கும். சரியான கொள்கையோ இலக்கோ இல்லாமல் மக்கள் வாக்களிக்கும்போது இப்படித்தான் அவர்கள் கைமாற்றி புதிய முதலாளிகளுக்கு ஆட்டு மந்தையாக விற்கப்படுகிறார்கள். அல்லது பழைய முதலாளிகள் புதிய அரசைப் பணிய வைக்க இயல்வதால் அவர்களிடம் நேரடியாக மக்கள் சிக்கிக் கொள்கிறார்கள்.

இது தவெகவில் மட்டும் நடக்கும் ஒன்றல்ல நேபாளத்திலும் ஒரு ரேப்பரை (பாலேந்திர ஷா) ஜென் ஸீயும் மத்திய வர்க்கமும் ஆதரவு கொடுத்து பிரதமர் ஆக்கியபோதும் நடந்தது. பல முடிவுகளை அவர் மக்கள் விரோதமாக எடுத்தார். எதிர்த்துப் போராடிய மக்களை காவல் துறையால் நசுக்கினார். பஞ்ச தந்திரக் கதையொன்றில் தன் நண்பனான முதலை மீது அமர்ந்து டின்னருக்குப் போன குரங்கின் நிலைதான் மக்களின் நிலை இப்போது.
பாடம்: ஒரு புதிய கட்சி களத்துக்கு வந்து மலிவு விலைக்கு பக்கெட், பீரோ விற்கிறோம், பத்தாயிரம் தந்தால் அதை மூன்று மாதங்களில் ஒரு லட்சம் ஆக்கித் தருகிறோம் எனும் கணக்கில் பிரச்சாரம் பண்ணினால் அவர்களுக்குப் பின்னுள்ள நிதியாளர்கள், நிறுவனங்கள் யார் என விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பணத்தின் நதி மூலத்தைத் தெரிந்து கொள்ளாமல் உடனே ஆதரவு கொடுக்கக் கூடாது. ஏனென்றால் நீங்கள் அளிக்கும் வாக்கு அக்கட்சிக்கு அல்ல, அந்நிறுவனங்களுக்கே. அவர்கள்தாம் அக்கட்சியை முகமாக வைத்து ஆட்சியை நடத்தப் போகிறார்கள். மின்சாரக் கட்டண உயர்வு, தனியார் பார்கள், குட்டிக் குட்டி கல்லூரிகளை தனியார் பல்கலைகள் ஆக்குகிறோம் எனும் பெயரில் கட்டணக் கொள்ளை அடிப்பது எல்லாமே தவெக அரசு செய்கிற காரியங்கள் அல்ல, இம்முதலாளிகள் செய்வதே.
முதலையுடன் கைகுலுக்கி நட்பாகும் முன்பு அதன் மனைவி யார், அவர் நம் இதயத்தைக் கேட்பாரா என்று யோசிக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...