முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஷகிப் அல் ஹசன் மீதான தடை: Thought Policeஇன் காலம் இது

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷகிப் அல் ஹசனைத் தெரிந்திருக்கும் - வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ; சூப்பர் ஸ்டார் . நீண்ட காலமாக வங்கதேசத்தை தோளில் சுமப்பவர் . ஐ . பி . எல்லில் சன் ரைஸர்ஸ் அணியில் ஆடுபவர் . அபாரமான பேட்ஸ்மேன் . கட்டுப்பாடான சுழலர் . ஆனால் ஹசன் இப்போது ஐ . சி . சி . சூதாட்ட தடுப்பு அமைப்பால் (Anti-corruption Unit) ஒரு வருடத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளார் - அவர் மீதுள்ள குற்றச்சாட்டு தான் சுவாரஸ்யமானது . கடந்த வருடம் தீபக் அகர்வால் எனும் சூதாட்ட முகவர் இவரை சேட்டில் தொடர்பு கொள்கிறார் . தொடர்ந்து இருவரும் வாட்ஸ் ஆப் பண்ணிக் கொள்கிறார்கள் . அணியில் இடம்பெறும் வீரர்கள் குறித்த தகவல்களைக் கேட்கிறார் . ஹசன் இதற்கு பதில் அளிக்கிறாரா குற்றத்தில் ஈடுபட்டாரா எனத் தெரியவில்லை . அதற்கான ஆதாரம் ஐ . சி . சியிடம் இல்லை என நினைக்கிறேன் . அதனால் சூதாட்ட முகவரிடன் தொடர்பு கொண்டதை தம்மிடம் தெரிவிக்கவில்லை எனும் காரணத்துக்காக அவரை தடை செய்திருக்கிறது . இந்த விதிமுறை பற்றித் தான் நான் ஒரு கேள்வியை ...

குழந்தைகளின் மரணங்கள்

தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் 11 குழந்தைகள் ஆழ்துளை கிணறுகளில் விழுந்திருக்கிறார்கள் என்கிறார்கள் . அவர்களில் 3 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளனர் . 4 பேர் காப்பாற்றப்பட்டும் இறந்து போயிருக்கின்றனர் . காப்பாற்றப்பட்ட குழந்தைகளும் கூட 15-25 அடி ஆழமுள்ள ஆழ்துளைகளில் விழுந்தவர்கள் . அவர்களை விழுந்த மூன்று நான்கு மணிநேரங்களுக்குள் மீட்டு விட்டனர் . நேரம் ஆக ஆக குழந்தைகள் தப்பிக்கும் வாய்ப்பு மிகவும் குறைந்து போகிறது என ஆழ்துளையில் விழுந்த குழந்தைகளை மீட்கும் எந்திரத்தை கண்டுபிடித்த மணிகண்டன் சொல்கிறார் .  மணப்பாறை அருகே நடுக்காட்டிப்பட்டியில் ( தற்போது இறந்து போயுள்ள ) சிறுவன் சுஜித் விழுந்த ஆழ்துளைக் கிணறு வெகு ஆழமானது ; மேலும் மழை பெய்து நிலம் ஈரமாகி சுலபத்தில் இளகக் கூடிய நிலையில் இருந்தது . அவன் விழுந்து பல மணிநேரங்களுக்குப் பிறகே மீட்புப்பணி தொடங்கியது . அப்போதும் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் குழிக்குள் மண் சரிந்து அவன் மேலும் கீழே 90 அடி ஆழத்துக்கு சென்று விட்டான் . இப்படி சுஜித்தின் விச...

ராஜன் குறைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

ராஜன் குறைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.  ஒரு சிந்தனையாளராக நமக்கெல்லாம் பெரிய உத்வேகம் அவர். அவரது நிலைப்பாடுகளை ஏற்கிறோமே இல்லையோ அன்றாட அரசியலின் பல சிக்கல்களை கட்டவிழ்த்து விடுவதில் வல்லவர் அவர் என்பதை மறுதரப்பினரும் ஏற்றாகவே வேண்டும். அவரை மறுத்து யோசிக்க முயன்றால் கூட உங்கள் சிந்தனை துலங்க ஆரம்பிக்கும். அவரை ஏற்கிறவர்கள் கூடுதலாக தம் தர்க்கத்தை, தகவல் அறிவை வலுப்படுத்தலாம். அ. மார்க்ஸுடன் நான் போற்றுகிற அறிவு ஆசான்! தொடர்ந்து எங்களோடு இருங்கள்!

யார் அசலான இந்து?

கேள்வி: இந்துவாக இருப்பதையே கேலி கிண்டல் செய்வதுதானே நம்மூர் மூடப்பகுத்தறிவின் வேலை சார்? பதில்: இந்துவாக இருப்பதை அல்ல வைதீகவாதியாக இருப்பதையே முற்போக்காளர்கள் கேலி செய்கிறார்கள். நமது மதத்தின் ஒன்பது கிளைகளில் ஒன்று மட்டுமே வைதீகம். இறைவனை, வழிபாடுகளை மறுப்பதே அசலான இந்து மதம். ஒருவிதத்தில் பெரியார் ஒரு உன்னத இந்து... ஒரு வைதிக இந்துவை விட மேலான இந்து!

சாகித்ய அகாதெமியிடம் (கூடவே அரசிடமும்) வைக்க வேண்டிய கோரிக்கைகள்

1) சாகித்ய அகாதெமி பரிசைப் பற்றி இளங்கோ கிருஷ்ணன் சொல்வதைப் போல வருடத்திற்கு ஒரு பரிசு என்பதை நான்கு அல்லது ஐந்து பரிசுகளாக வகுத்துக் கொள்ளலாம் . நாவல் , சிறுகதை , கவிதை , உரைநடை , விமர்சனம் என்பதோடு , எதிர்காலத்தில் , பதிப்பிக்கப்பட்ட திரைக்கதைக்கும் ஒரு விருதை வழங்கலாம் . இது வருங்காலத்தில் தமிழில் திரைக்கதை எனும் துறை ஒரு எழுத்துத் துறையாக மாற உதவும் . 2) நிச்சயமாக பரிசுத்தொகையை அதிகரிக்க வேண்டும் . 25 லட்சம் ஒரு நல்ல தொகை . அல்லது வேறு சில மாநில அரசுகள் பண்ணுவதைப் போல பரிசு பெறும் படைப்பாளிக்கு ஒரு புது வீட்டை அளிக்கலாம் . 3) எப்படி யுவ புரஸ்கார் எனும் வகைமை உள்ளதோ அதே போல பெண் படைப்பாளிகள் , மாற்றுப்பாலினத்தோர் எழுத்துக்களுக்கென தனி பரிசுகளை அகாதெமி உருவாக்கலாம் . 4) விருதாளர்களை பாராளுமன்றத்தில் வைத்து பிரதமர் கௌரவிக்கலாம் . இது தேசம் முழுக்க ஒரு கவனத்தை உண்டு பண்ணும் . உலக அளவில் கூட பேசப்படலாம் .

நேர மேலாண்மை - பத்து பரிந்துரைகள்

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார் ; எப்போது பார்த்தாலும் “ ஐயோ ரொம்ப வேலைகள் இருக்குதுங்க ” என களைப்பாக சொல்வார் . ஆனாலும் ஒரு உதவி கேட்டால் முடியாதென்று சொல்ல மாட்டார் - “ சரிங்க ,  உடனே பண்ணுவோம் . நாளைக்கு வாங்க ” என்பார் . இவ்வளவு பிஸியானவர் எப்படி நமக்கு உதவுவார் என நாம் குழம்பாதபடி அவர் பரிபூரணமான அன்புடன் அதைச் சொல்வார் . அடுத்தடுத்த நாட்களில் அவரை வைத்து வேலை சுலபத்தில் முடியாது என புரிந்து கொள்வீர்கள் . ஏனென்றால் உங்களைப் போன்றே வேறு பலருக்கும் அவர் பல உதவிகளை ஒத்துக்கொண்டிருப்பார் . இது போக அவரை சந்திக்கவோ சும்மா பேசவோ யாராவது வந்தாலும் தன் அத்தனை வேலை சுமைகளுக்கு நடுவிலும் அவர்களிடம் சிரித்தபடி உரையாடுவார் . ஒருநாளில் முடிக்க வேண்டிய வேலையை அவர் நான்கைந்து நாட்களாய் எடுத்துக் கொள்வார் - அந்த நான்கைந்து நாட்களில் அவர் பத்து பதினைந்து வேலைகளை செய்து முடிக்க முயல்வார் . சதா தத்தளித்தபடி இருக்கும் ஒரு நல்ல மனிதர் . ஆனால் எனக்கு அவரைப் பார்த்தால் சற்று வருத்தமாக இருக்கும் .  ...

யுவ புரஸ்கார் விருதாளர்களுக்கான கருத்தரங்கம் - மனப்பதிவு

பாரதியார் பல்கலைக்கழக முதுகலை  மாணவர்களுடன் நேற்று பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்த யுவ புரஸ்கார் விருதாளர்களுக்கான கருத்தரங்கம் ஒரு நிறைவான அனுபவமாக அமைந்தது . சென்னையில் அடிக்கடி சந்தித்துக் கொண்டிருந்த லஷ்மி சரவணகுமார் , மனுஷி , சுப்ரபாரதிமணியன் , வீரபாண்டியன் , முதன்முதலாக நாவலாசிரியர் மலர்வதியை என பலருடன் அளவளாவி சிறுபத்திரிகை மூடுபனிக்குள் ஒற்றர்களைப் போல மறைந்து சிறிது நேரம்   இருக்க முடிந்தது . நிகழ்ச்சியில் பேசிய படைப்பாளிகள் , விமர்சகர்கள் , நெறியாள்கை செய்து அறிமுகவுரை , நன்றியுரை , நிறைவுரை வழங்கிய தமிழ் பேராசிரியர்கள் , பாரதி கிருஷ்ணகுமார் , ஆண்டாள் ப்ரியதர்ஷினி ஆகியோரின் அழகிய தமிழ் மற்றும் எழுச்சியான உரைகளை கவனித்து என்னை மறந்து முழுநாளும் இருந்தேன் ( மாலை ஆனதும் பயண அசதியில் அவ்வப்போது கண்ணசந்து விட்டேன் என்றாலும் ).