கரப்பான் பூச்சிப் போராட்டங்கள் இரு கூறுகளாகப் பிரிந்திருக்கின்றன. ஒரு பக்கம் காங்கிரஸுடன் லெனினிய கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பின் நேஹா போரா; இன்னொரு பக்கம் ஆம் ஆத்மி பின்னணி கொண்ட தீப்கே, ரங்கா போன்றோர். ராகுல் காந்தி ஆம் ஆத்மி பின்னணி கொண்ட கரப்பான் பூச்சித் தலைவர்களை பாஜகவுக்கு எதிர்க்கட்சியாக, காங்கிரஸுக்குப் பதிலியாக முன்வைக்க சில சக்திகள் முயல்வதாகச் சந்தேகப்படுகிறார் (தமிழ்நாட்டில் திமுக இரு தரப்பு கரப்பான்களையும் ஆதரிக்கிறது, ராகுலுக்குச் சார்பாகப் பேசாமல் இருக்கிறது). இப்போது போராட்டம் யார் மூன்றாவது அணி என்பதில்தான். இன்னொரு பக்கம், கடந்த முறை விமர்சகர்கள் கேட்ட கேள்விக்கு ஓரளவுக்கு விடை கிடைத்துவிட்டது - முதல் நிலைப் போராட்டத்தின்போது பாஜக அரசு எப்படி தீப்கே, நேஹா போரா உள்ளிட்டோரை ஜந்தர் மந்தரில் தொடர்ச்சியாகப் போராட அனுமதித்தது? அப்போது பாஜகவுக்கு இப்போராட்டங்களைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம் என ஒரு உத்தேசம் இருந்திருக்க வேண்டும். அவர்கள் கரப்பான் பூச்சிகளைக் குறைத்து மதிப்பிட்டிருக்க வாய்ப்பு மிக மிகக் குறைவே. ஆனால் வடமாநில கல்லூரிகளின் மாணவர் அமைப்...