முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வந்து பிரிவதும் சென்று பிரிவதும்

வந்து வந்து பிரிபவர்களின் இருப்புகள் நமக்கான தண்டனைகள் ஒருவர் கூட இருப்பதும் சட்டென்று விலகுவதும் ஒரு முட்டை ஓட்டைப் போல் நம்மை நொறுக்கி விடுகின்றன

கோகிலாவின் அம்மா

அம்மா கணினியில் தலைவிட்டு தேடிக் கொண்டிருந்தாள். கோகிலா தன் குட்டிப் பின்னலை வைத்து விளையாடியபடி டி.வி சேனல்களை மாற்றினாள். கொஞ்ச நாளாக அவள் கார்டூன் தமிழ் பேச ஆரம்பித்திருந்ததால் அம்மா அவளை வளர்ந்தோருக்கான சேனல்கள் பார்க்க சொல்லி இருந்தாள். கோகிலாவுக்கு சீரியல்கள் பிடித்தன.

நம் குழந்தைகள் நம் குழந்தைகள் அல்ல: கருணைக்கொலையும் சமூகமும்

கும்பகோணத்தை சேர்ந்த ஜெயா என்பவரின் 12 வயது குழந்தை மதுமிதா ஒரு செரிபிரல் பால்ஸி நோயாளி. அவளால் பேசவோ நடக்கவோ பிறரை அடையாளம் காணவோ முடியாது. மற்றபடி முழுமையான பிரக்ஞை கொண்ட மனித உயிர் தான். அக்குழந்தையை பார்த்துக் கொள்வது சிரமம் என்று அவளது தாய் அவளை கருணைக்கொலை செய்யும் படி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார். அவரது வாதம் 1.   1.  தன் குழந்தையை பராமரிக்கும் ஆற்றல் தனக்கு இல்லை 2.    ஒரு குழந்தைக்கான நடமாடி பேசி தொடர்புறுத்தும் திறன்கள் அவளுக்கு இல்லை என்பன.

நித்தியானந்த குருவும் சீடர்களும்

ஆத்திகனும் இல்லை நாத்திகனும் இல்லை - இந்தியன் ஐந்து வருடங்களுக்கு முன் சத்யசாயி பாபாவை விமர்சனம் செய்யும் ஜி.ஆர்.ஆர் பாபுவின் “ Sex , Lies, and Video Tape ” என்கிற கட்டுரையை “புதியகாற்று ” என்கிற பத்திரிகைக்காக தமிழாக்கம் செய்து கொண்டிருந்தேன். ஒருநாள் அது பற்றி குறிப்பிட்ட போது முற்போக்கு சிந்தனை கொண்ட என் தோழி “தயவு செஞ்சு அதைப் பண்ணாதே ” என்று கெஞ்சினாள்.

100% கச்சிதமான பெண்ணை ஒரு அழகான ஏப்ரல் மாத காலையில் பார்ப்பது பற்றி - ஹருகி முராகாமி

ஒரு அழகான ஏப்ரல் மாத காலையில் டோக்யோவின் நவீன மோஸ்தர் மிக்க ஹருஜிக்கோ சுற்றுவட்டாரத்தில் ஒரு குறுகலான தெருவில் 100 சதவீதம் கச்சிதமான பெண்ணை கடந்து நடந்து சென்றேன்.