நாள் 1 காட்சி 1 செவிலிகள் வீணா, நதியா மற்றும் ஜொவினா. நதியா உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கிறாள். போனை எடுத்து “வார்டு G2க்கு ரெண்டு செலைன் சொல்லி இருந்தோமே ஆங் ஆள் இல்லியா, ஆள் அனுப்புங்க, யாரும் இல்லேனா நீங்களே எடுத்து வாங்க, கடைசியில நான் தான் டாக்டருக்கு பதில் சொல்லணும். பேஷண்டுக்கு அடுத்த பாட்டில் மாத்திட்டு தான் நான் கிளம்பனும். அரைகுறையா விட்டுட்டு போக சொல்றீங்களா? ஒரு பொறுப்பு வேணாமா, அரை மணி முன்னே கூப்டேன் இதையே சொல்றீங்க, ஹலோ ஹலோ”, எதிரில் லைன் கட்டான ஒலி கேட்க கோபமாக போனை வைத்து விட்டு வேலையை தொடர்கிறாள். அடுத்த போனை எடுத்து “ஹவுஸ் கீப்பிங் தானே, பத்து நிமிசத்துக்கு முன்னாடி கூப்டிருந்தேனே? அதான் பில்லோ, பெட்ஷீட் கவர் மாத்தனும், பெட் நம்பர் 38, அவங்க கேட்டு ஒரு மணிநேரம் ஆகுது. என்னது பத்து நிமிஷம் தானே ஆச்சா? ஹலோ நான் அதுக்கு முன்னாடி ரெண்டு தடவை கூப்பிட்டாச்சு. நீங்களே கணக்கு போடுங்க, இல்ல நானே ஹவுஸ் கீப்பிங் வேலையையும் பண்ணனுமா? நான் இன்னும் டாக்டர் வேல மட்டும் தான் பாக்கல”. மீண்டும் போனை வைக்க நினைத்து திரும்ப எடுத்து “வருவீங்களா இல்லியா? நான் ரிப்போர்ட்” அ...