முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர்களுக்கு இலவசம்

  புனைவெழுதப் பயிற்சியளிக்கும் இணைய வழிப் பட்டறைகளில் முதல் பட்டறை அடுத்த ஞாயிறு அன்று காலை பத்து மணிக்கு நடக்கிறது. இதில் கலந்து கொள்வது மாணவர்களுக்கு முற்றிலும் இலவசம். அவர்கள் இந்த கூகிள் பார்ம் தொடுவழிக்குப் போய் அதில் தம் விபரங்களைக் கொடுத்தால் கூட்டத்திற்கான தொடுவழியை மின்னஞ்சல் செய்வேன். என் மாணவர்களிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன்.  அவர்கள் வந்து விடுவார்கள். நீங்கள் எழுத ஆர்வம் கொண்ட மாணவராக இருந்தால் பயன்படுத்துங்கள். உங்கள் நண்பர்கள், பரிச்சயக்காரர்கள் இடையே அத்தகைய மாணவர்கள் உண்டெனில் அவர்களிடம் சொல்லுங்கள்: https://forms.gle/46fbD5ppzDhksYYw6

புனைவெழுதும் பட்டறைக்கான மொழி

அடுத்த மாதம் ஆறாம் தேதி நான் புனைவு எழுதும் பயிற்சிப் பட்டறையை ஆங்கிலத்திலேயே நடத்த இருக்கிறேன். சொல்லப் போனால் தொடர்ச்சியாக சில பட்டறைகளை இவ்வாறு புனைவெழுத்து குறித்த சின்னச்சின்னத் தலைப்புகளில் குறைந்த கட்டணத்தில் ஆங்கிலத்தில் நடத்தலாம் என இருக்கிறேன். என் உத்தேசம் தமிழைக் கடந்து உள்ள இளம் படைப்பாளிகளிடம் பயிற்சியை எடுத்துச் செல்வது. ஒரு தமிழ்ப் படைப்பாளியாக தமிழின் எல்லைகளைக் கடந்து செல்ல வேண்டும் எனும் விருப்பம் எனக்கு உள்ளது. நான் ஒரு ஆங்கில ஆசிரியராகவும் உள்ளது இதற்கு உதவுகிறது. கடந்த பத்தாண்டுகளில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு புனைவெழுதும் வகுப்புகளை நடத்திய அனுபவமும் உண்டு. இந்த எண்ணத்தை எனக்குள் விதைத்தவர் சாரு நிவேதிதா. அவரைப் பாருங்கள் இந்த வயதில் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதுகிறார். நாவலை இரு மொழிகளில் பிரசுரிக்க நினைக்கிறார். ஏனெனில் ஆங்கிலம் வழி நாம் அடையக் கூடிய உலகம் மிகப் பெரிது. அதே நேரம் நான் தமிழ்ப் புலத்துக்குள் இத்தனை ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வந்துள்ளதால் சட்டென விரிவான ஒரு வாசகப் பரப்பை ஆங்கிலம் வழியாக அடைய இயலாதுதான். நிறைய இளம் படைப்பாளிகள் தமிழுக்கு வெளியே ...

விவாகரத்து: பதினேழு பொன்மொழிகள்

  கீழ்வரும் பொன்மொழிகள் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மேளாவில் கலந்துகொள்ளும் இளம் துன்பியல் நாயகர்களுக்குக்கானவை: 1. “நாம பிரிஞ்சிரலாம்” என மனைவி கோபத்தில் சொன்னதுமே அவரிடம் நேரடியாக விசாரித்து விடுங்கள். நீங்கள் விவாகரத்தின் போது பயப்பட மாட்டீர்கள் என்றும், எப்படி அதைச் சமாளிப்பீர்கள் என்றும் விளக்குங்கள். இதை ஒரு தனிப்பட்ட பிரச்சினையாக மாற்றி கோபப்படாமல் நிதானமாக நடைமுறையைப் பற்றிப் பேசுங்கள். உங்களுக்கு அவரிடம் எந்த வெறுப்பும் இல்லையென்றும், வழக்கின் போது உங்கள் தற்பாதுகாப்புக்காக எந்த நியாயமான எல்லைக்கும் போவீர்கள் என்றும் சொல்லுங்கள். கோபப்படும் அந்நொடியே நீங்கள் தோற்றுப் போவீர்கள். “ஏங்க நான் சும்மாதான் சொன்னேன், அதுக்கு ஏன் நீங்க இந்தளவுக்குப் போறீங்க?” என அவர் சொல்வார். ஆனால் அவருக்கு நீங்கள் சொல்கிற உண்மை அடிமனத்தில் போய் பதியும். தனிமையில் யோசிப்பார். 2. நீங்கள் புது வணிகமொன்றை ஆரம்பிக்க ஐடியா தேட ஆரம்பியுங்கள். 3. அடுத்தடுத்து அவர் பிரிவதாகப் பேசுகிறார் எனில் வக்கீலிடம் பேச ஆரம்பித்து விட்டார் எனப் பொருள். இப்போது புது வேலைக்கான நேர்முகங்களில் கலந்து கொள்ளுங்கள்....

மோசடி மன்னன்

  இந்த சுபாஷ் சந்திரா எப்படி 22,000 கோடியை யெஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் இருந்து கடனாகப் பெற்று அது தள்ளுபடி செய்யப்பட்டு அதை வைத்து ஒரு லாபம் ஈட்டியிருக்கிறார் என நேற்று தேடிப் படித்தேன். சுவாரஸ்யமாக இருந்தது. கொயிங்கா குடும்பம் தானிய வியாபாரிகள். நீண்ட காலமாக அப்படித்தான் இருந்தார்கள். சுபாஷ் சந்திரா வந்த பின்னர்தான் உற்பத்தி, ஊடகம், டிவி எனப் பெரும் வளர்ச்சி அடைகிறார்கள். அதிலும் அவர் நிதியைப் பெற்றதிலும் கடனை வாங்கி தன் நிறுவனங்களுக்குள் சுற்ற விட்டதிலும் பல ஊழல்கள் பண்ணியுள்ளார். அவர் மட்டுமல்ல மேலும் சில பெரும் கார்ப்பரேட்டுகளின் தலைமையில் உள்ள குடும்பங்கள் இவ்வாறு பண்ணியிருக்கிறார்கள் என்றாலும் சந்திரா விசயத்தில் ஒரு தனித்துவம் இவர் பத்து பதினைந்து கம்பெனிகளை எஸல் எனும் பெயரில் ஆரம்பித்து அவற்றுக்குக் கடன் கொடுக்க தானே உத்தரவாதமளிப்பதாக ஒப்பமிட்டுக் கொடுத்துள்ளார். ஆனால் இவ்வளவு ஆயிரம் கோடிகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் அளவுக்கு இவரிடம் சொத்தோ பணமோ இல்லை. இதை விசாரிக்காமல் அல்லது பொருட்படுத்தாமல் கடனை அள்ளிக் கொடுத்ததுதான் மோசடியின் ஆரம்பம். ஏனென்றால் வங்கியின் நிர்வாகிகளுக்...

கதைத் திட்டத்தை எழுதும் பயிற்சிப் பட்டறை

  புனைவெழுதுவது குறித்து பயிற்சிப் பட்டறை நடத்த நண்பர்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இதோ ஒரு ஒருமணிநேர இணையவழிப் பட்டறை. எப்படி ஒரு நாவலுக்கான கதைச் சுருக்கத்தை, வடிவத்தைத் திட்டமிடுவது எனச் சொல்லித் தரப் போகிறேன். ஆங்கிலத்தில்தான் நடத்தப் போகிறேன். தமிழைத் தாண்டி எழுதும் பயிற்சியைக் கொண்டு செல்வதே நோக்கம். உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். கட்டணம் ரூ 250.

Fiction Outlining Workshop

  ✍️  Have a story idea but don’t know how to structure it? Join me for a  1-hour online workshop on Outlining for Fiction Writers , where we’ll explore practical ways to develop your idea, structure your plot, work with characters and conflict, and create an outline that helps you write with direction. 📅  6 September 2026 ⏰  10:00 AM IST 💻  Live Online | 1 Hour 💰  ₹250 I’m a  Sahitya Akademi Award-winning author of 4 novels and 2 short story collections , with a  PhD in English  and  9 years of experience teaching creative writing to university students . Register here: https://forms.gle/wRALx4kinHmQXzBm7 #FictionWriting #CreativeWriting #WritingWorkshop #Storytelling #Writers #NovelWriting #Outlining

"பாலன்" - திருப்பம்

  "பாலன்: எ பாய்" படத்தின் திருப்பத்தைப் பார்த்தேன். சிறுவன் தன் அம்மா தனக்காக அந்தப் பகுதியிலேயே தொடர்ந்து இருப்பதாக நம்புவது, அவன் அங்கு சென்று அமர்ந்ததும் அவர் பின்னிருந்து வருவது அவனது பிரமை என்பதே என் புரிதல். அவன் தன் மனத்தின் லூப்புக்குள் முழுமையாக மாட்டிக் கொள்கிறான், அவன் இனிமேல் தன் அம்மாவின் பிரமை சொல்லும் கதைகளை ஒட்டித் தன் வாழ்வை அமைக்கப் போகிறான் எனச் சொல்லும் முடிவு. இதை அப்பட்டமாகக் காட்டக் கூடாது என்று அம்மாவின் தோற்றத்தை சற்று வயதாகி விட்டதாகக் காட்டியிருக்கிறார்கள். இது அதிர்ச்சிகரம்தான் என்றாலும் அர்த்தபூர்வம் அல்ல. அதனாலே ஈர்க்கவில்லை. துவங்கின இடத்திலேயே பாத்திரங்கள் தேங்கி நிற்கிறார்கள். இது கதையை நகர்த்துவதில்லை. அதேநேரம், எனக்கு அக்காட்சியின் ஒளியமைப்பு "டாக்ஸி டிரைவர்" படத்தின் இறுதிக் காட்சியை நினைவுபடுத்தியது. இதை விட மேலான திருத்தத்தை எழுதியிருக்கலாம். மாறுபட்ட அனுபவங்களைப் பெற்று அவன் முதிர்வதாக அமைத்திருக்கலாம். இத்திருப்பத்தை இடைவேளையில் வைத்து அவனது தேடலுக்கு மற்றொரு பொருள் வருவதாகக் காட்டியிருக்கலாம். கிம் கி டக்கின் Spring, Summer...

கம்பீரின் முட்டாள்தனம்

  இரண்டாவது டெஸ்டை இலங்கை ஒருவழியாக டிரா செய்யப் போகிறார்கள். இலங்கை 191 ஓட்டங்கள் லீட் எடுத்து விட்டார்கள். இந்தியா சுலபத்தில் வென்றிருக்க வேண்டிய போட்டி இது. மழை பெய்யும் புயலடிக்கும் எனப் பயந்து இந்தியா இலங்கையை பாலோ ஆன் செய்யக் கேட்டது. அது ஒரு மகா முட்டாள்தனம். கடைசி வரை துளி கூட பெய்யவில்லை. ஒருபோதும் பருவ நிலையைக் கணக்கில் கொண்டு கிரிக்கெட் ஆடக் கூடாது. ஆட்டத்தின் தாளயலத்துக்கு ஏற்பவே முடிவெடுக்க வேண்டும். நேற்று இந்தியா 50-70 ஓவர்கள் ஆடியிருந்தால் பந்து வீச்சாளர்கள் ஓய்வெடுத்திருப்பார்கள், 450க்கு மேல் இலக்கை வைத்து இலங்கையைத் தடுத்தாட வைத்து வீழ்த்தியிருக்க முடியும். கம்பீரின் இந்த தொடர்ந்து பந்து வீசும் முடிவால் பந்து வீச்சாளர்கள் களைத்துப் போய் நேற்றும் இன்றும் சொதப்பினார்கள். இலங்கை மீது அழுத்தமே இல்லை. காலத்தை நீட்டித்தால் போதும் என அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இலக்கு ஏற்படுத்தும் நெருக்கடி இல்லை. கடைசி நாள் ஆடுதளத்தில் 70-100 ஓட்டங்கள் அதிகமாக எடுத்தால் கூட இலக்காக வைத்து இந்தியாவைக் கடைசியில் மட்டையாட வைப்பதன் அனுகூலம் அவர்களுக்கு இருக்கும் எனத் தெரியும். இதனாலே அ...

தினூஷாவை வளர்த்துவிட்ட இந்திய அணி

  இலங்கையின் தினூஷா நல்ல மட்டையாளர்தான். மறுக்கவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து மூன்று சதங்களும் கிட்டத்தட்ட 400 ஓட்டங்களும் ஒரே தொடரில் அடிக்கும் அளவுக்கு பிஸ்தா மட்டையாளர் அல்லர். அவருடைய பலவீனங்கள் அப்பட்டமானவை - அவருக்கு ஆப் சைடில் சரளமாக ஆட வராது. மிட் விக்கெட், ஸ்கொயர், ஸ்கொயர் லெக், பேக்வெர்ட் ஸ்கொயர் லெக்தான் எல்லா ஷாட்களும். அவர் vஇல் ஆடுவதும் இல்லை. அதாவது பந்தை 4-5வது குச்சிகளில் தொடர்ந்து வீசிக் கொண்டிருந்தால் அவர் அங்கிருந்து இழுத்து கால் பக்கம் அடிக்க முயல்வார். அதே நேரம் கேட்ச் கொடுக்கவும் வாய்ப்பதிகம். அதே போலத்தான் அவரால் சரியாக உடலை நோக்கி வரும் உயரப்பந்தை ஆட வராது. இதையெல்லாம் கணித்து அவருக்கு சரியான நீளத்திலும் திசையிலும் பந்து வீச இந்தியா முயன்றதே இரண்டாவது டெஸ்டின் கடைசி இன்னிங்ஸில்தான். அப்போதும் அவர்கள் அவரைக் கட்டுப்படுத்தும் அளவுக்குத் தொடர்ச்சியாக முயற்சி செய்யவில்லை. இதுவே தினூஷா ஆஸ்திரேலியாவோ தென்னாப்பிரிக்காவோ போகும்போது நிலைமை முழுக்க வேறாக இருக்கும். இந்திய அணியின் என்று பந்து வீச்சுப் பயிற்சியாளர் பஹுதுளேவும், டேட்டா அனலிஸ்ட் ஹரி பிரசாத் மோகனும் என்ன இ...

மனமற்றுப் போவதன் அச்சம்

  பாலன் எனும் சிறுவன் (Balan the Boy) படத்தின் முதற்பாதியை நேற்றுப் பார்த்து சற்று மனம் உடைந்து போனேன். உணர்வளவில் அப்படம் என்னை வெகுவாகத் தொந்தரவு பண்ணியது. அதைக் கசப்பென்றோ அவல உணர்வென்றோ சொல்ல முடியாது. நாம் கைவிடப்பட்டவர்களின் கதையைப் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம். ஆனால் இது துரத்தப்படுகிற அச்சத்தால் எங்குமே - உறவுகள், தனிமனித அடையாளம், நிலம், நினைவுகள் - நிலைக்க முடியாதவர்களின் கதை. இதைத் துன்பம் என்று வரையறுக்க முடியாது என்பதுதான் இதை இன்னும் பயங்கரமாக்குகிறது என நினைக்கிறேன். துன்பத்தில் ஒரு மானுட அம்சம் உண்டு. இப்படத்தில் முழுக்க முழுக்க அச்சம் மட்டுமே உள்ளது. அதுவும் பார்வையாளர்கள் உணரும் திகிலுணர்ச்சியின் அச்சம் அல்ல. இது பாத்திரங்கள் தம் அகத்தே உணரும் அச்சத்தையும், அதை மட்டுமே உணர்ந்து வாழ்தலையும் பேசுகிறது. இதில் வரும் குழந்தைக்கு ஆபத்தில் இருந்து தப்பக்க சின்னச்சின்ன தந்திரங்களை அம்மா சொல்லித் தருகிறாள். யாரிடமும் பேசாமல் இருப்பது. உண்மையை முழுமையாக மறைப்பது. தன்னை அடையாளமற்றவனாக ஆக்கிக் கொள்வது. தன் அம்மா தன்னை அழைத்துப் போக வரவில்லை என உணரும...

சின்னத்தனங்களின் காலம்

  நண்பரொருவர் இன்று விமர்சனக் கூட்டங்கள் குறைந்து வருவதைக் குறித்து வருந்தி எழுதியிருந்தார். சென்னையில் நான் வாழ்ந்த காலத்தில் கலந்துகொண்ட கூட்டங்கள் பெரும் உத்வேகத்தை அளித்தது நினைவுக்கு வந்தது. அதே நேரம், கூட்டங்கள், இதழ்கள் நடத்தப்படும் எண்ணிக்கையும் தொடர்ச்சியும் ஒருவித தற்காலிகப் போக்கு என நினைக்கிறேன். அதேநேரம் எனக்கு மற்றொரு சமூகப் பண்பாட்டுப் போக்கும் நினைவுக்கு வந்தது - சின்னத்தனங்களின் எழுச்சி. இதை நான் ஒழுக்கப் பண்பின் அடிப்படையில் சொல்லவில்லை. தரத்தின் அடிப்படையில் சொல்கிறேன்: இன்று ஒருவர் பண்பாட்டு வெளியில் அங்கீகரிக்கப்பட, அதிகாரத் தளத்தில் வெற்றி பெற திறமை குறைந்தவராக, அதிக சாதனைகள் படைக்காதவராக இருப்பதே வசதியானது. அரசியலில், சமூகத்தில், வேலையிடத்தில், இலக்கியத்தில் இப்போக்கு ஊடுருவி உள்ளது. அண்மையில் ஒரு மேடையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசும்போது திருட்டு டிக்கெட் விற்றவர்கள், கந்துவெட்டிக்காரர்கள், பொதுவெளியில் போதைப் பொருள் பயன்படுத்துவோரே அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்றார். அவரது பேச்சில் ஒரு வேதனை இருந்தது. எதையும் பேசவோ வாசித்துக் காட்டவோ தெரியாதவர்களே ...

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

வேலுக்கு அடுத்து சிலுவை அனுப்பு

தவெகவின் கிறிஸ்தவ சார்பு அரசியல் போலியான மிகைப்படுத்த்தப்பட்ட ஒன்று. அது ஒரு காட்சி அரசியல் மட்டுமே. சிறுபான்மை மக்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் தவெக அரசு கூட நிற்காது. ஏனென்றால் அது அவர்களுடைய கொள்கையே அல்ல. விவிலியத்தைக் கையில் சுமக்காத, ஜோசப், ஜேம்ஸ் என்றல்லாம் பெயர் வைத்துக் கொள்ளாதவர்களே உண்மையில் அம்மக்களுக்காக பாராளுமன்றத்தில் சண்டை போடுகிறார்கள். இந்த சிறுபான்மை பிம்பம் தமிழ்நாட்டு அரசியலில் மதத்தை ஒரு முக்கிய அலகாக்குவதற்காக பாஜகவால் மறைமுகமாகக் கொண்டு வரப்படுவது எனக் கூறப்படுவது உண்மைதான் - ஏனெனில் பல நேர்முகங்களில் இந்துத்துவர்களே இதை ஆதரிக்கிறார்கள். மதச்சின்னங்களை சட்டப்பேரவையில் பயன்படுத்துவது அவரவர் உரிமை என்கிறார்கள். இது ஒரு வெறுப்பரசியலை ஏற்படுத்தினால் அதைப் பின்னர் தம்மால் அறுவடை பண்ண முடியும் என நினைக்கிறார்கள். ஏனெனில் இதே கூட்டத்தினர்தாம் இன்னொரு பக்கம் கிறிஸ்தவ லாபி அரசியல் என்று விமர்சிக்கவும் செய்கிறார்கள். அடுத்து விஜய்யே செய்யும்போது நாங்கள் ஏன் இந்து மதத்தைத் தூக்கிப் பிடிக்கக் கூடாது எனக் கேட்பார்கள். முதலில் இப்படித்தான் முருகன், வேல் என்று எதையோ தூக்...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

ஜென் ஸீ கிளர்ச்சிகளின் ஆபத்துகள்

  இம்மாத உயிர்மையில் என் கட்டுரை!

"ரசிகன்" இன்றைய நிலையில்

  நான் "ரசிகன்" என்றொரு நாவல் எழுதினேன். அதில் நாயகன் ஒரு தீவிர கம்யூனிஸ்ட், தீவிர எழுத்தாளன், சிறுபத்திரிகையாளன். அவன் இறுதியில் ரஜினி ரசிகனாகி இலக்கியத்தில் இருந்தும் அரசியலில் இருந்தும் விலகி விடுவான். லும்பன் கலாச்சாரத்தில் கலப்பான். அப்போது அது ஒரு குறியீடாகத்தான் கண்டேன். ஆனால் இப்போது என் கண்முன்னே அதன் சாயல்களைப் பார்க்கிறேன். இதில் சில சிக்கல்கள் எழுகின்றன: ஏற்கனவே தவெகவின் எழுச்சிக்குப் பின் சில தீவிர படைப்பாளிகள் விஜய் ரசிகர்களாகி ஆதரிக்கிறார்கள். தனுஷ் கட்சி ஆரம்பித்து அடுத்த தேர்தலில் நிற்பது உறுதியாகிவிட்டது. இனி சில எழுத்தாளர்கள் தனுஷ் ஆதரவாளர்கள் ஆவார்கள். அவர்கள் இடையே மோதல் ஏற்படும். அதன் பிறகு வேறு சில நடிகர்களும் களத்துக்கு வருவார்கள். த்ரிஷா அரசியலுக்கு வந்தால் இதைவிட பெரிய ஆதரவுப் படை அவருக்கு எழுத்தாளர்கள் மத்தியில் இருந்து தோன்றுவார்கள். நடிகையர் வரவு த்ரிஷாவுடன் நிற்கும் என்றும் சொல்ல இயலாது. ஏனென்றால் பெண்களின் பங்களிப்பு அரசியலில் அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ் நவீன இலக்கியம் எதையெல்லாம் பார்க்க வேண்டி இருக்கிறது? எனக்குத் தெரிந்து வேறு மொழிகளி...

நாம் ஏன் இப்படி இருந்து கொண்டிருக்கிறோம் என்று யாருக்கும் தெரியாது

  அதிகாரச் சமநிலை இல்லாத சமூகத்தில் எந்த நல்ல விசயமும் நிகழ்கையில் ஏற்கனவே ஒரு ஏற்றத்தாழ்வை, சுரண்டலை உருவாக்கும். தமிழ்ப் பண்பாடும் நவீன இலக்கியமும் இதற்குச் சிறந்த உதாரணங்கள்: முப்பதாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் வெகுமக்கள் வாசிப்பு, ஊடகம், பதிப்பு ஆகியவற்றில் இருந்தும் அரசாங்க ஆதரவு, நிதியில் இருந்து விலகி இருந்தோம். அதாவது வாய்ப்புகள் இல்லை என்பதால். இது ஒரு பெரும் ஆற்றலை அளித்தது - புதிய போக்குகளை விலகி நின்று வாசிக்க, விவாதிக்க, உருவாக்க இயன்றது. அரசில் இருந்து சினிமா, வெகுமக்கள் கலை வடிவங்கள், கருத்துருவாக்கங்கள் அனைத்தையும் குறித்த மாற்றுப் பார்வைகள் தோன்றின. இந்த விலகல் மறைந்து வெகுமக்கள் போக்குகளுடன், நிறுவனங்களுடன், அரசுடன் நாம் கைகோர்க்கும் நிலை ஏற்பட்டது. தொழில்நுட்பம் இதற்கான வெளியை உருவாக்கியது. இதனால் புத்தகப் பதிப்பு வலுவானது. பத்து புத்தகங்கள் வந்த இடத்தில் ஐநூறு புத்தகங்கள் வந்தன. ஆனால் வெகுமக்கள் பார்வையுடன் ஒத்திசைய வேண்டிய கட்டாயம் நவீன இலக்கியவாதிகளை பெரும் அமைதி கொள்ள வைத்தது. எதிர்மை இல்லாததால் புதுச் சிந்தனைகள், போக்குகள், எதிர்த்தரப்புகள் மறைந்தன. ஒன்றிப் ...

ஆடும், மாடு மேய்க்கும் அரசு வேலை

  இன்று வேளாண் பொருளாதாரக் கட்டமைப்பு இந்தியா முழுக்கவே நிலைகுலைந்து வருகிறது. ஆனாலும் தானிய உற்பத்தி குறையவில்லை. காய்கறி விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதில் கவனிக்க வேண்டியது அரசு காய்கறிகளுக்கான குளிர் வைப்பறைகளை அமைத்துத் தருவதையோ அடிப்படையான பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதையோ உத்தரவாதம் செய்யவில்லை. நீர் வளமும் எல்லா மாநிலங்களிலும் குறைந்து கொண்டே போகிறது. அதற்கும் அரசு சுற்றுச்சூழலைப் பிரதானப்படுத்தாததே காரணம். ஒரே நல்ல விசயம் ஒரு அடிப்படை விலையை தானியங்களுக்கு நிர்ணயித்து அரசு கொள்முதல் பண்ணுவதே. இதுவும் கூட விவசாயத்தைக் காப்ப்பாற்ற அல்ல, மக்கள் பசியில் வாடி பஞ்சம் வரலாகாதே என்பதற்காகத்தான். இந்தியா இன்னும் முழுமையான ஒரு நகர்மய, தொழிலுற்பத்தி சார் நாடாக மாறவில்லை. அதற்கே இந்த கதி. அடுத்த சில பத்தாண்டுகளில் கார்ப்பரேட் விவசாயம் இங்கு வலுக்கும் என்பது என் கணிப்பு. அதாவது இதை பாஜகவால் செய்துதர இயலவில்லை எனில் கார்ப்பரேட்டுகள் அடுத்து வரும் அரசைக் கொண்டு செய்ய வைக்கும். ஏனென்றால் வேளாண் மக்கள் தொடர்ந்து நகரங்களுக்குப் பயணித்து வேலை தேடுவதும் நிலங்கள் ரியல் எஸ்டேட...

தொந்தரவில்லாத ரைட்டர்

  யாருக்கும் தொந்தரவு கொடுக்காத விதம் ரைட்டர்கள் இருப்பது நல்லது என ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். 'தொந்தரவு' என்றால் என்னவென்று நான் கேட்டபோது அவர் கருத்து சொல்வது, மறுப்பது, எதிர்ப்பது, கேள்வி கேட்பது, மோதல் அணுகுமுறையைக் கொள்வது, கருத்தாதிக்கம் செய்வது என்றார். எனக்கு அவர் சொல்வதில் சற்று நியாயம் இருப்பதாகத் தோன்றியது - எல்லாருக்கும் அடக்கமாக ஒருவர் இருக்கும்போது அவரால் வாசகர்களுக்கோ சூழலுக்கோ பயன் குறைவுதான். ஆனால் அவர் ஒரு இணக்கமான சூழலை உருவாக்குகிறார். நமது கூட்டங்களில் இன்று அத்தகையோரின் தேவையே அதிகம். இதைத் தவறென்று சொல்ல முடியாது. ஏனென்றால் இன்று இலக்கிய கூட்டங்கள் ஒருவித சமூகமாக்கல் தளங்களாகி விட்டன. லயன்ஸ் கிளப், நண்பர்கள் சந்திப்பு, சட்டசபை எல்லாமே இப்படி ஆகிவிட்டது. இலக்கியக் கூட்டங்களும் மேற்தட்டு, மேல்மத்திய சமூகத்தினர் வரும் இடமாகையால் அங்கும் அவரவர் வந்து தத்தமது அனுபவங்களைச் சொல்கிறார்கள். அதைத் தாண்டி பிற படைப்புகளை விமர்சிப்பது, கருத்துக்களைச் சொல்வது, மதிப்பீடுகளை வெளிப்படுத்துவது, விவாதிப்பது அனுமதிக்கப்படுவது இல்லை. இதை நான் கற்பனையாகச் சொல்வதில்லை - நீங...

வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா: அதி-புத்திசாலித்தன யுக்தியும் விளைவும்

  எதிரியை யுக்திபூர்வமாகக் கையாள்வது என்று சொல்வார்கள். இதுவரைக்கும் பாஜகவை பல கிறிஸ்துவ சிறுபான்மை நிறுவனங்கள் அவ்வாறுதான் நடத்தி வந்தார்கள் என்பது என் அவதானிப்பு. தொடர்ந்து கிறிஸ்துவ சிறுபான்மை நிறுவனங்களில் படித்தும் பணியாற்றியும் வந்தவன் எனும் நிலையில் நான் இதை அருகில் இருந்து கவனித்திருக்கிறேன் - இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்தபோது என் வகுப்பில் அமெரிக்காவில் பலியானவர்களுக்காக பிரார்த்தனை பண்ணினார்கள். எதுக்குடா அவங்களுக்காக நீங்க பண்றீங்க என யோசித்தபோதே அப்போதிருந்த அரசியல் விளங்கியது: அப்போது உலகம் முழுக்க கிறிஸ்துவர்களில் ஒரு பகுதியினர் யூத ஆதரவு, இஸ்லாமிய எதிர்ப்பு எனும் வெளியுறவு யுக்தியை மதசார்பாக வகுத்துக் கொண்டனர். பாஜக ஆட்சிக்கு வந்து இரண்டாவது முறை ஒன்றியத்தில் தொடர்ந்து வென்றபோது பல கிறிஸ்துவ நிறுவனங்கள் வெளிப்படையாகவே பாஜக ஆதரவு என நிலைப்பாடு எடுத்தன. இந்துத்துவாவை எதிர்ப்பது அரசை எதிர்ப்பதாகிவிடும், சிறுபான்மை அரசியலைக் கூடப் பேசக் கூடாது என்றே அவர்கள் மறைமுக தணிக்கையை கல்லூரி, பள்ளிகளில் நடைமுறைப்படுத்தினர். இது பயத்தினால் அல்ல, பாஜகவின் கூட்டு சக்தியாகத் தாம் மாற...