![]()
"பாலன்: எ பாய்" படத்தின் திருப்பத்தைப் பார்த்தேன். சிறுவன் தன் அம்மா தனக்காக அந்தப் பகுதியிலேயே தொடர்ந்து இருப்பதாக நம்புவது, அவன் அங்கு சென்று அமர்ந்ததும் அவர் பின்னிருந்து வருவது அவனது பிரமை என்பதே என் புரிதல். அவன் தன் மனத்தின் லூப்புக்குள் முழுமையாக மாட்டிக் கொள்கிறான், அவன் இனிமேல் தன் அம்மாவின் பிரமை சொல்லும் கதைகளை ஒட்டித் தன் வாழ்வை அமைக்கப் போகிறான் எனச் சொல்லும் முடிவு. இதை அப்பட்டமாகக் காட்டக் கூடாது என்று அம்மாவின் தோற்றத்தை சற்று வயதாகி விட்டதாகக் காட்டியிருக்கிறார்கள்.
இது அதிர்ச்சிகரம்தான் என்றாலும் அர்த்தபூர்வம் அல்ல. அதனாலே ஈர்க்கவில்லை. துவங்கின இடத்திலேயே பாத்திரங்கள் தேங்கி நிற்கிறார்கள். இது கதையை நகர்த்துவதில்லை.
அதேநேரம், எனக்கு அக்காட்சியின் ஒளியமைப்பு "டாக்ஸி டிரைவர்" படத்தின் இறுதிக் காட்சியை நினைவுபடுத்தியது. இதை விட மேலான திருத்தத்தை எழுதியிருக்கலாம். மாறுபட்ட அனுபவங்களைப் பெற்று அவன் முதிர்வதாக அமைத்திருக்கலாம். இத்திருப்பத்தை இடைவேளையில் வைத்து அவனது தேடலுக்கு மற்றொரு பொருள் வருவதாகக் காட்டியிருக்கலாம். கிம் கி டக்கின் Spring, Summer, Fall, Winter... and Spring போல எழுதியிருக்கலாம்.
கருத்துகள்