காலையில் ஒரு பஞ்சாயத்து . எங்க குடியிருப்பில் ஒரு நாய் . தெரு நாய் தான் . உள்ளேயே படுத்திருக்கும் . கொரியர் பையன் , கேஸ் சிலிண்டர் சப்ளையர் , வேலைக்காரர்கள் என யாரைப் பார்த்தாலும் சமீபமாய் துரத்த ஆரம்பித்துள்ளது . அந்த நாய்க்கு என் மனைவி சாப்பாடு போடுவதால் காலையிலேயே என்னிடம் தகராறுக்கு மொத்த குடியிருப்பு ஆட்களும் வந்து விட்டார்கள் . எனக்கு அப்போது பேஸ்புக்கில் விவாதித்த ( சண்டை போட்ட ) அனுபவம் வெகுவாக கை கொடுத்தது .