முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பயணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கூண்டுக்கிளியின் இருநாள் பயணம்

  கடந்த சனியும் ஞாயிறும் சென்னையில் இளம் ஆங்கிலக் கவிஞர் கார்த்திக் ராஜாவின் Almost Lucid எனும் இரண்டாவது தொகுப்பை வெளியிடுவதற்காக இருந்தேன். 15 வயது மாணவர்தான் எழுதினார் என நம்ப முடியாதபடிக்கு சிக்கலான முதிர்ச்சியான கவிதைகள். மேற்கத்திய கற்பனாவாதக் கவிதைகள் (குறிப்பாக ஷெல்லி) மற்றும் இந்திய தத்துவத்தின் சாயல்களை அவற்றில் கண்டேன். ஆங்கிலத்தில் நேரடியாக எழுதுவோரால் இத்தகைய ஒரு உலகத்தன்மையை இந்தியத்தன்மையுடன் என யோசித்துக் கொண்டிருந்தேன். மாநில மொழிகளிலும் அது சாத்தியமே - தேவதேவன் ஒரு உதாரணம். ஒடிய மொழியில் எழுதப்படும் சில நவீன கவிதைகளையும் சொல்லலாம். ஆனாலும் நமது வாசகப் பரப்பு காரணமாக கவிதையின் எல்லைகள் சட்டென சுருங்கிவிடுகின்றன. நான் அவரது இரு தொகுப்புகளையும் ஒப்பிட்டு அலசிப் பேசிய உரையை யுடியூபில் விரைவில் வெளியிட முயல்கிறேன். கார்த்திக் ராஜா என்னுடைய நாவல் வகுப்பு மாணவரான தமிழ்ச்செல்வியின் மகன். அவர் என்னை அருமையாக கவனித்துக் கொண்டார். நிகழ்ச்சியை நேர்த்தியாக ஒருங்கிணைத்ததில் அவரது பங்கே மிக அதிகம். Learners Circle என ஒரு மாணவர் பயிற்சி நிறுவனம் தெற்காசியாவைச் சேர்ந்த இளம் எழுத்...