Skip to main content

Posts

Showing posts from October, 2014

அபிலாஷ் சந்திரனின் “கால்கள்” - Finding one's feet and landing on them! - ஷஹிதா

Lagya balai - லக்யா பலாய் - உன் வலி வேதனைகளை எனக்குத் தந்துவிடு ! என் தங்கையின் ( கஷ்மீரி ) மாமியார் அவளைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் உரையாடத் துவங்குமுன் சொல்லும் உளப்பூர்வமான முகமன் இது . கேட்கும் போதெல்லாம் நடைமுறைப்படுத்த இயலாதே என்ற ஆதங்கம் கொள்ளச் செய்யும் , இதை விடவும் அதி உன்னதமான வாழ்த்து உலகில் இருக்குமா என்று உருக வைக்கும் சொற்கள் .   வலி எத்தனை உக்கிரமான உணர்வாக , வாழ்வை , அதன் தரத்தை நிர்ணயிக்கும் , மாற்றிப் போடும் விசையாக இருக்கிறது என்பதைத் தன் ஆங்கில இலக்கியப் புலமை , அங்கதச்சரளம் , கவிதைமொழி எல்லாமும் இழைந்த நடையில் அபிலாஷ்சந்திரன் பேசும் நாவல் கால்கள் . தொடர்ந்து வலியும் வாதையுமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி மதுக்ஷரா . அவள் குடும்பம் , கல்வி , நட்பு , சமூகத்தில் அவளுடைய நிலை இவற்றோடு வலியை , உடற்குறைப்பாட்டை , நோயை மையமாகக் கொண்ட நாவலானாலும் பாத்திரங்களின் அசல்தன்மையும் , வெளிப்பாட்டின் கலைத்தன்மையும் , 552 பக்கங்களை களைப்பின்றி பின்தொடர வற்புறுத்துக...

இந்தியாவும் பாகிஸ்தானும்: இருவேறு அணுகுமுறைகள்

இம்முறை பாகிஸ்தான் அணியில் அஜ்மல் இல்லை . நான்கு இளம் வீச்சாளர்களுடன் இறங்கி ஆஸ்திரேலியாவை முதல் டெஸ்டில் 221 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது . என்னை மிகவும் கவர்ந்த விசயங்கள் இரண்டு .

உயிரெழுத்து பேட்டி - பகுதி 3

யுவ   புரஸ்கார்   விருதை   ஒட்டி   உயிர்   எழுத்து   போனதற்குமுந்தின   இதழை   எனக்கு   சிறப்பிதழாக   கொண்டு   வந்தார்கள்.அதில்   என்   நீண்ட   பேட்டி   வெளியானது.   அப்பேட்டியின்   ஒருபகுதி   இது: கேள்வி: இதுவரை தங்களுடைய ஐந்து நூல்கள் வந்துள்ளன. அதில் 'கால்கள்' நாவலை விடவும் சிறப்பான படைப்பு உள்ளது எனக் கருதுகின்றீர்களா அல்லது இதுவரை வெளிவந்துள்ள உங்களுடைய படைப்புகளில் ஆகச் சிறந்தது 'கால்கள்' நாவல்தானா? ஆர்.அபிலாஷ்: நான் அப்படி தரம் பிரிப்பதை விரும்பவில்லை. என்னுடைய எல்லா படைப்புகளும் - கட்டுரை, மொழியாக்கம் உள்ளிட்டு - சமூகத்துடனான உரையாடலின் ஒரு பகுதி தான். வாசகனின் ஒரு அடிப்படைக் கவலையை அல்லது குழப்பத்தை நாம் தொட்டு விடும் போது அப்படைப்பு வெகுவாக கவனிக்கப்படும், பாராட்டப்படும். அப்போது கூட அது சிறந்த படைப்பாவது இல்லை. தமிழில் இப்படி ஒரு மேனியா உள்ளது. நான் எழுதுவதில் ஒரு படைப்பு உலகத்தரமானதாய் இருக்கும் என நம்புவது, அதை ஒரு சீனியர் எழுத்தாளர் கூற வேண்டும் என எதிர்பார்ப்பது, பின்னர் அதை...

ஜெயமோகன் ஒரு இடதுசாரியா?

என்னுடைய உயிரெழுத்து பேட்டியில் “ இன்று கடுமையான இடதுசாரி எழுத்தாளராய் தோன்றும் ஜெயமோகனிடம் முரணியக்க சிந்தனை சார்ந்து ஒரு இடதுசாரித்தனம் உள்ளது .” என சொல்லி இருந்தேன் . நண்பர் வி . மு அது எப்படி எனக் கேட்டார் .

அமேசான் காட்டில் தொலைந்த என் பார்சல்

அமேசானில் நான் ஆர்டர் பண்ணின பொருள் ஒன்று மூன்று நாட்களாய் தாமதாகிக் கொண்டிருந்தது . கஸ்டமர் கேர் ஆட்கள் இன்னிக்கு வந்திரும் , இப்போ வந்திரும் என விளையாட்டு பண்ணிக் கொண்டிருந்தார்கள் . அவர்களின் கொரியர் சேமிப்புக் கிடங்கின் முகவரியையோ தொடர்பு எண்ணையோ தரவில்லை. ஆனால் ரொம்ப ஒழுங்காக சமர்த்தாக என்னிடம் தினமும் நான்கு முறையாவது அவர்களாகவே போன் பண்ணி மன்னிப்பு கேட்பதும், இதோ ரெண்டு மணிநேரத்தில் வந்து விடும் என பொய் சொல்வதுமாக தொடர்ந்தது.

உயிரெழுத்துப் பேட்டி பகுதி 2

யுவ புரஸ்கார் விருதை ஒட்டி உயிர் எழுத்து போனதற்கு முந்தின இதழை எனக்கு சிறப்பிதழாக கொண்டு வந்தார்கள் . அதில் என் நீண்ட பேட்டி வெளியானது . அப்பேட்டியின் ஒரு பகுதி இது : கேள்வி : உங்கள் எழுத்துகளின் வழி மனுஷ்ய புத்திரனுடைய இலக்கிய செயல்பாடுகள் தங்களை வளர்ச்சிக்கு துணையாக இருந்தது என அறிய முடிகின்றது . அவரைப் பற்றிச் சொல்லுங்கள் . ஆர் . அபிலாஷ் : உண்மையை சொல்வதானால் நான் கட்டுரை , நாவல் , கதைகள் எழுதவெல்லாம் உத்தேசிக்கவில்லை . கவிதை மீது மிகுந்த மோகம் கொண்டவன் நான் . என் கவிதைகளுடன் தான் மனுஷ்யபுத்திரனை சந்தித்தேன் . அவர் அப்போது உயிரோசை ஆரம்பித்திருந்தார் . முதல் இதழில் இருந்தே என்னை கட்டுரைகள் எழுத வைத்தார் . அப்போதெல்லாம் வாரத்துக்கு ஒரு கட்டுரை எழுதுவது பெரிய சவாலாக இருந்தது . ஆனால் போக போக நிறைய எழுதுவதும் வேகமாய் எழுதுவதும் பழகியது . ஒரு மன ஒழுங்கு ஏற்பட்டது . என்னை தொடர்ந்து எழுத தூண்டியவர் அவர் தான் . எனக்கே அறியாத என்னுடைய ஆளுமையின் இன்னொரு பக்கத்தை திறந்து விட்டார் . அவர் என் வாழ்க...