முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

யுடியூப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீட்சே ஆன்லைன் வகுப்பு

  நீட்சே ஆன்லைன் வகுப்பு "இவ்வாறு சொன்னான் ஜாரதுஷ்டிரன்" நூல் நீட்சேயின் புத்தகங்களில் மிகவும் கவித்துவமானது. அதனாலே அது மிகவும் பிரசித்தமானது. தமிழிலும் மொழியாக்கப்பட்டு வந்தபோது பரவலாகப் படிக்கப்பட்டது. ஆனால் ஒரு சிக்கல் எழுந்தது. மக்கள் அதிலுள்ள உருவகங்களைப் புரிந்து கொள்ள இயலாமல் ஒரு கதையைப் போலப் படித்துக் குழப்பிக் கொண்டனர். அதன் எதிர்-கருத்துக்கள், எகத்தாளமான அறிக்கைகள், தலைகீழாக்கம் மக்களுக்குப் பிடித்திருந்தன. மத-எதிர்ப்பாளர்கள், இறை மறுப்பாளர்களுக்கும் அவை பிடித்திருந்தன. ஆனால் அந்நூலின் ஆழமான பொருள் கணிசமானவர்களைப் போய்ச் சேரவில்லை. நீட்சேயின் பிற நூல்களைப் படித்தும், அவரைக் குறித்து ஆய்வாளர்கள் சொல்வதைத் தெரிந்து கொண்டும் அவரது உருவகங்களைப் பார்க்கையில் முற்றிலும் வேறொரு பொருள் புலப்படுகிறது. நீட்சேயை ஷோப்பன்ஹெர், ஹசர்ள், ஹைடெக்கரின் தத்துவத் தளத்தில் வைத்துப் படிப்பதும், இருத்தலியல் கோணத்தில் விரித்துப் புரிந்து கொள்வதும் நமக்கு பெரிய மனத்திறப்பை அளிக்கக் கூடியவை. இன்னொரு பக்கம், இந்திய தத்துவங்களில் ஆர்வமுள்ளோரும் நாம் மனித பிரக்ஞை, ஆன்மீகம், அக-விழைவு (will) கு...

என்னுடைய watch-along மற்றும் கிரிக்கெட் வர்ணனை அனுபவம்

என்னால் தொடர்ச்சியாக ஒரு கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டே வர்ணிக்கவும் நுட்பங்களை விவாதிக்கவும் இயலுமா என ஒரு சந்தேகம் இருந்தது. டிவி வர்ணனையில் அவர்கள் விடாமல அரைமணிநேரம் பேசுவதைப் பார்க்கவே வியப்பாக இருக்கும். ஆகையால் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு முயலலாம் எனும் நோக்கத்திலே நேற்று watch-along செய்தேன். இரண்டு விசயங்கள் ஆச்சரியப்படுத்தின - 1) 20 ஓவர்களும் இடைவிடாமல் வர்ணிப்பது கூட கடினம் அல்ல. அதுவும் கூட ஆளிருந்தால் அது ஒரு விசயமே அல்ல. 2) சும்மா உட்கார்ந்து ஆட்டத்தைப் பார்ப்பதைவிட இது ரொம்ப இன்பமான அனுபவமாக இருந்தது. செயலூக்கத்துடன் கிரிக்கெட் பார்க்க முடிந்தது. ஆட்டம் அலுக்கும்போது கவனம் சிதறும். பார்க்கப் பிடிக்காது. ஆட்டத்தை அலசுவதால் அலுப்படையும் இடங்களையும் உற்சாகமாகக் கடக்க முடிந்தது. இது ஒன்றும் கடுமையான வேலை அல்ல. டிவி வர்ணனையாளர்கள் பெரிய திரை முன்பு அமர்ந்து அவர்களுக்கு தொடர்ச்சியாக தரவுகளை அளிக்கும் அணியினரின் உதவியுடன், சக வர்ணனையாளருக்கு ஈடுகொடுத்துப் பேசுவார்கள். அது மட்டுமே வித்தியாசம். இணையம் இம்மாதிரி சின்னச்சின்ன பரிசோதனைகளைச் செய்து பார்க்க அனுமதிக்கிறத...