முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னுடைய watch-along மற்றும் கிரிக்கெட் வர்ணனை அனுபவம்

என்னால் தொடர்ச்சியாக ஒரு கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டே வர்ணிக்கவும் நுட்பங்களை விவாதிக்கவும் இயலுமா என ஒரு சந்தேகம் இருந்தது. டிவி வர்ணனையில் அவர்கள் விடாமல அரைமணிநேரம் பேசுவதைப் பார்க்கவே வியப்பாக இருக்கும். ஆகையால் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு முயலலாம் எனும் நோக்கத்திலே நேற்று watch-along செய்தேன். இரண்டு விசயங்கள் ஆச்சரியப்படுத்தின - 1) 20 ஓவர்களும் இடைவிடாமல் வர்ணிப்பது கூட கடினம் அல்ல. அதுவும் கூட ஆளிருந்தால் அது ஒரு விசயமே அல்ல.

2) சும்மா உட்கார்ந்து ஆட்டத்தைப் பார்ப்பதைவிட இது ரொம்ப இன்பமான அனுபவமாக இருந்தது. செயலூக்கத்துடன் கிரிக்கெட் பார்க்க முடிந்தது. ஆட்டம் அலுக்கும்போது கவனம் சிதறும். பார்க்கப் பிடிக்காது. ஆட்டத்தை அலசுவதால் அலுப்படையும் இடங்களையும் உற்சாகமாகக் கடக்க முடிந்தது.
இது ஒன்றும் கடுமையான வேலை அல்ல. டிவி வர்ணனையாளர்கள் பெரிய திரை முன்பு அமர்ந்து அவர்களுக்கு தொடர்ச்சியாக தரவுகளை அளிக்கும் அணியினரின் உதவியுடன், சக வர்ணனையாளருக்கு ஈடுகொடுத்துப் பேசுவார்கள். அது மட்டுமே வித்தியாசம்.
இணையம் இம்மாதிரி சின்னச்சின்ன பரிசோதனைகளைச் செய்து பார்க்க அனுமதிக்கிறது. அதேநேரம், இதை தினம் தினம் செய்வது பாத்திரம் தேய்ப்பது, பில் போடுவதைப் போல கடுப்பாகத்தான் இருக்கும். அடுத்து இறுதிப் போட்டிக்கு ஒரு watch-along பண்ணுவேனா எனத் தெரியவில்லை. அன்று மாலையில் பணியில்லாவிட்டால் முயல்வேன்.
கூட ஆட்டத்தை வர்ணிப்பதற்கு யாராவது ஆர்வம் இருந்தால் streamyard, riverside போன்ற செயலிகளைப் பயன்படுத்தி இரண்டு, மூன்று பேர்களாகச் சேர்ந்து வர்ணனை செய்து பார்க்கலாம். விருப்பமுள்ளோர் என்னைத் தொடர்பு கொள்ளவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...