முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெயமோகன் ஒரு இடதுசாரியா?



என்னுடைய உயிரெழுத்து பேட்டியில்இன்று கடுமையான இடதுசாரி எழுத்தாளராய் தோன்றும் ஜெயமோகனிடம் முரணியக்க சிந்தனை சார்ந்து ஒரு இடதுசாரித்தனம் உள்ளது.”என சொல்லி இருந்தேன். நண்பர் வி.மு அது எப்படி எனக் கேட்டார்.

இது என் பதில்: “ஹெகலின் டையலிக்டிக்ஸின் தாக்கம் அவரிடம் உள்ளது. அதை சொன்னேன். உதாரணமாய் தீமையும் நன்மையும் சேர்ந்து முயங்கும் போது தான் வாழ்க்கை உருவாகிறது என்றால் அது முரணியக்க சிந்தனை. அதை ஜெயமோகனிடம் பார்க்கலாம். ஒருமுறை அவர் அடிமைத்தனம் உள்ள சமூகம் தான் இலக்கியம், கலை ஆகியவற்றை மேலெடுக்கும் என்றார். அதாவது கலை, இலக்கியம் அடிமைத்தனத்துக்கு எதிரானது. ஆனால் அடிமைகளும், சுரண்டலும் உள்ள சமூகத்தில் தான் ஒரு தட்டினருக்கு கலை இலக்கியத்தில் ஈடுபடும் வசதியை நேரத்தை அதற்கான சூழலும் தோன்றுகிறது. அதாவது ஒருவர் வசதியாய் உட்கார்ந்து பண்பாட்டுக்காய யோசிக்க இன்னொருவர் இருமடங்கு உடல் உழைப்பு செலுத்த வேண்டும். இவர் சோம்பலாய் இருந்து அவர் எப்படி உடலுழைப்பின் சுரண்டிலில் இருந்து தப்பிக்கலாம் என யோசித்து ஒரு கோட்பாட்டை உருவாக்குவார். அடிமைத்தனம் ஒரு அநியாயம். ஆனால் ஒரு அநியாயம் இருக்கும் போது தான் இன்னொரு பக்கம் நியாயம் பிழைக்க முடியும். அது போல் சாத்தான் இல்லாத உலகில் கடவுளுக்கு இடமில்லை. ஏமாற்றம் இல்லாத போது ஆசை தோன்றாது. கடும் கட்டுப்பாடுகள் உருவாகும் போது அங்கு கலக சிந்தனை தோன்றும். உடம்பில் வியாதி பரப்பும் கிருமிகள் இருந்தால் தான் எதிர்ப்பு சக்தி தோன்றும். கிருமிகளே இல்லாத சூழலில் மனிதன் வலுவற்று போவான். அதாவது கிருமிகளும் வேண்டும், தடுப்பு சக்தியும் வேண்டும். இரண்டுக்கும் ஒரு சமநிலை வேண்டும். அப்போது தான் வாழ முடியும். ஒன்று கூடினாலோ குறைந்தாலோ உயிர் இருக்காது. இப்படி முரண்கள் தான் வாழ்க்கையின் இயக்கத்துக்கு காரணமாகின்றன என்பது  முரணியக்க சிந்தனை. இடதுசாரிகள் கார்ப்பரேட்-பாட்டாளி போராட்டமாக வாழ்க்கையை பார்ப்பது போலத் தான் இது. ஷிஷெக் இதே போல் மிகப்பெரிய அன்பு வெறுப்பை சரிசமமாய் கொண்டது என்பார். அதாவது ஒரு பெண்ணை ஆவேசமாய் முத்தமிடும் போது அடிமனதில் அவளது கழுத்தை நெரிக்கும் உக்கிரமும் தோன்றுகிறது. கொலை விருப்பம் இல்லாமல் காமம் இல்லை. முயக்கம் இல்லை. 
அடிப்படையில் இவர்கள் எல்லாம் ஒரே மாதிரி யோசிக்கிறவர்கள். அதாவது நிலைப்பாடுகளில் மாறுபட்டாலும் ஜெயமோகன் மற்றும் இடதுசாரிகளின் ஆயுதமும், அடவு முறையும் ஒன்று தான். ஒரே தர்க்கத்தை தான் இருவேறு விதமாய் பயன்படுத்துகிறார்கள். அதாவது ஹெகலின் தாக்கத்தில் தான் மார்க்ஸியம் உருவானது. அதன் குட்டிக் கிளையாக ஜெயமோகனிஸமும் தோன்றியது”

கருத்துகள்

Chitra இவ்வாறு கூறியுள்ளார்…
face book சுத்த வேஸ்ட்ன்னு சொன்னவரு, இப்ப நடக்கப்போற அவரோட விழாவுக்காக,
அதுல புது கணக்கு ஆரம்பிச்சுருக்காரு. எல்லாம் மகாபாரதத்தின் மகிமை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...