முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆங்கில வகுப்புகளின் துவக்க நாள்

  பேச்சு ஆங்கில (spoken English) வகுப்புகள் மானவர்களில் பெரும்பாலானவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப நவம்பர் 16க்கு மேல் ஆரம்பிக்கின்றன. என்று முதல் வகுப்பு என்பதை விரைவில் அறிவிக்கிறேன். ஆகையால் வகுப்பில் இணைய விரும்புவோர் இன்னும் கட்டணம் கட்டாவிடில் உங்களுக்கு அதற்கான அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. நீங்கள் அடுத்த இரு வாரங்களுக்குள் இணையலாம்.

இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படையான ஒரு பிரச்சினை

  இந்தியர்களுக்கு ஒரு முக்கியமான ஒரு பிரச்சினை உண்டு - இந்தியப் பண்பாட்டிலும் சிந்தனையிலும் எங்கும் அறவுணர்வு இல்லை, ஏனெனில் நமக்குச் சமத்துவத்தில் நம்பிக்கையே இல்லை. உலகில் இப்படியான ஒரே நாடு நாம்தான் என நினைக்கிறேன். ஐரோப்பியர்களிடம் இயல்பாகவே அறவுணர்வும் சில லட்சியங்களில் நம்பிக்கையும் உண்டு. உ.தா., நமது இதிகாசங்களில் எங்காவது அறவுணர்வு, மானுடவாத லட்சியம் உண்டா? துளி கூட இல்லை. உண்மைக்காக, நியாயத்துக்காகப் போராடும் ஒரு பாத்திரத்தைக் கூட நீங்கள் நம் தொல்கதைகளில் பார்க்க முடியாது. தர்மத்துக்காகப் போர் செய்வதாகச் சொல்வார்கள். ஆனால் அதில் மற்றமைக்காக குரல் கொடுப்பதோ முற்றுறுதியான ஒரு நியாயத்துக்காக தியாகம் செய்வதோ போராடுவதோ இருக்காது. ஒரு பிறப்புக்கான நோக்கத்துக்காக தீமையை எதிர்ப்பது என இருக்கும். அத்தீமையும் கடவுளையும் பிராமணர்களையும் எதிர்ப்பதாக மட்டுமே இருக்கும். அல்லது ஒரு இனக்குழுவின் பிரச்சினைக்காகக் கொல்லப்பட்டவரின் நியாயமாக, ஒரு கூட்டு நியாயமாக ஒரு கோபம் வெளிப்படும். எங்குமே உலகப்பொதுவான நியாயம், சரி-தவறு எனும் கருதுகோள் இருக்காது. இதனால்தான் நமது பண்பாட்டில் ஊறிப் போயிருப்ப...