இரண்டாவது டெஸ்டை இலங்கை ஒருவழியாக டிரா செய்யப் போகிறார்கள். இலங்கை 191 ஓட்டங்கள் லீட் எடுத்து விட்டார்கள். இந்தியா சுலபத்தில் வென்றிருக்க வேண்டிய போட்டி இது. மழை பெய்யும் புயலடிக்கும் எனப் பயந்து இந்தியா இலங்கையை பாலோ ஆன் செய்யக் கேட்டது. அது ஒரு மகா முட்டாள்தனம். கடைசி வரை துளி கூட பெய்யவில்லை.
ஒருபோதும் பருவ நிலையைக் கணக்கில் கொண்டு கிரிக்கெட் ஆடக் கூடாது. ஆட்டத்தின் தாளயலத்துக்கு ஏற்பவே முடிவெடுக்க வேண்டும். நேற்று இந்தியா 50-70 ஓவர்கள் ஆடியிருந்தால் பந்து வீச்சாளர்கள் ஓய்வெடுத்திருப்பார்கள், 450க்கு மேல் இலக்கை வைத்து இலங்கையைத் தடுத்தாட வைத்து வீழ்த்தியிருக்க முடியும். கம்பீரின் இந்த தொடர்ந்து பந்து வீசும் முடிவால் பந்து வீச்சாளர்கள் களைத்துப் போய் நேற்றும் இன்றும் சொதப்பினார்கள். இலங்கை மீது அழுத்தமே இல்லை. காலத்தை நீட்டித்தால் போதும் என அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இலக்கு ஏற்படுத்தும் நெருக்கடி இல்லை. கடைசி நாள் ஆடுதளத்தில் 70-100 ஓட்டங்கள் அதிகமாக எடுத்தால் கூட இலக்காக வைத்து இந்தியாவைக் கடைசியில் மட்டையாட வைப்பதன் அனுகூலம் அவர்களுக்கு இருக்கும் எனத் தெரியும். இதனாலே அவர்கள் நேர்மறையாக ஆடினார்கள். 450 இலக்கைக் கொடுத்திருந்தால் இப்படியான நம்பிக்கைகள் இல்லாமல் ஆடுகிற அழுத்தம் ஏற்பட்டிருக்கும். கம்பீரைப் போன்ற மரமண்டையை யார் டெஸ்ட் பயிற்சியாளராக்கினார்களோ அவர்கள் அவரை விட பெரிய மரமண்டையராக இருப்பார்கள்.
கில்லின் தலைமையில் இது ஒரு கரும்புள்ளி.
கருத்துகள்