முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?


 

காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்:

(...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships aspire to establish.
சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் வணிக வெற்றியே பிரதான இலக்கு என்பதால் அரசால் இந்த ஊடகங்களைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் சுலபமாகிறது என்கிறார் - ஒரு நாட்டின் முதலீட்டாளர்கள் தம் முதலீட்டைப் பாதுகாக்க அரசைச் சார்ந்திருப்பதால் அவர்கள் அரசின் பிரச்சாரத்தை முன்னெடுக்கவே முயல்வரே ஒழிய அரசை விமர்சிக்க அல்ல. ஆக சினிமா எல்லாவகையில் ஒரு சர்வாதிகாரக் கருவியாகும் வாய்ப்பே அதிகமாக உள்ளது. இதை நாம் ஒரு தாராளவாத முற்போக்கு கட்சி ஆட்சியில் உள்ளபோது அல்ல பாசிஸ்டுகள் ஆட்சியில் உள்ளபோதே துல்லியமாக உணர்கிறோம். உ.தா., விஜய்யை கிண்டல் செய்கிற ஏகப்பட்ட மீம் காணொளிகள் இன்று உருவாக்கப்பட்டு ரசிக்கப்படுகின்றன. ஒரு இலக்கியப் படைப்பில் இது இன்னும் கூர்மையாக வெளிப்படக் கூடும். ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளும் ஒரு சினிமாவில் கூட அவர் மீதான சிறு விமர்சனமோ கேலியோ இருக்காது, இருக்க முடியாது. இந்த மீம்கள் கூட அல்காரிதமை கார்ப்பரேட்டுகள் மாற்றினால் காணாமல் போய் விடக் கூடும். விஜய் மட்டுமல்ல மோடிக்கும் இது பொருந்தும். இது காட்சி ஊடகப் படைப்பாளர்கள் அடிமைகள் என்பதால் அல்ல, அந்த ஊடகமே அதன் இயல்பில் அரசாங்கத்தின் பிரச்சார ஊதுகுழலாக, சர்வாதிகாரத்தின் கருவியாக உள்ளது என்பதாலே.
The other big problem with the audiovisual medium is the extremely high cost of production. This hangs unavoidably over every producer's choice of subject matter and over the way to tell the story. The hunger for success is not a manifestation of a filmmaker's vanity, it is the prerequisite for any opportunity to make a film (or the next film). The conformity of the audiovisual medium arises not just from the need to reach the widest possible audience, it also results from the fact that as mass media with an immediate impact on huge sectors of public opinion, television and the cinema are more controlled by the state than any other media, even in the most liberal of countries. Not that they are explicitly censored, although that can happen; rather they are under surveillance, regulated and guided. They are discouraged from tackling certain issues and encouraged to be merely entertaining.
மாறாக, இலக்கியமே என்றும் மக்களாட்சி அமைப்புக்காக, சுதந்திரத்துக்காகப் போராட இயலும் என்கிறார். அறிவுஜீவிகளும் கூட இலக்கிய விமர்சனத்தின் வழியாக முற்றதிகாரத்தின் நிபந்தனைகளை ஆராயவும் எதிர்க்கவும் முடியும் என்பதற்கு அவர் வால்டர் பெஞ்சமின், கார்ல் பாப்பர் ஆகியோரை உதாரணம் காட்டுகிறார். அசலான அறிவுஜீவிகளுக்கும் படைப்பாளிகளுக்கும் தனித்து நிற்பதும், பொறுப்புணர்வுடன் செயல்படுவதே வலிமை. ஆனால் வெகுமக்கள் கலைஞர்களுக்கு அது இல்லை. அவர்களுடைய எதிர்ப்பு கூட ஒரு பொழுதுபோக்காகி மக்களைச் சிந்திக்க விடாமலே பண்ணுகிறது. உதாரணமாக, வெற்றிகரமான தலித் சினிமா சிறந்த தலித் இலக்கியத்தைப் போல கூர்மையான விமர்சனத்தை, கேள்விகளைக் கொண்டிருப்பதோ சமூகத்தைத் தொந்தரவு செய்வதோ இல்லை. அது எளிய தீர்வுகளைத் தந்து மக்களைத் தற்காலிகமாக ஆறுதல்படுத்தி விடுகிறது. விளைவாக ஏற்றத்தாழ்வுகள் இன்னும் வலுவாகின்றன.
The image of Benjamin poring over Baudelaire, while the circle of oppression which cost him his life closed in on him, is a moving one. At the same time the philosopher Karl Popper, in exile on the other side of the world, in New Zealand, began to learn ancient Greek and immerse himself in Plato in order to make his own contribution to the fight against totalitarianism. A crucial book emerged: The Open Society and its Enemies. Benjamin and Popper, the Marxist and the liberal, two engaged and original figures inside big currents of thought that they renewed, illustrate that it is possible, through writing, to oppose adversity. They show that dinosaurs can work through difficult times-and remain useful.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நந்தலாலா: உருவகக் குப்பையில் ஒரு மாணிக்கம்

 செல்வராகவனின் “ ஆயிரத்தில் ஒருவன் ” எப்படி தமிழின் முதல் மாயஎதார்த்த படமோ “ நந்தலாலாவும் ” தமிழின் முதல் உருவகப் படமே. உருவகம் மிஷ்கினின் சினிமா மொழியாக என்றும் இருந்துள்ளது. காட்சியமைப்பில் இருந்து நடிப்பு வரை உருவகத்தன்மையை கொண்டு வர அவர் எதார்த்தத்தை கத்தரிக்கிறார். ” சித்திரம் பேசுதடி ” , “அஞ்சாதே ” ஆகிய படங்களில் இருந்து நாம் இதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் தர முடியும்.