ராஜன் குறைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
ஒரு சிந்தனையாளராக நமக்கெல்லாம் பெரிய உத்வேகம் அவர். அவரது நிலைப்பாடுகளை ஏற்கிறோமே இல்லையோ அன்றாட அரசியலின் பல சிக்கல்களை கட்டவிழ்த்து விடுவதில் வல்லவர் அவர் என்பதை மறுதரப்பினரும் ஏற்றாகவே வேண்டும். அவரை மறுத்து யோசிக்க முயன்றால் கூட உங்கள் சிந்தனை துலங்க ஆரம்பிக்கும். அவரை ஏற்கிறவர்கள் கூடுதலாக தம் தர்க்கத்தை, தகவல் அறிவை வலுப்படுத்தலாம்.
அ. மார்க்ஸுடன் நான் போற்றுகிற அறிவு ஆசான்! தொடர்ந்து எங்களோடு இருங்கள்!
Comments